Jagath Wickramaratne Archives - Oruvan.com

உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தாத சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபாநாயகருக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தவில்லை என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அவர் 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.

எனினும், அன்று தொடக்கம் இன்று வரையில் அவர் நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே உள்ள சபாநாயகர் இல்லத்தை பயன்படுத்தவில்லை.

நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் தினங்களில் மாத்திரமன்றி இடம்பெறாத சில தினங்களிலும் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தருவதாகவும் சபாநாயர் எங்கு தங்கியுள்ளார் என்பது தொடர்பில் நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் தெரியாது என அறியக்கிடைத்துள்ளது.

ஜகத் விக்கிரமரத்ன கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொலநறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான நிலையில் அசோக ரன்வல இராஜினாமா செய்ததையடுத்து சபாநாயகராக பதவியேற்றார்.

The post உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தாத சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன appeared first on Oruvan.com.

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிப்பு
10வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை நாடாளுமன்றம் கூடிய நிலையில், புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய சபாநாயகர் பதவிக்கான பிரேரணை பிரதமர் ஹரினி அமரசூரியவினால் கொண்டுவரப்பட்டதுடன், சபைத்தலைவர் பிமல் ரத்நாயக்கவினால் அதனை வழிமொழிந்தார்.

முன்னதாக 10வது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக ரங்வாலா பதவி விலகியதை அடுத்து, சபாநாயகர் பதவி வெற்றிடம் ஏற்பட்டது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் ஒருவரை பரிந்துரைப்பதாக அறிவித்திருந்தது. எனினும், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் ஒருவரின் பெயரை முன்மொழியாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதனிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர் இன்று பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சுஜீவ சேனசிங்க, மொஹமட் நிசாம் காரியப்பர், முஹம்மது இஸ்மாயில் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பைசர் முஸ்தபாவும் இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

The post புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிப்பு appeared first on Oruvan.com.