Jaffna University Archives - Oruvan.com

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும், வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக சீலிங்கின் மேல் மறைத்து வைக்கப்பட இரண்டு மகசின்களும், வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்பு appeared first on Oruvan.com.

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு காணவேண்டும் என கோரியே இப்போராட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விசாரா பணியாளர் வெற்றிடங்கள் 355 காணப்படுகின்றபொழுதிலும் 117 வெற்றிடங்களே நிர்வாகத்தினால் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழக சுற்றுநிருபத்திற்கு முரணாக தனியார் நிறுவனங்களூடாகவும் ஊழியர்கள உள்வாங்கப்பட்டு சேவை ஒப்பந்த்த்தினூடாக நியமனம் செய்யப்படுவது தவறு எனவும் சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே இந்த முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் பல்கலைக்கழக பேரவைக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டும் அவை புறக்கணிக்கப்பட்டதால் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எனவே, உடனடியாக வெற்றிடங்கள் அனைத்தும் நிவர்த்திசெய்யப்படவேண்டும் எனவும் இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகளும்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டதின் ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் .

அத்துடன் தமிழ்த்தசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

The post யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டம் appeared first on Oruvan.com.

வடக்கு – கிழக்கில் மாபெரும் போராட்டம்!! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு
சர்வதேச நீதி கோரிய மாபெரும் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் இருந்து தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்..

வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியிலே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு தற்காலம் வரையிலும் பல்வேறுபட்ட ஆக்கிரமிப்புகளுக்கு தமிழர் தாயகமானது முகம் கொடுத்து வருவதுடன் அந்த காலப்பகுதியிலே எமது பல உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக இன்றளவும் அவர்களது உறவினர்கள் அவர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் நிறைய தாய்மார்கள் இறந்தும் கூட இருக்கின்றனர். இன்றும் நம் மக்கள் வாழ்கின்ற நிலப்பகுதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள், சிங்கள பௌத்தமயமாக்கல், தமிழர்களுடைய பூர்வீக காணிகள் விடுவிக்கப்படாமை என அதிகார ரீதியாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகின்றமையானது எங்கள் மக்களுக்கான நீதி இந்த நாட்டில் தொடர் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றமையையே குறிக்கின்றது.

தமிழ் மக்கள் தங்கள் தாயக பகுதியில் அரசியல் கலாச்சார பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவதையும் எமக்கான நீதி மறுக்கப்படுவதையும் நாம் உரத்துச் சொல்வதே போராட்டங்களின் தார்மீக நோக்கமாகும்.

இன்றளவும் தமிழர் நிலங்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளேயே இருக்கின்றன. வலிகாமம் கிழக்கு காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டு விடுவிக்கப்படாத நிலையிலேயே எங்கள் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த வேளையில் முத்தையன்கட்டு கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இராணுவத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டமை அரசினுடைய சர்வாதிகாரத்தன்மையினையே வெளிப்படுத்துகின்றது.

தமிழ் மக்கள் கேட்பதற்கு யாருமற்ற எதிலிகளாக சொந்த நிலத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

ஆட்சிக்கு வரும் முன் அரசியல் கைதிகளின் விடுதலையை பற்றி கதைத்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறி அரசியல் கைதிகளை விடுவிக்கமுடியாது என்று சொல்லியிருப்பது என்பது அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையின்மையையே காட்டுகின்றது.

கொக்குத்தொடுவாய் மற்றும் செம்மணி மனிதபுதைகுழிகளில் இருந்து தமிழ் சமூகத்தின் மீதான இனப்படுகொலை வெட்ட வெளிச்சத்துக்கு வருவது தெரிந்தும் எதுவித நீதியும் இதுவரை எட்டப்படவில்லை.

மனித புதைகுழி பற்றி சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் தங்கள் சொந்த நிலங்களுக்காக போராடுபவர்கள் புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் அதிகாரத்தின் அதி உச்ச கொடூர போக்கையே காட்டுகின்றது.

இந்த வேளையில் வீதி எங்கும் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதுவித நீதியுமற்று போராடி வருகின்றனர்.

யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் நீதிக்கான தவிப்புக்கள் தணியப்படவில்லை. அவர்களுக்கான நீதி மாறி மாறி வரும் எந்த ஒரு அரசாங்கத்தாலும் வழங்கப்படவில்லை வழங்கப்படாது.

இதனாலேயே வரும் ஆவணி 30ஆம் திகதி சனிக்கிழமை அன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் தங்கள் பிள்ளைகளை தேடி சர்வதேச நீதி விசாரணை கோரி போராட முனைந்துள்ளனர்.

வடக்கில் கிட்டுப்பூங்காவிலிருந்து செம்மணி வரையிலும் கிழக்கில் கல்லடிப்பாலத்திலிருந்து காந்திப்பூங்காவரையிலும் சர்வதேச நீதிக்கான மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்;.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களாக அவர்களது போராட்டத்திற்கு முற்றுமுழுதான ஆதரவினை வழங்குவதுடன் பக்கபலமாகவும் இருப்போம் என்று சொல்லிக் கொள்கின்றோம்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழர் தேசமாக போராட்டக் களத்திற்கு நாங்கள் அணி திரள வேண்டும் என்று கோரிக்கை வைப்பதுடன் இந்திய அரசியலில் ஆர்வம் செலுத்தும் எங்கள் தமிழ் இளந்தலைமுறையினர் எங்கள் மக்களின் பிரச்சினைகளில் பெரிதும் அக்கறையின்றி இருப்பது மனவருத்தத்திற்குரிய விடயமாகவே காணப்படுகின்றது.

எனவே எங்கள் நிலத்தினுடைய அரசியலை புரிந்து கொண்டு எங்கள் மக்களுக்காக காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய உறவுகளுக்காக போராட்ட களத்திற்கு அனைவரும் ஒன்று கூடி வரவேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக கேட்டுக் கொள்கின்றோம் என மேலும் தெரிவித்தனர்.

The post வடக்கு – கிழக்கில் மாபெரும் போராட்டம்!! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு appeared first on Oruvan.com.

யாழ் பல்கலையில் போராட்டம்
“ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு” என்ற கோரிக்கை அடங்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் இன்று இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நாடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது நீக்கிவிடப்பட்ட 20% ஐ உடனடியாக வழங்கு, அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டிருந்தன.

The post யாழ் பல்கலையில் போராட்டம் appeared first on Oruvan.com.

யாழ்.பல்கலை சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள்!! ஆவணப்படமும் வெளியீடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் பூர்த்தியாகுவதையோட்டி பல்கலைக்கழக சட்டத்துறையின் ஏற்பாட்டில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாசும் கௌரவ விருந்தினராக சட்டத்தரணி மாலா சபாரத்தினமும் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை தொடர்பான ஆவணப்படமொன்று வெளியிடப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி நிஸாந்தவின் நெறியாள்கையில் நடைபெற்ற குழு விவதாத்தில் இலங்கை சட்டக் கல்லூரி அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்தலால் டி அல்வீஸ், சட்டத்தரணி எல்.இளங்கோவன், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி எர்மிசா டெகல், சட்டத்தரணி லக்ஸ்மனன் ஜெயகுமார் ஆகியோர் நேரடியாக பங்கேற்றதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய இணைய வழியில் இணைந்தார்.

இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன், நீதிபதிகள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சட்டத்துறை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

The post யாழ்.பல்கலை சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள்!! ஆவணப்படமும் வெளியீடு appeared first on Oruvan.com.

யாழ் பல்கலையில் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு
தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

யாழ். பல்கலை கழக வளாகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் நடைபெற்ற நிகழ்வில் , பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்தி போராடினார்.

அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் கடந்த 1974ஆம் ஆண்டு ஜீன் மாதம் 05ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பினுள் சிக்கிக்கொண்ட போது சயனைட் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

ஈழ போராட்ட வரலாற்றில் முதல் முதலாக சயனைட் அருந்தி உயிர் நீத்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது.

The post யாழ் பல்கலையில் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு appeared first on Oruvan.com.

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக இடம்பிடித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் முன்ணணி சஞ்சிகையின் தலைசிறந்த ஆசிய விஞ்ஞானிகள் நூறு பேரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல் ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது.

பொதுவாக இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகளின் ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும்.

முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகளாக பணியாற்றிவரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவற்றில் துணைவேந்தர்கள் இயக்குனர்கள் சபையினரால் வழங்கப்பட்ட பௌதிக விஞ்ஞானத்திற்கான அதி சிறந்த இள ஆராய்ச்சியாளர் விருது தேசிய விஞ்ஞான மன்றத்தினால் (National Science Foundation, NSF) வழங்கப்பட்ட இள விஞ்ஞானி விருது மற்றும் தேசிய ஆராய்ச்சி பேரவை (National Research Council, NRC) பல தடவைகள் வழங்கிய சிறந்த ஆராய்ச்சி வெளியீட்டுகளுக்கான ஜனாதிபதி விருதுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இவரின் ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் அதிகளவு மேற்கோளிடப்பட்டு வருகின்றன.

சர்வதேசத்தரத்திலான இவரது ஆய்வுச் செயற்பாடுகளினால் ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

The post ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக இடம்பிடித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் appeared first on Oruvan.com.

யாழ் . பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , யாழ் பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்

நினைவு தூபி முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் , முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்ததுடன் , அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, முள்ளிவாய்க்கால் வாரத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரத்த தான நிகழ்வுகள் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post யாழ் . பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி appeared first on Oruvan.com.

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் மே 18ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் முதல் நிகழ்வு இன்று (12) திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்  பிரபாகரனின் இல்லத்திற்கு அருகில் உள்ள ஆலடி பகுதியில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மாணவர்களால் அப்பகுதி மக்களிடம் அரிசி சேகரிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு சிரட்டைகளில் பொதுமக்களுக்கும் வீதியில் சென்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார காலப்பகுதியை துக்கதினமாக தமிழ் மக்கள் அனுஷ்டிக்க வேண்டும்.

கேளிக்கை ரீதியான நிகழ்வுகளையோ நினைவுகூறலை அவமதிக்கும் வகையான செயற்பாடுகளை இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் தவித்துக் கொள்ள வேண்டும் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதன்போது கோரிக்கை விடுத்தது.

The post யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம் appeared first on Oruvan.com.

யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு!
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி மீறல்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த மாதம் 29ஆம் திகதி பல்கலைக்கழக விடுதி ஒன்றுக்குள் நான்காம் வருட மாணவர் ஒருவர் குடிபோதையில் வந்து அறையொன்றில் அனுமதி பெறாமல் தங்கியிருந்த சம்பவம் தொடர்பில் முதலாம் ஆண்டு மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்முறைப்பாட்டுக்கமைய நடவடிக்கைகளை எடுக்காமல், முறைப்பாடு செய்த மாணவர்கள் உட்பட விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு மாணவர்களை அச்சுறுத்தும் வகையில், மாணவர்களை விடுதிகளிலிருந்து வெளியே செல்லும் நேரம் முடிவடைந்த பின்னர் இரவு வேளையில் வீதி வழியாக வேறொரு வீடுதிக்கு அழைத்துச் சென்று, அறை ஒன்றில் வைத்துப் பூட்டிய பின்னர் அங்கு வலுக்கட்டாயமாகப் பொய் வாக்குமூலங்களில் கையொப்பம் இடுமாறு பணிக்கப்பட்டதாகவும், மாணவர்களின் சம்மதமின்றி காணொளி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவுமே மூன்று மாணவர்களும் தமது முறைப்பாடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிரூபத்துக்கமைவாகத் துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளாமல், சட்டத்துக்கு மாறாக மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொள்வதாகவும், மாணவர்களை விசாரணைக்கு அழைப்பது முதல் விசாரணை நடைமுறைகள் உட்பட சட்டத்துக்கு முரணாகச் செய்யப்படும் விசாரணைகள் பற்றி பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், திரும்பத் திரும்ப முறைப்பாடு செய்யும் மாணவர்களுக்கெதிராகவே விசாரணைகள் மேறகொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு! appeared first on Oruvan.com.