Kalmunai Archives - Oruvan.com

அம்பாறையில் கால்வாயில் கார் வீழ்ந்தது – மூவர் உயிரிழப்பு
வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மூவரும் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்றப்பகுதியில் இன்று(27) முற்பகல் இடம்பெற்றது.

இதன் போது அனர்த்த முகாமைத்துவத்தில் ஈடுபடும் குழுவினர் சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த செயலணி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட மீட்புப்பணியின் போது கால்வாயில் வீழ்ந்த கார் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் காரில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் மீட்கப்பட்டு வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த காரில் ஆண் பெண் சிறுமி என மூவர் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வாறு அனுமதிக்கப்பட்ட மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post அம்பாறையில் கால்வாயில் கார் வீழ்ந்தது – மூவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி கைது
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பாதிக்கப்பட்ட பெண் தனது வழக்கு ஒன்றிற்காக குறித்த அலுவலகத்திற்கு சென்று வந்த நிலையில் தன்னிடம் இலஞ்சமாக பணம் கேட்கப்படுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கடந்த மாதம் முறைப்பாடளித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய நேற்று மாறுவேடத்தில் மருதமுனை பகுதியில் இயங்கி வந்த காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் அருகில் அதிகாரிகள் காத்திருந்துள்ளனர்.

இதன்போது முறைப்பாட்டினை வழங்கிய பெண் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியிடம் சென்று குறித்த இலஞ்ச பணத்தை தருவதாக கூறி ரூபா 300 ரூபாவை நீதிபதியின் மனைவியிடம் வழங்கியுள்ளார்.

இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிபதி மற்றும் மனைவியை கைது செய்ததுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

The post இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி கைது appeared first on Oruvan.com.