January! Archives - Oruvan.com

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது
கடந்த செப்டம்பர் மாதத்தில் 158,971 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில்

செம்டம்பரில் 30.24 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலிருந்து மாத்திரம் 49,697 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 10,527 பேரும், ஜெர்மனியிலிருந்து 9,344 பேரும்,

சீனாவிலிருந்து 10,527 பேரும் மற்றும் பிரான்சிலிருந்து 5,144 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இதற்கமைய, இந்த ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி, வரையான காலப்பகுதியில்

வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17 லட்சத்து 25 ஆயிரத்து 494 ஆக பதிவாகியுள்ளது.

இவர்களில் 375,292 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 122,144 பேர் ரஷ்யாவிலிருந்தும், 161,893 பேர் பிரித்தானியாவில் இருந்தும் வருகை தந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

The post சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது appeared first on Oruvan.com.

சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம்

மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், எரிவாயு விலைகளை அதிகரிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறந்த பங்கு முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவத்தினால் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 05 கிலோ கிராம் சமையல் எரிவாயு 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு 694 ரூபாவிற்கும் தற்போதைய விலைக்கே விற்பனை செய்யப்படும்.

The post சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு appeared first on Oruvan.com.

எதிர்வரும் ஜனவரியில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு
சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் டிசம்பர் மாதத்தின் பின்னர் கொடுப்பனவு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யான மற்றும் அடிப்படையற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நாட்களில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அதிகாரமளிக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிராந்திய செயலக மட்டத்தில் தகவல் புதுப்பித்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனூடாக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் தகவல்களின்படி, நாட்டில் தற்போது 47,244 சிறுநீரக நோயாளிகள் இருப்பதாகவும், எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம், எனவே இந்த தகவலை புதுப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக தற்போது சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு பெறும் எவருக்கும் கொடுப்பனவு எவ்விதத்திலும் குறைக்கப்பட மாட்டாது என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எதிர்வரும் ஜனவரியில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு appeared first on Oruvan.com.

சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகள் ஜனவரியில் வழங்கப்படும்
வெள்ளம்,வறட்சி மற்றும் காட்டு யானைகளினால் சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் நெல் உட்பட பயிர்ச்செய்கைகளுக்கு வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 80 சதவீத விவசாயிகளுக்கு சுமார் 80 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் இழப்பீடுகள் ஜனவரி 5 ஆம் திகதிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெரும்போகத்திற்கான இழப்பீடு 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகள் ஜனவரியில் வழங்கப்படும் appeared first on Oruvan.com.

“தூய்மையான இலங்கை” திட்டம் எதிர்வரும் ஜனவரியில் அமுல்!
புதிய ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி கடமைகளை ஆரம்பிக்கும் போது அரச பணியாளர்கள் வழங்கும் உறுதிமொழி இம்முறை வேறுபட்டதாக இருக்கும் எனவும் அரசாங்கத்தால் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியாக அமையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முறையான சுகாதார சூழலை உருவாக்குதல், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட புதுமையான திட்டங்களுடன் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) என்ற கருத்துரு பல வழிகளில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஜனவரி மாதம் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் பொது சேவை உறுதிமொழியை வழங்கிய போது, ​​இம்முறை ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழியும் உள்ளடக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

மேலும், முதற்கட்டமாக ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

The post “தூய்மையான இலங்கை” திட்டம் எதிர்வரும் ஜனவரியில் அமுல்! appeared first on Oruvan.com.