Jaffna Weather Archives - Oruvan.com

சூரியனின் உச்சம், அதிக வெப்பநிலை – கடும் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கை
எதிர்வரும் 02.04.2026 முதல் எதிர்வரும் 15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது.

ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் என்பதனால் இலங்கை முழுவதும் அதிக வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூரியன் எதிர்வரும் 04.04.2026 அன்று சூரியன் பருத்தித்துறைக்கு நேராகவும், 05.04.2026 அன்று சூரியன் எல்பிட்டியவுக்கு நேராகவும், 06.04.2026 அன்று களுத்துறைக்கு நேராகவும், 07.04.2026 அன்று கொழும்புக்கும் களனிக்கும் நேராகவும், 08.04.2026 அன்று மகியங்கனைக்கு நேராகவும் உச்சம் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்வரும் 02.04.2026 முதல் 15.04.2026 வரை இலங்கையின் பல பகுதிகளிலும் அளவிடப்படும் நாளுக்கான சராசரி வெப்பநிலை 38-42 பாகை செல்சியஸ் ஆக நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகல் பொழுதில் அளவிடப்படும் நாளின் அதிகூடிய வெப்பநிலை 43 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையான வெப்பநிலை இவ்வாறிருக்க உணரக்கூடிய வெப்பநிலை 48 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும்.

பொதுவாக மனித உடல் 40 பாகை செல்சியஸை்விட அதிக வெப்பநிலையை தாங்காது. இது பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்பநிலையாகும்.

40 பாகை செல்சியஸ் என்பது வெப்ப வாதத்தை( Heat Stroke) ஏற்படுத்தும் வெப்பநிலையாகும். ஆனால் எதிர்வரும் நாட்களில் (02.04.2026 முதல் 15.04.2026)வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும்.

-புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

The post சூரியனின் உச்சம், அதிக வெப்பநிலை – கடும் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கை appeared first on Oruvan.com.

27ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் கனமழை பெய்யும் சாத்தியம்!
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கின்றது.

இதன் காரணமாக நாளை (23.01.2026) முதல் எதிர்வரும் 27.01.2026 வரை வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இன்றும் பிற்பகலுக்கு பின்னர் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எனவே நாளை முதல் நெல் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகளும், நெல் உலர விடும் விவசாயிகளும் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.

அதேவேளை தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் மாலையில்/ இரவில் நிலவும் குளிரான வானிலைக்கு காரணமான அதிகுறைந்த வெப்பநிலை எதிர்வரும் 27.01.2026 வரை சற்று உயர்வடையும் என்பதனால் இன்று முதல் எதிர்வரும் 27.01.2026 வரை குளிர் நிலைமை சற்று சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை எதிர்வரும் 29.01.2026 முதல் மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு சற்று மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

– நாகமுத்து பிரதீபராஜா –

The post 27ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் கனமழை பெய்யும் சாத்தியம்! appeared first on Oruvan.com.

வடக்கு கிழக்கில் 15ஆம் திகதி வரை மழை தொடரும்!
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15.01.2026 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் அதற்கேற்ற வகையில் தங்களுடைய அறுவடைச் செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்வது சிறந்தது.

மத்திய, மேல், சபரகமுவா, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும் எதிர்வரும் 15.01.2026 வரை மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இரவில் வெப்பநிலையில் ஏற்படும் வீழ்ச்சியும், ஈரப்பதன் மாற்றமும் குளிரான வானிலையை ஏற்படுத்துகின்றன. இந்த நிலைமை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது.

– நாகமுத்து பிரதீபராஜா –

The post வடக்கு கிழக்கில் 15ஆம் திகதி வரை மழை தொடரும்! appeared first on Oruvan.com.

நெடுந்தீவு மக்களுக்கு அவசர அறிவிப்பு
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல்வழியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிகசிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை வடகிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரன காலநிலை மாற்றம் காரணமாக தொடர்வதாக கடற்படையினர் தெரிவித்துள்ளதாக நெடுந்தீவு வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்புகடி மற்றும் தவிர்க்ககூடிய நோய்நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது

இதேவேளை காலநிலை சீரின்மை காரணமாக நெடுந்தீவுக்கான நோயாளர் கடற் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

The post நெடுந்தீவு மக்களுக்கு அவசர அறிவிப்பு appeared first on Oruvan.com.

வானிலை முன்னறிவிப்பு – இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன்படி, இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

The post வானிலை முன்னறிவிப்பு – இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் appeared first on Oruvan.com.

யாழில் இடியுடன் கூடிய கனமழை!! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்று (22ஆம் திகதி) மாலையளவில் வட தமிழ்நாடு மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

The post யாழில் இடியுடன் கூடிய கனமழை!! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

யாழில். வீடொன்றின் மீது முறிந்து விழுந்த பனைமரம் – வீடும் காரும் சேதம், மூவர் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் வியாழக்கிழமை வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது.

அத்துடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

குப்பிளான் ஜே/211 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடொன்றின் முன்பாக நின்ற பனை மரம், கடும் காற்று காரணமாக முறிந்து விழுந்ததில் வீடும் காரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

அதனால் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

The post யாழில். வீடொன்றின் மீது முறிந்து விழுந்த பனைமரம் – வீடும் காரும் சேதம், மூவர் பாதிப்பு appeared first on Oruvan.com.

தாளையடி கடற்கரைக்கு வருபவர்கள் அவதானம்-பலத்த காற்று வீசுகின்றது
வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவாசிகள் நாளாந்தம் வருகை தந்து பொழுதை கழிப்பதுடன்,அதில் சிலர் கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றார்கள்

தற்போது வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் அதிகளவான காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது

ஆகவே தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாரும் கடற்கரைக்குள் இறங்க வேண்டாம் என அப்பகுதி மீனவர்களால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தாளையடி கடற்கரைக்கு வருகை தந்த சுற்றுலாவாசி ஒருவர் கடலில் நீராடும் போது உயிரிழந்தமை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post தாளையடி கடற்கரைக்கு வருபவர்கள் அவதானம்-பலத்த காற்று வீசுகின்றது appeared first on Oruvan.com.