Kilinochchi Archives - Oruvan.com

படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (03.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை இன்று சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி விடுவிப்புக்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் மற்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

பாதுகாப்புத் தரப்பினரால் நிர்வகிக்கப்படும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாகவும் ஆளுநரால் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், பாதுகாப்புத் தரப்பினர் கடந்த காலங்களில் வழங்கிய ஒத்துழைப்புக்கள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

The post படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்! appeared first on Oruvan.com.

கிளிநொச்சியில் பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு
கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாம்பு கடிக்கு இலக்கான இளைஞனை உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

The post கிளிநொச்சியில் பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

கிளிநொச்சியில் டிப்பர் வானகம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளது.

சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை பொலிஸார் மறிக்க முற்பட்டபோது நிறுத்தாது குறித்த வாகனம் பயணித்துள்ளது.

பரவிப்பாஞ்சான் வீதியூடாக செல்ல முற்பட்ட குறித்த டிப்பர் வாகனத்தை துரத்திச்சென்று பொலிஸாரால் ஐந்து தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பிச்சென்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கிளிநொச்சியில் டிப்பர் வானகம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு! appeared first on Oruvan.com.

கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – ஐந்து பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது
கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்றின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை நடத்தி சந்தேக நபரொருவரை அதிகாரிகள் கைது செய்ய முற்பட்டனர்.

இதன்போது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று இந்தக் குழுவினரை கைது செய்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 16 முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களும், 26 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண் சந்தேகநபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

The post கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – ஐந்து பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது appeared first on Oruvan.com.

கிளிநொச்சியில் பொலிஸாரின் உதவியுடன் நாளாந்தம் சட்டவிரோத மணல் அகழ்வு
கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன், தட்டுவன்கொட்டி, பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸாரின் உதவியுடன் நாளாந்தம் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலை தொடர்வதால் பல கிராமங்களில் மக்கள் குடிபெயரும் நிலையேற்படும் என பல்வேறு பொது அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவது தொடர்பில், தொடர்ச்சியான முறைப்பாடுகள் மாவட்ட உயர்மட்ட அரச அதிகாரிகள் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஆகியவற்றிற்கு பிரதேச பொது அமைப்புகள் தொடர்சியாக முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் குஞ்சுப்பரந்தன், கல்லாறு ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினுடைய தலைவரும், கடத்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் நேரடியாக சென்றும் பார்வையிட்டு இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் எந்த விதமான முன்னேற்றங்களும் இதுவரை ஏற்படவில்லை என பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.

தற்போது இரணைமடுக்குளத்தின் கீழான கனகராயன், ஆறு பன்னங்கண்டி மற்றும் செருகன் கல்லாறு தட்டுவன்கொட்டி போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வுகழ்வுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும் அரசியல் பின்புலத்தை உடையவர்கள் கிளிநொச்சி – தருமபுரம் கிளிநொச்சி – பூநகரி ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் குறிப்பிட்ட சில பொலிஸ் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவில் பணியாற்றும் குறிப்பிட்ட சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோரின் துணையுடனே குறித்த இடங்களில் அகழ்ந்தெடுக்கப்படும் மணல் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கினாலும் உடனடியாக தகவல் வழங்குபவர்களின் விபரத்தை பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கி செல்கின்ற நிலைமையும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகவே இவ்வாறு தொடரும் இயற்கை வளங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து மணல் அகழ்வதற்கான அனுமதிகளோ அல்லது வழித்தட அனுமதிகளோ இல்லாத நிலையில் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பலரும் கூறுகின்றனர்.

The post கிளிநொச்சியில் பொலிஸாரின் உதவியுடன் நாளாந்தம் சட்டவிரோத மணல் அகழ்வு appeared first on Oruvan.com.

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யூனியன் குளம் பகுதியை சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த 24ஆம் திகதி வெளிநாட்டுக்கு பயணமாக இருந்த நிலையில் , ஐந்து தினங்களுக்கு முன்னரான 19ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன மகனை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி அக்கராஜன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் உறவினர்களும் இளைஞனை தேடி வந்தனர்

இந்நிலையில் இளைஞனின் வீட்டில் இருந்து சுமார் 02 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டினுள் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வந்த அக்கராஜன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

The post கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு appeared first on Oruvan.com.

கிளிநொச்சியில் ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி
கிளிநொச்சி ஏ9 வீதியில் கரபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இன்று(29) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்து பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக உள்ள தரிப்பிடத்தில் நிறுத்திய போது பின்னால் வந்த ரிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதே வேளை டிப்பருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடதிலேயே பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களிடம் கசிப்பு காணப்பட்டதாக தெரிவித்த பொலிஸார். காயமடைந்து காணப்பட்டவரை அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு கூடியிருந்த பொது மக்கள் நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததோடு, புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர்.

பின்னரே நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து படுகாயமடைந்த நபரை வைத்தியசாலைக்க அனுப்பி வைத்ததோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனத் தெரிவித்தனர்.

The post கிளிநொச்சியில் ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி appeared first on Oruvan.com.

ஐநாவிற்கு சொல்ல வேண்டி செய்தியை சரியான விதத்தில் சொல்வோம் – எம்.ஏ.சுமந்திரன்
தமிழ் மக்கள் மீதான இனவன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சொல்ல வேண்டிய செய்தியை நாங்கள் சரியான விதத்தில் சொல்லுவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணிமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்ட விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கை நாடாளுமன்றத்தினால் பதவியில் இருந்த தேசபந்து தென்னக்கோனை பதவி விலக்குகின்ற பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

அதிகாரிகளை பதவியிலிருந்து விலக்குகின்ற சட்டம் முதன் முதலில் பாவிக்கப்பட்டிருக்கின்றது.

இது 17 வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதாவது அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டதன் பின்பு அந்த அரசியலமைப்பு பேரவையினால் பதவியில் அமர்த்தப்படும் இரண்டு அதிகாரிகளான சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபர் இவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான வழிமுறை ஒன்று இச்சட்டத்திலே கொடுக்கப்பட்டுள்ளது.

இருபது வருடங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த இந்த சட்டம் முதன்முறையாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஆகவே இது ஒரு முக்கியமான விடயம். சுயாதீனமான இந்த பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் வேறு விதமாக பதவி நீக்கப்பட முடியாது.

இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது ஒருவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. அரசாங்கம் எதிர்க்கட்சி என்ற பிரிவினை இல்லாமல் வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.

குறிப்பாக சிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கும்போது நாடாளுமன்றம் இரண்டாகப் பிரிந்தது அந்தப் பதவி நீக்க பிரேரணையானது தவறான முறையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஆட்சி மாற்றத்தின் பின் தவறான பிரேரணை என்ற அடிப்படையில் அவர் மீளவும் பதவியில் அமர்த்தபட்டார்.

இம்முறை சுயாதீன பதவியில் உள்ள ஒருவர் எதேச்சதிகாரமாக பதவி நீக்கப்படாமல் விசாரணை குழு அறிக்கையினை வைத்து அதனை நாடாளுமன்றத்தில் விவாதித்து மிகப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இதேவேளை தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஐநாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ள நிலையில் அக்கடிதத்தில் தமிழரசுக்கட்சி கையொப்பமிடுமா? என்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் என்பதல்ல அந்த கடிதம் எதற்காக செய்யப்படுகின்றது என்று விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றார்கள்.

கையொப்பமிடாத தரப்புகள் எல்லாம் தங்களுடைய பெயர்களை அதிலே இணைத்து விட்டார்கள் என்றெல்லாம் குறிப்பிடுகின்றார்கள்.

தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் அதனோடு ஈடுபடாமல் இருப்பது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகின்றோம்.

எங்களுடைய கூட்டத் தீர்மானத்தின் படி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு நாங்கள் சொல்லுகின்ற செய்தி சரியான முறையில் தெரிவிப்போம். உரிய நேரத்திலே அதனை செய்வோம் என்ற முடிவை எடுத்திருக்கின்றோம்.

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலே தமிழரசு கட்சி தவறான நிலைப்பாடுகளை கொண்டிருக்காமல் பொதுவான நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோம்.

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற மனித என்புத் தொகுதிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன வன்முறைகள் போர் குற்றங்கள் தொடர்பில் நாங்கள் சர்வதேச பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறி சர்வதேச ஈடுபாட்டை நாங்கள் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

The post ஐநாவிற்கு சொல்ல வேண்டி செய்தியை சரியான விதத்தில் சொல்வோம் – எம்.ஏ.சுமந்திரன் appeared first on Oruvan.com.

சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் 100 நாள் போராட்டம்
சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்துள்ள 100 நாள் போராட்டம், கிளிநொச்சியில் ஆரம்பமானது.

இச்செயற்திட்டத்தின் முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு கிளிநொச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி “அடையாளப்படுத்தப்பட்ட 100 நாள் செயல்முனைவு“ என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு, மாகாணத்திற்குள் மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வினை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று முதல் நவம்பர் மாதம் 8ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு சுழற்சி முறையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

The post சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் 100 நாள் போராட்டம் appeared first on Oruvan.com.

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் பதற்றம்!! பெண் ஒருவர் பலி
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் இன்று (31) பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால் தாக்கப்பட்டார். இதனால் சற்று பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

The post கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் பதற்றம்!! பெண் ஒருவர் பலி appeared first on Oruvan.com.