karuna Archives - Oruvan.com

பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையானது – கருணா ஆதங்கம்
பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும் என முன்னாள் பிரதியமைச்சரும், தமிர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இல்லாத பிரச்சனையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர் நிரபராதியாக வெளிய வந்தார். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது?

அதேபோன்று தான் தற்போதும் அவருக்கு நடந்துள்ளது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழர்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

கிழக்கு மாகாணத்திலே முதன் முதலாக மாகாண சபையைக் கட்டி எழுப்பி அதிலே முதல் முதலமைச்சராக பிள்ளையான் பதவி வகித்து அதனுடாக பாரிய அபிவிருத்திகளை செய்திருந்தார்.

அதன் பின்னர்தான் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து அபிவிருத்திகளும் கிழக்கில் இடம்பெற்றன. பின்னர் நான் மத்திய அரசாங்கத்தில் இருந்து கொண்டு பல வீட்டுத்திட்டங்களையும், வீதிகள், பாலங்கள், என பல அவிருத்திட்டங்களை செய்திருந்தேன்.

அதுபோல் வியாழேந்திரன் அவர்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தபோது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்திருந்தார்.

இவ்வாறு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்து விட்டுதான் நாங்கள் தற்போது இந்த உள்ளுராட்சி மன்றத்தில் நமது பிரதிநிதிகளை களம் இறக்கி இருக்கின்றோம்.

எனவே மக்கள் தற்போது கிடைத்திருக்கின்ற வாய்ப்பை தவற விடக்கூடாது. ஏனெனில் பல பிரச்சனைகள் நம் மத்தியில் காணப்படுகின்றன. ஒரு நபர் வயல் செய்வதற்காக பல மக்கள் பாவிக்கின்ற குளத்தை உடைக்கின்றார்கள்.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் ஒருவரும் சென்று அதனை பார்வையிடவில்லை. இவ்வாறானவர்கள் நமக்கு எதற்கு? தேர்தல் காலத்தில் மேய்சல் தரைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என தெரிவிப்பார்கள்.

தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்தப் பக்கமே அவர்கள் போகவில்லை. இவர்களை நம்பி வாக்களித்ததுதான் மீதமாக உள்ளது, இதற்காக வேண்டித்தான் நாம் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

இதனை எமது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான ஒரு அத்திவாரம் தற்போது போடப்பட்டுள்ளது. மக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருந்து செயல்பட வேண்டும்.

தவறான பிரசாரங்களை எடுத்து விடுவார்கள், இதனை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது. தற்போது நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும், இதனை ஏனையோருக்கும் தெளிவாக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தில் ஓர் விதி போன்று ஒன்று உள்ளது. அரசாங்கம் மாறி மாறி வருகின்ற போது முன்னை அரசாங்கத்தில் இருப்பவர்களை பிடித்து கைது செய்வது விதி போன்ற உள்ளது.

தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் அடுத்த முறை வருகின்ற அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு அனைவரும் உள்ளே அனுப்பப்படுவார்கள். நானும் உள்ளே இருந்து வந்தவன்தான், இவை அனைத்தும் அரசியல் பழி வாங்கல்கள்.

இவை எமது மக்களையும் எமது இருப்புக்களையும் ஒருபோதும் பாதிக்கப் போவதில்லை. இதை பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் எவ்வகையான தியாகங்களை செய்தவர்கள் என்பதை எனது மக்கள் சிந்திக்க வேண்டும்.

பிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும். ஏற்கனவே இல்லாத பிரச்சனையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர். அப்போது நிரபராதி என வெளிய வந்தவர்.

அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது. அது போன்றுதான் தற்போதும் அவருக்கு நடைபெற்று இருக்கின்றது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழர்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து எமது உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது கிழக்கு மாகாணத்திற்குரிய ஒரு அத்திவாரமாகும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பது கிழக்கு மாகாண மக்களுக்காக முதன்முதலாக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அக்கட்சியின் சின்னம்தான் படகு சின்னமாகும். அதன் ஊடாக கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.

அம்பாறை மாவட்டத்திலேயே 60 கிராமங்கள் இல்லாமல் போய்விட்டது. மட்டக்களப்பில் தளவாய்க் கிராமமும் இல்லாமல் போய்விட்டது. அதற்கு எல்லாம் துணிந்தவன் முன்வர வேண்டும்.

நாங்கள் துணிந்துதான் நிற்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லை. அவர்களுக்கு தலைவரும் இல்லை. தலைமை போட்டிக்கு வழக்கு வைத்து ஆளுக்கு ஆள் சண்டை பிடிக்கிறார்கள்.

வடக்கு மக்கள் அவர்களை விரட்டியுள்ளார்கள். அவர்களை, கிழக்கிலும், விரட்டி அடிக்க வேண்டும். அவர்கள் அரசாங்கத்தின் முகவர்களாக இருந்து செயற்பட்டவர்கள். இதனை வடக்கு மக்கள் நன்கு அறிந்துவிட்டார்கள்.

கிழக்கு மாகாண மக்களும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை நான் கூறிக் கொள்கின்றேன். ஆகவே எமது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையானது – கருணா ஆதங்கம் appeared first on Oruvan.com.

பிரித்தானியாவின் தடை குறித்து கருணா அம்மான் பேச்சு
எமது கூட்டமைப்பை கண்டு “வற்றிய குளத்தில் சுங்கான் மீன் கொதிப்பது போல் கொதித்துக் கொண்டிருக்கின்றார்கள்” குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவர்களும் கொதிக்கின்றார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கல்குடா தொதியில் அமைந்துள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று வியாழக்கிழமை(27.03.2025) கிரான் ரெஜி மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

உள்ளுராட்சி மன்ற தேர்தல் எம்மைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. ஏனெனில் நாங்கள் ஒரு கூட்டணியாக இணைந்து கொண்டு இந்த தேர்தலை சந்தித்து இருக்கின்றோம். இதில் ஒவ்வொரு வேட்பாளர்களும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய அபிப்பிராயமாகும். அதற்கான அனைத்து பின்னணி ஒத்துழைப்புகளையும் நாங்கள் வழங்குவோம். தற்போது எமது கூட்டமைப்பு கூட்டப்பட்டதன் பிற்பாடு அதனை பொறுத்துக் கொள்ள முடியாத பலர் கலக்கமடைந்திருக்கின்றார்கள்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களில் அனைவரும் இல்லை குறிப்பிட்ட சிலர் கொதிக்கின்றார்கள். வெளிநாடுகளில் வீதிகளிலே இருப்பவர்கள் தான் இவ்வாறு கொதிக்கின்றார்கள். அவர்களுக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றன.

அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுடைய தோல்விக்கான அத்திவாரத்தை நாங்கள் இட்டுள்ளோம். முதலில் தோற்கடிக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே. ஏனெனில் போலி தேசியத்தை பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி அதிக அளவு இலஞ்சம் ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர்.

எமது கூட்டமைப்பில் வேட்பாளர்களாக உள்ளவர்களுக்குத்தான் மக்களின் தேவைகளும் பிரச்சனைகளும் நன்கு தெரியும். இதிலிருந்து தெரிவு செய்யப்படுகின்றவர்கள்தான் உண்மையிலேயே எமது மக்களை ஆள வேண்டும். அதற்காக வேண்டிதான் நாங்கள் தற்போது இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இன்று பரந்துபட்ட அடிப்படையில் எமது கூட்டமைப்பு உலகளாவிய ரீதியில் பேசுபொருளாகி இருக்கின்றது.

பிரித்தானிய அரசாங்கம் கருணா அம்மனுக்கு தடை விதித்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளிவந்திருக்கின்றது. நாங்கள் பிரித்தானியா அரசாங்கத்திடம் என்ன கேட்க போகின்றோம். இதுவரை காலம் இல்லாத தடை நாங்கள் கூட்டுச் சேர்ந்தவுடன் தடை விதித்துள்ளார்கள். உண்மையாகவே மக்களுக்கு தெரியும் இவை அனைத்தும் அரசியலுக்கான ஒரு நாடகமாகும்

1986 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்தினால் நான் கைது செய்யப்பட்டு சிறையிலும் இருந்திருக்கின்றேன். சுமார் 08 மாதங்கள் சிறையில் இருந்திருக்கின்றேன்.  அப்போது கண்டுபிடிக்காத குற்றச்சாட்டை இப்போதுதான் பிரித்தானிய அரசாங்கம் கண்டுபிடித்து இருக்கின்றது. பிரித்தானிய எவ்வாறான அரசாங்கம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவைகள் அனைத்தும் தமிழர்களுடைய குறிப்பாக கிழக்குத் தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கையாகும். கிழக்கு மாகாண சபையை நாங்கள் தவற விடுவோமாக இருந்தால் இன்று இஸ்லாமியர்களின் ஆதிக்கம் வளர்ச்சி அடைந்து தமிழர்களுடைய இருப்புக்கள் நிலப்பிரதேசங்கள் அனைத்தும் குட்டி சுவராக்கப்படும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பற்றி மக்களுக்கு தெரியும் கல்முனை மாநகர சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து தான் ஆட்சி அமைக்கும் என ஒரு உடன்பாட்டுக்கு சென்று இருக்கின்றார்கள். இது போன்றுதான் கடந்த காலத்தில் கிழக்கில் 11 ஆசனங்களை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எட்டு ஆசனங்களை பெற்ற முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சரை கொடுத்திருந்தது இவர்கள்தான் தற்போது தேசியக் கதைக்கின்றார்கள். இதன் பின்னடைவை நாங்கள் பார்க்கின்ற போது நாங்கள் தனி தமிழ் தரப்பாக வருகின்ற கிழக்கு மாகாண சபையை நாங்கள் கைப்பற்றலாம் .

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்கள் அனைவரும் எங்கள் பக்கம்தான் இருக்கின்றார்கள். குறிப்பாக 70 வீத மக்கள் எமது பக்கம்தான் இருக்கிறார்கள். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்தான் வாய்க்கு வந்தபடி கதைக்கின்றார்கள்.

ஆகவே வெற்றியை நிலை நாட்டுவதற்காக ஒவ்வொரு வேட்பாளர்களும் செயற்பட வேண்டும்” என்றார்.

The post பிரித்தானியாவின் தடை குறித்து கருணா அம்மான் பேச்சு appeared first on Oruvan.com.