Jeevan Archives - Oruvan.com

மகாகம விமல நாயக்க மகா தேரரின் மறைவிற்கு ஜீவன் தொண்டமான் இரங்கல்
“ஹட்டன் ஸ்ரீ நிக்ரோதாராம மகா விகாரையின் பிரதம விஹாராதிபதி அதிவணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரரின் மறைவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் சமாதான நகரத்தின் சகல மதங்களையும் அறவனைத்து செயற்பட்ட அதிவணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரர் நேற்றைய தினம்(26) இறைபதம் அடைந்த செய்தி எமக்குப் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“ஹட்டன் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக எல்லா இன மக்களாலும் நேசிக்கப்படும் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மத்திய மாகாண பிரதம சங்கத் தலைவரும், ஹட்டன் ஸ்ரீ பாத தேசிய பாடசாலையின் ஓய்வுபெற்ற அதிபரும், தர்ஷபதி, ஹட்டன் ஸ்ரீ நிக்ரோதாராம மகா விகாரையின் பிரதம விஹாராதிபதியுமான அதி வணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரர், இலங்கை தொழிலாளர் காங்கிரசோடு மிக நீண்ட காலமாக நட்புறவோடு செயல்பட்டு வந்தவர்.

மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடன் பிரதேசத்தின் ஒற்றுமை, அபிவிருத்தி, இனங்களுக்கு இடையிலான நல்லுறவு, எல்லா மதங்களையும் அரவணைத்து செயல்படுவது போன்ற விடயங்களில் இணைந்து செயல்பட்டு வந்தவர். அதேபோல எனக்கும் மிக காத்திரமான ஆலோசனைகளை வழங்கி சமூகத்துக்கு சிறந்த தலைமைத்துவத்தை கொடுப்பதற்கு பங்காற்றி உள்ளார். மிகச் சிறந்த கல்விமானாகவும், இந்து, இஸ்லாம் மற்றும் கிருஸ்த்தவ மதங்கள் தொடர்பாக ஆழமான அறிவை கொண்டவராகவும், அனைத்து மதங்களையும் ஒன்றினைத்து பயணிக்கும் திறன்கொண்டவராக தேரர் அவர்கள் திகழ்ந்தார்.

தேரர் சுகவீனமுற்றிருந்த போதும் தனது உடல் நிலையும் பாராது எல்லா பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள தவறுவதில்லை. தேரரின் இழப்பு ஹட்டன் பிரதேசத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

மேலும், அதிவணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரருக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும், மலையக மக்கள் சார்பிலும் எமது இறுதி வணக்கத்தை கனத்த இதயத்துடன் செலுத்துகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மகாகம விமல நாயக்க மகா தேரரின் மறைவிற்கு ஜீவன் தொண்டமான் இரங்கல் appeared first on Oruvan.com.

2000 வீடுகள் அல்ல, 2000 காகிதத் தாள்களை கையளிக்கும் விளம்பர நிகழ்வு – ஜீவன்
அரசாங்கத்தினால் இன்று வழங்கப்பட்ட வீட்டு ஆவணப் பத்திரங்கள் வெறும் காகிதத் தாள்களை வழங்கும் விளம்பர நிகழ்ச்சி மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவருடைய சமூக ஊடகப் பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று வழங்கப்படும் இந்த ஆவணம் வழக்கமாக பயனாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படும், மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும்போது ஒரு நிகழ்வு நடத்தப்படும்.

இந்த நிகழ்வு 2000 வீடுகளைக் கையளிப்பது அல்ல, ஆனால் 2000 காகிதத் தாள்களைக் கையளிப்பதை உள்ளடக்கிய விளம்பர நிகழ்வு.

இந்த காகித ஆவணம் வழங்கும் நிகழ்வுக்கு எந்த தேவைப்பாடுகளும் இல்லை, கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் அல்லது மலையக சமூகத்திற்காக எந்த ஒரு வேலையும் செய்யப்படவில்லை என்ற உண்மையிலிருந்து பொதுமக்களைத் திசைதிருப்புவதற்கான தந்திரோபாய நடவடிக்கை.

குறிப்பாக சம்பள அதிகரிப்பு இல்லை, வீடுகள் கட்டப்படவில்லை, அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறவில்லை” என்றார்.

The post 2000 வீடுகள் அல்ல, 2000 காகிதத் தாள்களை கையளிக்கும் விளம்பர நிகழ்வு – ஜீவன் appeared first on Oruvan.com.

வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்த ஜீவன்
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான்,

வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தியாவின் பெங்களுரில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜி முன்னெடுத்த இளைஞர் முன்னேற்றத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, அதனூடாக இலங்கையில் இளைஞர் சக்தி வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி விரிவாக கலந்துரையாடியாத ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முயற்சிகளுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜி அளித்துள்ள ஆதரவுக்கு நான் நன்றியுணர்வு கொள்வதாகவும், குருஜியை சந்தித்தது பெருமைக்கொள்வதாகவும் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

The post வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்த ஜீவன் appeared first on Oruvan.com.

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜீவன்
புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை  நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை முற்றிலும் தவறான செயற்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை, நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டது. இதனை நாம் வரவேற்கின்றோம். இந்த அதிகார சபை பெருந்தோட்ட மக்களுக்கு சேவைகளை செய்வதற்கு தேவைப்படுகின்ற ஒரு இயந்திரம்

இதேவேளை, மனிதவள அபிவிருத்தி நிதியத்தினை பொருத்தவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலத்தினைக்கொண்டு பெருந்தோட்ட நிறுவனங்களினை கட்டுப்படுத்தி மக்களுக்கான சேவைகளையும், அபிவிருத்திகளையும் முன்னெடுத்திருந்தோம்.

ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்பொழுது எதிர்க் கட்சியில் அமர்ந்ததோ அன்றே இந்த பெருந்தோட்ட நிறுவனங்கள் அனைத்தும் தங்களது அதிகாரத்தினையும் ஆதிக்கத்தினையும் வலுப்படுத்திக்கொண்டுள்ளன.

மனிதவள அபிவிருத்தி நிதியத்தினை பொருத்தவரை அது பெருந்தோட்ட நிறுவனங்களின் இயந்திரம். அது மக்களுடைய இயந்திரமல்ல.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை கொண்டுவந்திருந்தார்கள்.

இதனை செயற்பாட்டுக்கு கொண்டுவந்ததன் பின்னர் எந்த ஒரு பெருந்தோட்ட நிறுவனமும் இயங்க முடியாது நேரடியாக சுதந்திரமாக மக்களுடைய சேவைகளை இலகுப்படுத்தி செய்துக்கொள்வதற்கு அமைவாக செயற்படக்கூடியது.

குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் தங்களுடைய வீடுகளை கட்டுவதற்கு கூட தோட்ட முகாமையாளரிடம் அனுமதி பெறக்கூடியதாக உள்ளது.

ஆனால் இந்த புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை கொண்டு நேரடியாக சகலப் பிரச்சினைகளுக்கும் ஒரு காத்திரமான தீர்வினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

மேலும் நாங்கள் எங்களது தொழிற்சங்க பலத்தினைக்கொண்டு வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளோம். தற்போதைய அரசானது இதில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றியுள்ளதென்றால் அது கேள்விக்குறியே.

நேரடியாக காணி உரிமை/வீடுகளை கட்டுவதற்கான அனுமதி பெறுவது என்பன இந்த புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை கொண்டு செய்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அதாவது நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்று சுயாதீனமாக நேரடியாக இயங்கக்கூடிய ஒரு அதிகார சபையாகும்.

இந்த புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை சரியாக இயங்குவதில்லை என்றும் அதனால் குறித்த அதிகார சபையினை மூடுவதாக அரசாங்கம் எடுத்த தீர்மானமானது வேடிக்கையான விடயம்.

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்தால் மாத்திரமே இயக்க முடியும். மாறாக நிதி இலாமல் எவ்வாறு கொண்டு நடாத்த முடியும்?

மேலும் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பலம்/அதிகாரம் என்னவென்று தெரியாமல் ஜனாதிபதி இவ்வாறு செயற்படுகின்றார்.

இதன் காரணமாகவே இது முறையாக இயங்குவதில்லை என்றும், இதனை அமைச்சின் ஒரு பிரிவாக மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக ஏனைய நிறுவனங்கள் போன்று அல்ல புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையானது.

பிரதி அமைச்சரும் மலையக ஆளுங்கட்சி பிரதிநிதிகளும் உண்மைக்கும் வெட்கப்பட வேண்டும். ஏனென்றால் மலையக மக்கள் அதிகப்படியான நம்பிக்கையில் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பி உள்ளார்கள். மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தீர்த்து வைப்பதற்கும் அதற்கான பதில் வழங்குவதற்கும் திறானி அற்றவர்களாகவும் முதுகெழும்பு இல்லாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

பெருந்தோட்ட மக்களின் சம்பள விடயத்தில் கூட எங்களை கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால் இன்று ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாக ஆளும் மலையக பிரதிகள் இருக்கின்றார்கள்.

குறிப்பாக இன்றைய சூல்நிலையில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆளும் கட்சியில் யாரும் அமைச்சரைவையில் இல்லை. ஆகையால் இந்த புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை இல்லாமலாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் தவறான செயற்பாடாகவும் இதனை நான் பார்க்கின்றேன்.

குறைந்தளவிலான செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்காகவும், சேமிப்பதற்காகவும் அனைத்து நிறுவனங்களை இல்லாமல் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாது. உதாரணமாக இலங்கை மின்சார சபையினை எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய இளைஞர் யுவதிகளின் மத்தியில் அதிகப்படியான ஆதங்கங்கள் இருக்கின்றன. அவை நியாயமானதாகவும் இருக்கின்றது. ஆனால் இந்த ஆதங்கங்களை ஆயுதமாக பயண்படுத்தி நாட்டை இந்த அரசாங்கம் சீரலிக்கின்றார்கள்.

மலையக மக்கள் மீது உண்மையாக அக்கறையும் தேவைப்பாடும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுக்கு இருக்குமாயின் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை நீக்குவற்கு எதிராக ஒரு அறிக்கையினை வெளியிட வேண்டும்” என்றார்.

The post புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜீவன் appeared first on Oruvan.com.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் – ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், நேற்று (16) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

தற்போது வெளியுறவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றி வரும் சஷி தரூரின் கருத்துக்கள் மற்றும் அரசியல் அனுபவங்கள் தொடர்பிலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது புகழ்பெற்ற இலக்கியப் பொக்கிஷமான Our Living Constitution இன் கையொப்பமிடப்பட்ட பிரதியை பெற்றுக்கொண்டதிலும் மகிழ்ச்சியென கூறியுள்ளார்.

மேலும், சிறந்த அரசியல்வாதி, சிந்தனையாளர், எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களில் விளங்கும் சஷி தரூரின் பணி எப்போதும் ஊக்கமளிக்கும் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

The post இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் – ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த ஜீவன்
நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் மற்றும் தமிழ்நாட்டின் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  கார்த்தி பி. சிதம்பரம் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சிவகங்கை தொகுதியின் மானகிரியில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜீவன் தொண்டமானின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனது தமிழ்நாட்டு விஜயத்தின்போது சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) உறுப்பினரும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (TNTA துணைத் தலைவருமான திருவாளர் கார்த்தி பி. சிதம்பரத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தின்போது இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மிகவும் பயனுள்ளதாக தெரிவித்த  ஜீவன் தொண்டமான் இந்தியா-இலங்கை பரஸ்பர விடயங்கள் குறித்தும் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

The post சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த  ஜீவன் appeared first on Oruvan.com.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வையுங்கள் – ஜீவன் எம்.பி கோரிக்கை
உண்மையைப் பேசுபவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கு வாக்களிக்க தோட்டப் பகுதி மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அம்பகமுவ பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஹட்டன் அபோட்ஸ்லி தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதுவரை பெருந்தோட்டத் துறையில் மக்களின் ஊதியத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

“ஏனைய கட்சிகள் வழங்கும் சம்பளம் போதுமானதாக இல்லை என்று மட்டுமே விமர்சிக்கிறார்கள்.

நான் இராஜாங்க அமைச்சராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் இருந்த காலத்தில், எனக்குக் கிடைத்த ஒதுக்கீடுகளைக் கொண்டு தோட்டப் பகுதி மக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பாடுபட்டேன்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி தலவாகலையில் கூறினார். ஆனால், சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், எப்போதும் தோட்டத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வையுங்கள் – ஜீவன் எம்.பி கோரிக்கை appeared first on Oruvan.com.

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை
கடந்த வருடம் மே மாதம் 30 ஆம் திகதி களனி வெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனத்தினர் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த வழக்கு இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கில் சந்தேக நபர்களாக ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேர் பெயரிடப்பட்டிருந்த நிலையில், குறித்த அனைவரும் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கு ஜூன் ஒன்பதாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை appeared first on Oruvan.com.

மலையக மக்களின் தேவைகளுக்கும் ,முயற்சிகளுக்கும் கைகொடுப்போம் – ஜீவன் தொண்டமான்
புத்தாண்டை முன்னிட்டு இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும். முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் மாற்றத்திற்காகவும், ஏற்றத்திற்காகவும் தம்மை அரப்பணித்திருக்கும் இ.தொ.கா எத்தனை சவால்களை எதிர்கொண்டாலும் இடைவிடாது மக்களுக்காக பாடுபடும் என்றார்.

அவர் தனது புத்தாண்டுச் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது

எமது மலையக மக்கள் இடர்களை எதிர்கொள்ளும் போதும், சவால்களை சந்திக்கின்ற போதும் அரணாகப் பாதுகாத்து நின்று துயர்களையும் துடைத்து வந்திருக்கின்றோம். வரலாற்றுப் பணியை நாம் மேற்கொண்டிருப்பதை வரலாறு சான்றுபடுத்தும். இதன் காரணமாகவே, தெளிந்த சிந்தனையோடும். கொள்கைப்பற்றோடும் மக்கள் எம்பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.

இன்று எம்மக்கள் அனைவருக்கும் சலுகைகள், உரிமைகள், வசதி வாய்ப்புகள் என்பன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அத்தனையும் அரசியல் சாணக்கியத்தாலும், தொழிற்சங்க போராட்டங்களாலும் பெறப்பட்டவை என்பதை எவரும் மறந்துவிட முடியாது. 2025ம் ஆண்டு நம்பிக்கை வலுவூட்டும் ஆண்டாகவும். மலையக மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழிகாட்டும் ஆண்டாகவும் திகழவேண்டும். இம்மக்களின் தேவைகளிலும், அவர்களது முயற்சிகளிலும் நாம் கைகொடுப்போம். புதிய ஆண்டில் மலையகமெங்கும் மகிழ்ச்சி பரவட்டும்.

இதேவேளை இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள்.இவர்களின் எதிர்பார்ப்புகள், விருப்பங்கள், வாஞ்ஞைகள் இவ்வாண்டிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். இந்த ஆண்டு இளைஞர்களுடைய ஆண்டு. புதிய சகாப்தத்தை படைக்கப் போகும் இவ் அரசாங்கம் இளைஞர்களின் எண்ணங்களை நிறைவேற்றி நம்பிக்கை வலுவூட்டும் ஆண்டாக இந்த ஆண்டை நாம் எதிர்பார்க்கின்றோம்.”

இளைஞர்கள் மத்தியில் புதிய யுகத்தைப் படைக்கப் போவது உறுதி வரலாற்றில் இளைஞர்கள் இப்புத்தாண்டில் தவறு இழைக்கக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் . உங்களுக்கும். உங்கள் குடும்பத்திற்கும் இப் புத்தாண்டு சிறப்புன் மலர்ந்து, ஒளிமயமான எதிர்காலம் அமைய எனது வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

The post மலையக மக்களின் தேவைகளுக்கும் ,முயற்சிகளுக்கும் கைகொடுப்போம் – ஜீவன் தொண்டமான் appeared first on Oruvan.com.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத்திற்கான குழு தலைவரானார் ஜீவன் தொண்டமான்
பொதுத் தேர்தலில் சிலிண்டர் மற்றும் யானை சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்

குழுவின் தலைவராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஒரேயொரு நாடாளுமன்ற

உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆவார்.

46,438 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத்திற்கான குழு தலைவராக ஜீவன் தொண்டமான் இன்று வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முதலில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்னவை குழுவின் தலைவராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் பின்னர் இந்த தீர்மானத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத்திற்கான குழு தலைவரானார் ஜீவன் தொண்டமான் appeared first on Oruvan.com.