Kumar Sangakkara Archives - Oruvan.com

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தையும், பிரபல சட்டத்தரணியுமான எஸ்.கே.சங்கக்காரா காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சட்டத்தரணியும் மரியாதைக்குரிய சட்ட நிபுணராகவும் இருந்த சங்கக்கார, சட்ட வட்டாரங்களிலும் சமூகத்திலும் பரவலாக அறியப்பட்டவர் ஆவார்.

அவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தையும் ஆவார்.

அவரது உடல் கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறுதிச் சடங்கு நாளை மாலை 6.00 மணிக்கு கண்டியில் உள்ள மகியாவ மயானத்தில் நடைபெறும் எனவும், சடலம் மாலை 4.30 மணிக்கு வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார் appeared first on Oruvan.com.

இலங்கை அணி மாறவில்லை – தோல்வி குறித்து சங்கக்கார ஆதங்கம்
நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியின் தோல்வியால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

மேலும், அணி வீரர்களும் வேதனையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தனது சமூக ஊடகப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சரியான பாதையில் செல்வதற்கு அனைத்து மட்டங்களிலும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன என்று சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

கிரிக்கெட் உலகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அதற்கு ஏற்றவாறு மாறவில்லை என்றும், ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் செய்துவிட்டு வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரசிகர்கள் விரக்தியடைந்துள்ளனர், கோபத்திலும் உள்ளனர். வீரர்களும் மிகவும் காயப்பட்டுள்ளனர். நானும் இவ்வாறு டிரஸ்ஸிங் ரூம்களில் இருந்திருக்கிறேன். இது எளிதானது அல்ல.

ஆனால் இந்தப் பொறுப்பு ஆடுகளத்துடன் வருகிறது. உங்கள் நாட்டையும் உங்கள் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு சுமை மற்றும் ஒரு பெரிய பாக்கியமாகும்.

சரியான பாதையில் செல்ல அனைத்து மட்டங்களிலும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. நம்மைச் சுற்றியுள்ள கிரிக்கெட் உலகம் மிக விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது.

எனினும், ​​நாம் ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் செய்து வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்க முடியாது. நாங்கள் அதை மாற்றியமைத்துக் கொள்ளவில்லை” என அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் சுப்பர் 8 சுற்றில் நேற்று மோதின. இதில் நியூசிலாந்து அணி 61 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இந்த தோல்வியுடன், இலங்கை அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இலங்கை அணி மாறவில்லை – தோல்வி குறித்து சங்கக்கார ஆதங்கம் appeared first on Oruvan.com.

இலங்கை அணி படுதோல்வி – சங்கக்கார அதிருப்தி
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் சூப்பர் எட்டுச் சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்று போட்டியிட்டிருந்தன.

கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி 51 ஓட்டங்களில் தோல்வியை சந்தித்திருந்தது.

இது குறித்து, குமார் சங்கக்கார தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவில்,

இலங்கை அணியில் பந்து வீச்சாளர்கள் ஒரு திட்டத்தின் படி செயல்பட்டாலும், துடுப்பாட்ட வீரர்களிடம் இருந்து அத்தகைய திட்டமிடல் எதுவும் காணப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முழு அணியும் மிகவும் மோசமான ஆட்ட பாணியை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமில் மிஷாராவின் விளையாட்டு பாணி உயர் மட்டத்தில் இல்லை என்று சங்கக்கார தனது பதிவில் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கையின் தோல்விக்கு முக்கிய காரணம், ஆடுகளத்தின் தன்மை மற்றும் போட்டியின் தற்போதைய சூழ்நிலையை துடுப்பாட்ட வீரர்கள் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறியதே என்று சங்கக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

The post இலங்கை அணி படுதோல்வி – சங்கக்கார அதிருப்தி appeared first on Oruvan.com.

2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் – அரையிறுதியில் மோதும் இலங்கை அணி
2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணியும், பிரையன் லாரா தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணியும் மோதவுள்ளது.

ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்க உள்ளது.

இதேவேளை, இந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது.

இதில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவுசெய்திருந்தது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களை குவித்திருந்தது.

யுவராஜ் சிங் 30 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றிருந்தார். அணித் தலைவர் சச்சின் டெண்டுல்கர் 30 பந்துகளில் 42 ஓட்டங்களை குவித்திருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 18.1 ஓவர்களில் 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

The post 2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் – அரையிறுதியில் மோதும் இலங்கை அணி appeared first on Oruvan.com.