Jeju AIR Archives - Oruvan.com

தென் கொரியாவில் நடந்த கோர விமான விபத்து – கொழும்பு விமான நிலையம் தொடர்பில் முக்கிய தீர்மானம்
இரத்மலானை விமான நிலையத்தில் காலி வீதியில் உள்ள எல்லைச் சுவரை அகற்றுவது தொடர்பில் மீளாய்வு செய்து முடிவெடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

விமான உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்கள் சங்கம் விடுத்த எச்சரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்மலானை விமான நிலையத்தில் காலி வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது அடி சுவர் சர்வதேச விமான நிலைய விதிமுறைகளை மீறுவதாக தெரியவந்துள்ளது.

சுவரின் இருப்பிடம் காரணமாக, சிறிய தொழில்நுட்ப பிழையானாலும், சுவரில் விமானம் மோதி பெரும் விபத்து ஏற்படும் என, விமான உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் சங்கம் கூறுகிறது.

இந்த அபாயத்தை கருத்தில் கொண்டு மீளாய்வு செய்து மதில் சுவரை அகற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

அண்மையில் தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமான நிலைய விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சுவரில் விமானம் மோதியதில் 179 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post தென் கொரியாவில் நடந்த கோர விமான விபத்து – கொழும்பு விமான நிலையம் தொடர்பில் முக்கிய தீர்மானம் appeared first on Oruvan.com.

மற்றுமொரு ஜெஜூ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்
தென்கொரியாவில் உள்ள ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த 161 பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று, தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில், ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்தனர்.

ஜெஜூ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 24 மணி நேரத்திற்கு முன்னரே ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் பதிவான சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

The post மற்றுமொரு ஜெஜூ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு – அவசரமாக தரையிறக்கம் appeared first on Oruvan.com.

தென் கொரிய விமான விபத்து – இருவரை தவிர அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்
தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் மீட்கப்பட்ட இருவரை தவிர ஏனைய அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தீயணைப்பு நிறுவனத்தை மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

175 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென் கொரியாவின் மூவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.

இதுவரை 124 பேரின் மரணம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தேசிய தீயணைப்பு நிறுவனம் தற்போது விபத்தில் சிக்கிய 124 உடல்களை மீட்டுள்ளதாகக் கூறுகிறது.

அவர்களில் 54 பேர் ஆண்கள் என்றும் 57 பேர் பெண்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கூடுதலாக 13 உடல்களை பாலின ரீதியாக அடையாளம் காண முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, மீட்புப் பணிகளில் உதவ 1,562 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், இதில் 490 தீயணைப்புத் துறை ஊழியர்கள் மற்றும் 455 காவல்துறை அதிகாரிகள் அடங்குவர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணித்தவர்களில் 173 பேர் தென் கொரியர்களும், இரண்டு பேர் தாய்லாந்து நாட்டவர்களும் அடங்குவர் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post தென் கொரிய விமான விபத்து – இருவரை தவிர அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல் appeared first on Oruvan.com.