JVP Archives - Oruvan.com

நாட்டுக்குப் பொருத்தமான கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டு வாருங்கள் – நாமல் எம்.பி கோரிக்கை
ஜனாதிபதி ஆணவத்தால் எடுக்கும் முடிவுகள் தேசத்திற்கோ, அதன் மக்களுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ நீதியை வழங்குவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு ஏற்ற கல்வி சீர்திருத்தங்கள் நாட்டுக்கும் ஏற்றவை என்று ஜனாதிபதி நம்பினால், அவர் முற்றிலும் தவறு என்று திரு. ராஜபக்ஷ கூறினார்.

முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் நாட்டிற்குப் பொருத்தமானவை அல்ல என்பதை ஜனாதிபதியின் உரை காட்டுகிறது என்றும், ஆனால் அரசாங்கம் அவற்றைச் செயல்படுத்தத் தயாராக உள்ளது என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நாட்டுக்குப் பொருத்தமானதும் அவசியமானதுமானவற்றை மட்டுமே செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் என்றும், ஆணவத்தால் எடுக்கப்படும் முடிவுகள் தேசத்திற்கோ, அதன் மக்களுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ நீதி வழங்காது என்றும் அவர் கூறினார்.

கல்வி முறையிலும் அரசு இயந்திரத்திலும் மாற்றங்களின் அவசியத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பொதுமக்களும் அங்கீகரிப்பதாக அவர் கூறினார்.

இருப்பினும், அறிமுகப்படுத்தப்படும் எந்தவொரு சீர்திருத்தங்களும் நாட்டிற்கு இசைவானதாக இருக்க வேண்டும், மக்கள் விடுதலை முன்னிணிக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் கல்வி முறைக்கு பொருந்தாத கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகளுக்கு அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post நாட்டுக்குப் பொருத்தமான கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டு வாருங்கள் – நாமல் எம்.பி கோரிக்கை appeared first on Oruvan.com.

இலங்கையின் வளர்ச்சித் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக சீனா உறுதி
இலங்கையின் வளர்ச்சித் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக சீன வெளியுறவு அமைச்சர், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிடம் வலியுறுத்தினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் டில்வின் சில்வா சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அவர் சீன வெளியுறவு அமைச்சர் லியூ ஜின்தாவோ உள்ளிட்ட உயர் அதிகாரிகளையும் சந்தித்தார்.

இந்த சந்திப்பு நாட்டின் வெளியுறவுத் துறையின் தலைமையகத்தில் நடைபெற்றது.

சீனாவும் இலங்கையும் எட்டப்பட்ட புரிந்துணர்வுக்கு ஏற்ப செயற்படும் என டில்வின் சில்வா கூறினார்.

இந்தக் கலந்துரையாடலில் சீன பிரதி வெளியுறவு அமைச்சர் , மற்றும் பிரதி அமைச்சர்கள் எரங்க குணசேகர முனீர் முலாஃபர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டது.

The post இலங்கையின் வளர்ச்சித் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக சீனா உறுதி appeared first on Oruvan.com.

தனக்கு எதிராக ஜேபிவி எடுத்த இனவாத மூலதனத்தை தற்போது கையில் எடுக்க முயற்சிக்கும் ரணில்
அநுர, புரிந்து கொள்வார் — ரணில், சமஸ்டி தருவார் — சஜித் நல்லவர் — என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, காலத்துக்கு காலம் மாறி மாறி சிங்கள தலைவர்கள் பின்னால் செல்லும், தமிழர்கள், புரிந்து கொள்ள வேண்டி யதார்த்தம்?

லண்டனில் பாகிஸ்தான் தூதரகம் தாக்கப்பட்ட பின்னணியில், லண்டன் நகர வீதி ஒன்றில் இந்தியா – பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் தேசியக் கொடியை வைத்துக் கொண்டு வாக்குவாதம் புரிகின்றனர்.

காஷ்மீரில் நடந்த தாக்குதலில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்ட பின்னர் இந்த மோதல் ஆரம்பித்திருக்கிறது எனலாம்.

இப்போது கேள்வி என்னவென்றால்–

1) காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஏன் பாகிஸ்தான் உதவி புரிகிறது?

2) பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண விடுதலை இராணுவத்துக்கு ஏன் இந்தியா ஒத்துழைக்கிறது?

எந்த ஒரு இனத்திற்கும் ”தேசியம்” என்பது அடையாளம். அது மரபுரிமை.

ஆனால் ஒரு தேசிய இனம் ”அரசு” என்ற சர்வதேச அந்தஸ்தை பெற்று விட்டால், தனது நாட்டுக்குள் வாழும் ஏனைய அரசு அற்ற தேசிய இனங்களை, அந்த அரசு ஒடுக்கும்.  அதற்கு ஏனைய அரசுகள் ஒத்துழைப்பு வழங்கும். இதுதான் யதார்த்தம்.

இந்த யதார்த்தத்துக்கு ஒத்தூத, ஐக்கிய நாடுகள் சபை – மனித உரிமைச் சபை – சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச அமைப்புகளும் உண்டு.

இந்த அமைப்புகள் ஒரு அரசு சார்ந்தே தமது அறிக்கைககளை வெளியிடும். தமது தேவைக்கு ஏற்ப ஒப்பாரசத்துக்காக  அரசு அற்ற இனம் ஒன்றின் உரிமைகள் பற்றிய கருத்துக்களையும் அவ்வப்போது அறிக்கையில் சேர்க்கின்றன.

ஆனால், அதனையும் ”மனித உரிமைகள்” – ”மீள் நல்லிணக்கம்” என்ற பொருள்களில் மாத்திரமே அறிக்கையிடுவர்.

”தேசிய இனம்” என்று அறிக்கையின் எந்த இடத்திலும் அந்த அர்த்தம் வராதவாறு மிக நுட்பமாக அவதானிப்பர்.

ஈழத்தமிழர் விவகாரம் பற்றிய ஜெனிவா மனித உரிமை சபையின் அறிக்கை அதற்கு நல்ல உதாரணம்.

ஆகவே, உலகில் இன்று பிரச்சினை இதுதான். ஆனால் என்னவோ ”இயற்கை நீதி” என ஒன்று உள்ளது.

அது இப்போது உலக நாடுகளுக்கு, அதாவது அரசு அற்ற தேசிய இனங்களை ஒடுக்கும் அரசுகளுக்கு ஏதோ ஒரு வகையில் பாடம் கற்பித்து வருகிறது.

சமீபத்திய உதாரணங்கள் பல உண்டு அவற்றில்—

1) இந்தியா – பாகிஸ்தான் மோதல்.

2) அமெரிக்க வரியும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் முரண்பாடும்- அதாவது ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் உலக அரசியல் – பொருளாதார ஒழுங்கு குழப்ப நிலைகள்.

3) ஹமாஸ் இயக்கத்துக்கு எதிரான இஸ்ரேலின் சதிக் கோட்பாடுகள் அம்பலத்துக்கு வருகின்றமை.

4) ரசிய உக்ரெயன் மோதலும், ஐரோப்பிய நாடுகளின் பின்னடைவும். அமெரிக்க – ரசிய உறவு அல்லது அமெரிக்க – சீன மோதல். இதற்கு இந்தியாவின் இரட்டை வகிபாகம்.

இந்தியாவின் இந்த ”இரட்டை வகிபாகம்” இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு சாதகமான ஒன்று.

ஆகவே, உலக அரசியல் ஒழுங்கு குழப்பங்களை மையப்படுத்தி அநுர பெறவுள்ள சாதகங்களை தமக்குரியதாக மாற்ற —ரணில் – ராஜபக்ச – சஜித் போன்ற சிங்களத் தலைவர்கள் புதிய வியூகம் ஒன்றை, தத்தமது கட்சி அரசியலுக்கு ஏற்ப வகுக்கிறார்கள்.

இன்னும் சில மாதங்களில் புதிய திருப்பங்கள் – மாற்றங்களை அறியலாம்.

உதாரணமாக, உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரங்களில் அநுர வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதிக நேரம் செலவிடுவதை, ”தமிழர்களுக்கு ஆதரவான ஜேவிபி” என்று சிங்கள சமூக ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

அதாவது ஜேவிபியை நம்பி இடமாற்றம் செய்யப்பட்ட ”தூய இனவாதம்” என்பதை மீண்டும் வெறொரு தளத்திற்கு இடம் மாற்றும் முயற்சி ஆரம்பமாகியுள்ளது.

தனக்கு எதிராக ஜேபிவி எடுத்த ”இனவாத மூலதன ஆயுதம்” என்பதை கையில் எடுக்க ரணில் முயற்சிக்கிறார் என்பதே தற்போது கசிந்துள்ள தகவல்.

ஆகவே, 2009 மே மாதத்துக்குப் பின்னரான சூழலில் அநுர, புரிந்து கொள்வார்— ரணில், சமஸ்டி தருவார் — சஜித் நல்லவர் — என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு காலத்துக்கு காலம் மாறி மாறி சிங்கள தலைவர்கள் பின்னால் செல்லும் தமிழர்கள், இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

அ.நிக்ஸன்

The post தனக்கு எதிராக ஜேபிவி எடுத்த இனவாத மூலதனத்தை தற்போது கையில் எடுக்க முயற்சிக்கும் ரணில் appeared first on Oruvan.com.

ஜேவிபி மனோரீதியாக வன்முறையைக் கைவிடவில்லை- விளக்கமளிக்கிறார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்!
ஜேவிபி தலைமையிலான அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் மனோரீதியாக வன்முறையைக் கைவிட்டுள்ளார்கள் என்பதை தான் நம்பவில்லை எனவும் செயல் ரீதியாக உடைமாற்றம் செய்துள்ளதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், வடமாகாண முன்னாள் ஆளுநருமான கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஒருவன்” செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்விடயத்தை வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது பெயர் மாற்றம் செய்து அதிகளவான மக்கள் ஆணையைப் பெற்றாலும் கூட அது ஒரு பெயர் மாற்றம் மாத்திரம் தானா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தை ஒரு இரவில் எரித்து கைப்பற்றுவோம் எனக் கூறிய கட்சி தான் இந்த ஜேவிபி எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அநுர அரசாங்கம் சர்வதேசத்தின் கைபெ்பொம்மையாக மாறிவிடுமா என்ற அச்சம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி கட்சியானது தனது திட்டங்களிலும், கொள்கைகளை கடைப்பிடிப்பதிலும் உறுதியாக இல்லை என்பது தற்போது தெளிவாகிறது.

சுமார் மூன்று ஆண்டுகளாக நாடு பல நெருக்கடிகளையும் சவால்களையும் தொடர்ச்சியாக சந்தித்து வந்த நிலையில் நாட்டிற்கு உரிய ஒரு அஸ்திவாரம், அடித்தளம் இப்போது வரையில் சரியாக அமையவில்லை.

அதற்கான காரணம் சுமார் 76 வருடங்களாக ஊழல்வாதிகள் மாறி மாறி ஆட்சியமைத்தமையே ஆகும்.

ஒரு வகையில் இலங்கை அபிவிருத்தி அடைந்திருந்தாலும் கூட அந்த அபிவிருத்திகளின் பின்னணியில் பல ஊழல் மோசடிகள் தான் மறைந்து கிடக்கின்றன.

இவ்வாறான காரணங்கள் தான் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு வித்திட்டது.

மாபெரும் மக்கள் போராட்டமாக அது வளர்ந்தது. அன்று எப்படி நாட்டு மக்கள் போராட்டக் களத்தில் ஒன்றிணைந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியை ஆட்சிக் கதிரையில் இருந்து துரத்தினார்களோ அதே மக்கள் சக்தி தான் இன்று பல ஆண்டுகளாக ஆயுத இயக்கமாக இருந்த ஒரு இயக்கத்துடன் சார்ந்த கட்சியை அதே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கதிரையில் அமர்த்தியது.

ஆக, மக்கள் அதிகாரம் என்பது தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ளது.

2024ஆம் ஆண்டு இலங்கை மக்களுக்கு மாற்றத்திற்கு வித்திட்டது. அந்த விதை 2025ஆம் ஆண்டில் வேரூன்றிய விருட்சமாகுமா அல்லது வாடிவிடுமா என்ற கேள்வி அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது.

அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கமும் விமர்சிப்பவர்களை விமர்சித்து எதிர்க்கட்சிகளைப் போல குற்றம் சுமத்தி வருகிறது.

தேர்தல் மேடைகளில் வழங்கும் அனைத்து வாக்குறுதிகளையும் ஆட்சிக் கதிரையில் அமர்ந்து நிறைவேற்ற முடியுமா? அது நடைமுறைக்கு சாத்தியமாக அமையுமா என்பது தொடர்பில் கலாநிதி சுரேன் ராகவனிடம் கேள்வி எழுப்பினோம்.

அதற்கு அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இருதயத்தில் இந்த நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அவா உள்ளதை தான் நம்புவதாக தெரிவித்தார்.

சாதாரண ஒரு மனிதனாக இருந்த ஒருவர் ஜனாதிபதியாக உள்ளமை மகிழ்ச்சி. இருப்பினும் அவரது ஆட்சியின் ஆரம்பத்தில் விட்ட பிழையை மறுக்க முடியாது. ஒரு அரசாங்கத்தின் முதலாவது நியமனம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனினும் அவருடைய அந்த முதல் நியமனத்தை தவறாக தான் பார்க்கிறேன் ஏனெனில் அவருடைய அந்த நியமனத்தில் அரசியல் ஞானம் இல்லை என கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் அனுபவின்மை வெளிப்பட்டது மாத்திரமன்றி சபாநாயகர் விடயத்திலும் அரசாங்கம் விட்ட பிழை மாறாத கரையாக படியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அநுர அரசாங்கத்தின் ஒரு கறுப்பு புள்ளியாக சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா பார்க்கப்படுகிறது.

போலியான கல்வித் தகைமைகளை மக்களுக்கு காட்டியது மட்டுமன்றி அதனை நிரூபிப்பதாக வாக்குறுதியளித்து இன்று வரையில் அதை நிரூபிக்க முன்வரவில்லை. ஆக, இவ்விடயம் அநுர அரசாங்கத்திற்கு அரசியல் ஞானம் இல்லை என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறான பின்னணியில், இலங்கையின் 76 வருட கால ஆட்சியமைப்பை மாற்றியமைக்கும் விதத்தில் வரலாற்றில் இடம்பிடித்த அறுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியானது உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளில் அதிக அவதானத்திற்கு உள்ளான ஒரு விடயம் ஆகும். தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இருந்தே ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு, அதற்காக பல வெளிநாடுகளிலும் சென்று பிரசாரத்தை மேற்கொண்ட தேர்தல் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க சர்வதேசத்தில் அவதானிக்கப்பட்டார்.

ஆகவே, அநுர சார்ந்த தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறிய பின் அவர்கள் மீதான சர்வதேசத்தின் அவதானம் இன்னுமும் மும்முரமாகியது. அநுரவின் கொள்ளை விளக்க உரையில் ஆரம்பித்து அவருடைய முதல் சர்வதேச பயணம் வரையில் அதிக அவதானங்கள் அநுர மீது செலுத்தப்பட்டன.

அதில் மிக முக்கியமான இரு நாடுகளாக இந்தியா, சீனா ஆகியவை காணப்பட்டன.

தேசிய மக்கள் சக்தியின் ஆரம்பமான ஜேவிபியின் வரலாறு இந்தியாவுடன் சார்பானதாக எப்போதும் இருந்ததில்லை. எனினும், சீன கம்யூனிஸ்ட் கொள்கைகளை கையாண்டு வந்த ஜேவிபியின் நவீன கட்சி தேசிய மக்கள் சக்தி தலைவரின் முதலாவது சர்வதேச பயணம் இந்தியாவுடன் அமைந்திருந்தமை மேலும் ஒரு குழப்ப நிலையை உருவாக்கியது.

அண்மையில் அரச ஊடகங்களை சீன ஊடகக் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து, இந்த குழப்பம் இன்னுமும் மேலோங்கியது.

தற்போதைய ஜனாதிபதிக்கும் அமெரிக்காவுக்கும் நல்ல நட்பு உள்ளதாகவும், அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்க தயார் என்பதும் தெளிவாகிறது எனவும் சுரேன் ராகவன் கூறினார் . ஆக, இதன் விளைவாக ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் சர்வதேசத்தின் கைப்பாம்மையாக மாறிவிடுமோ என்ற அச்சம் உள்ளதாகவும் அவர் பகிரங்கப்படுத்தினார்.

தான் எந்தப் பாதையிலே பயணிக்கின்றோம் என்பதில் திட்டமும் நோக்கமும் இல்லாத ஒருவரால் விபத்து மாத்திரமே ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கட்டாயமாக அநுரவின் அடுத்த கட்ட நகர்வு இந்தியாவுடன் இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினையை பேசத் தயங்குவது தவறு எனவும் தமிழர்களுக்கென தற்போது இருக்கும் உரிமைகளையும் அரசாங்கம் பறிக்குமாக இருந்தால் வன்முறையற்ற அரசியலின் எதிர்ப்பை செய்வோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தினார்.

அநுரகுமார திஸாநாயக்க டில்லிக்கு சென்றிருந்த போதும் தமிழ்நாட்டில் சுமார் 40 வருடங்களாக அகதிகளாக வேதனைப்பட்டு வருபவர்களை பார்க்க செல்லாதமை தொடர்பில் சுரேன் ராகவன் குற்றம் சுமத்தினார்.

இந்த புதிய அரசியல் வாய்ப்பின் அரசியல் மொழியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும், இனி நாங்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சர்வதேசத்துக்கு எங்களை உரக்க கூறக் கூடிய ஒரு அரசியல் பாதையை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் தனித்தனியாக செல்லாமல் ஒரு குழுவாக இணைய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழர்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல தமிழ் அரசிய்லவாதிகளுக்கு ஒரு பாரிய பொறுப்பு உண்டு. எனினும், தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் சரியாக செய்கின்றார்களா என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.

இதனை மேலும் விளக்கிய அவர்,

தமிழ் அரசியல் சாதாரண அரசியல் அல்ல. வடக்கு கிழக்கு மாகாணத்தில் மட்டும் தமிழர்கள் மத்தியில் பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகளுக்கு மேல் காணப்படுகின்றன.

தங்களை வெற்றிக் கொள்வதற்கான செயற்பாடுகளை அல்லாமல் ஒன்றாக இணைந்து தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும்.’ என அவர் விளக்கமளித்தார்.

எவ்வாறாயினும், இலங்கைத்தீவு குறிப்பிட்ட சில வருடங்களாகவே பல சவால்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வந்தது. பல நெருக்கடிகளால் தவித்த மக்கள் ஆணைக்கு நிச்சயமாக அநுர தரப்பு உண்மையாக இருக்க வேண்டும்.

ஐந்து வருட ஆட்சியை நூறு நாட்களுக்குள் நடத்தி முடிக்க முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று இருப்பினும் நிறைவேற்று அதிகாரத்தையும், அறுதிப் பெரும்பான்மையையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு சிறுபிள்ளைப் போல விமர்சனம் செய்து கொண்டும், எதிர்க்கட்சிகளைப் போல கடந்த அரசாங்கங்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டும் இருப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல.

இதன்மூலம் ஆநரகுமார தலைமையிலான அரசாங்கத்திற்கு அரசியல் ஞானமும், தெளிவும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆக, “அனுபவமற்றவர்கள்” என்ற பெயரை நீக்க அநுர தரப்பு முன்வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

(கனூஷியா புஷ்பகுமார்)

நேர்காணலை முழுமையாக பார்வையிட,

The post ஜேவிபி மனோரீதியாக வன்முறையைக் கைவிடவில்லை- விளக்கமளிக்கிறார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்! appeared first on Oruvan.com.