Jaffna Tamil News Archives - Oruvan.com

யாழில் மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கபட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.

இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த நபர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டார்.

மேலும் குறித்த ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.

The post யாழில் மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி appeared first on Oruvan.com.

வீதியில் சென்ற இளைஞர்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட மாங்குளம் பொலிஸார்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்றிரவு காரில் வவுனியா நோக்கி பயணித்தனர். இதன்போது மாங்குளம் பொலிஸார் அவர்களை வழிமறித்தனர்.

வழி மறிக்கும்போது டோர்ச் லைட்டின் வெளிச்சத்தை கண்களில் பாய்ச்சினர். இதனால் காரில் பயணித்த இளைஞர்கள் நிலைகுலைந்தனர்.

இந்நிலையில் காரில் இருந்து இறங்கிய இளைஞர்கள் இப்படி வெளிச்சத்தினை கண்களில் பாய்ச்சி வாகனங்களை மறிக்க கூடாது என எடுத்துரைத்தனர்.

இதன்போது குறிக்கிட்ட பொலிஸார் இளைஞர்களை மிரட்டும் வகையில், அப்படித்தான் செய்வோம், என்ன செய்ய முடியும் என கூறினர்.

இதன்போது இளைஞர்கள் “பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவே இவ்வாறு வாகனங்களை டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்களில் பாய்ச்சி மறிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்” என கூறினர்.

இதன்போது பொலிஸார் அவரது அறிவிப்பு குறித்து எமக்கு தெரியாது என்று கூறிவிட்டு சிங்களத்தில் பேச ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இளைஞர்கள், எமக்கு சிங்களம் தெரியாது, தமிழில் பேசுங்கள் என கூறிய வேளை, “இது ஸ்ரீலங்கா, நீங்கள் சிங்களம் பேசத்தான் வேண்டும், தமிழில் எல்லாம் பேச முடியாது” என்று மிரட்டினர்.

குறித்த பொலிஸார் மேல் அங்கியினை அணிந்திருந்த நிலையில் அவர்களது இலக்கம் மறைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் உங்களது தகட்டு இலக்கத்தை கூறுங்கள், நாங்கள் இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால அவர்களிடம் முறையிடுகின்றோம் என இளைஞர்கள் கூறினர்.

இதன்போது பொலிஸார் “நீங்கள் அவரிடம் கூறி எதுவும் செய்யப் போவது இல்லை. அவராலும் எதுவும் செய்ய முடியாது. தகட்டு இவக்கமும் வழங்க முடியாது என மிரட்டி அனுப்பினர்.

WP – BIK – 3102 என்ற மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸாரே இவ்வாறு அராஜகத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் வந்த வாகனங்களையும் பொலிஸார் டோர்ச் லைட் ஒளி பாய்ச்சியே வழி மறித்தனர்.

தற்போது பொலிஸாரின் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டு காணப்படுறது. இது குறித்து செய்திகள் வெளியாகிய நிலையிலும் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை.

எனவே உரிய அதிகாரிகள் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post வீதியில் சென்ற இளைஞர்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட மாங்குளம் பொலிஸார்! appeared first on Oruvan.com.

புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் – ஜனாதிபதி அநுர அழைப்பு
வடக்கில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் தாயகம் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கில் தங்களின் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்திருந்த ஜனாதிபதி சங்கிலியன் பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இதன்போது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் போர் புரிந்தோம் அதனால் என்ன நடந்தது ? அழிவுகளை தான் சந்தித்தோம். எம் உறவுகளை இழந்தோம். வடக்கிலும் தெற்கிலும் அதே நடந்தது. மீள அப்படி ஒரு நிலை எமக்கு வேண்டாம்

எங்கள் தலைமுறைகள் போர் புரிந்தோம் அடுத்த தலைமுறைகள் போர் இல்லாது சமாதானமாக அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும். போர் இனவாத அரசியல்வாதிகளுக்கே தேவை எமக்கு தேவையில்லை.

யாழ்ப்பாணத்தில் பல பாரம்பரிய கட்சிகள் உள்ளன. கடந்த பொது தேர்தலில் அவற்றினை தவிர்த்து எமது கட்சியை சார்ந்த மூவரை தெரிவு செய்துள்ளீர்கள். புதிய ஒரு அணி யாழில் இருந்து நாடாளுமன்றம் வந்துள்ளது.

யாழ்ப்பாண மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் வீணடிக்க மாட்டோம். இனவாதிகளுக்கு அஞ்சி மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாது இருக்கமாட்டோம். நாம் தேசிய ஒருமைப்பாட்டுக்காக என்றும் உழைப்போம்.

பாதுகாப்பு காரணங்களுக்கு என தமிழ் மக்களின் காணிகள் கையகப்படுத்தபட்டுள்ளது. அந்த காணிகளை பாதுகாப்பு தரப்பிடம் இருந்து மீள பெற்று காணி உரிமையாளர்களுக்கு கையளிப்போம்.

இன்னொரு யுத்தம் நாட்டில் தோன்றும் என்ற அச்சத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை கடந்த அரசாங்கம் மீள கையளிக்கவில்லை. ஆனால் நாங்கள் இன்னொரு யுத்தம் நாட்டில் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்கு என காணிகள் தேவையில்லை. விரைவில் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்போம்.

மூடப்பட்ட வீதிகளையும் படிப்படியாக திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கிறோம். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் மூடப்பட்டு இருந்த வீதிகளை திறந்துள்ளோம்.

கொழும்பில் பாதுகாப்பு காரணம் என மூடப்பட்ட வீதிகளை திறக்கும் போது ஏன் யாழ்ப்பாணத்தில் வீதிகளை திறக்க கூடாது. நாட்டில் பாதுகாப்பு காரணமாக என மூட்டப்பட்ட வீதிகளை திறப்போம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களையும் வெளிப்படுத்துவோம். அரசாங்கத்திடம் , பொலிசாரிடம் , இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்துவோம்.

நாங்கள் நாட்டை பொறுப்பெடுத்த காலம் முதல் நாட்டை வளப்படுத்தி வருகின்றோம். எதிர்வரும் ஐந்து வருடத்தில் அந்நிய செலவாணியை அதிகரிப்போம். கைவிடப்பட்ட பல செயற்திட்டங்களை தற்போது மீள ஆரம்பித்துள்ளோம்.

அதேபோன்று பல வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். குறிப்பாக தமிழ் இளையோர் 2 ஆயிரம் பேருக்கு பொலிஸ் திணைக்களத்தில் வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம்.

அதேபோன்று இராணுவம் , கடற்படை விமான படையிலும் தமிழ் இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்கு இங்குள்ள பெரியவர்கள் பெற்றோர்கள் இளையோர்களை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எடுத்து கூற வேண்டும்.

காங்கேசன்துறையில் ஒரு ஜனாதிபதி மாளிகை உள்ளது. அது எமக்கு தேவையில்லை. அதனை யாழ்ப்பாண மக்களுக்கு பயன்பட கூடியவாறு மக்களுக்காக அதனை வழங்கவுள்ளோம்

யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்தார்கள். அது எமது இதயங்களை காயப்படுத்தி உள்ளது. நூலகம் எரிக்கப்பட்டது இனவாதத்தின் உச்சமாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதற்காகவே நூலகத்தை புனரமைக்க நிதி ஒதுக்கியுள்ளோம்

நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகின்றார்கள் அவர்கள் வடக்கு செல்வது குறைவாக உள்ளது.

அதனால் நாம் உள்ளூர் விமான சேவைகளை வலுப்படுத்த உள்ளோம். அதன் ஊடாக சுற்றுலா பயணிகளை வடக்குக்கு செல்ல வைக்க முடியும். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அழகிய கடற்கரைகள் உள்ளன. அவற்றினை சுற்றுலா தளங்களாக மேம்படுத்துவோம்

அதேவேளை யாழ்ப்பாணத்தின் அதன் பாரம்பரியம் கலாசாரம் பண்பாடு ஆகியவற்றை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தை மீள கட்டி எழுப்புவோம்.

வடக்கு கடற்பரப்பில் உள்ள கடல் வளங்களை அழிக்க அனுமதிக்க மாட்டோம். அந்த கடல் வளங்களை நம்பி பெருமளவான கடற்தொழிலாளர்கள் உள்ள போது, அந்த வளங்களை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அனுமதிக்க முடியாது.

வடக்கு கடல் வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை எடுங்கள் என கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம்.

வடக்கில் இருந்து பலர் புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் மீள நாட்டிற்கு வர வேண்டும். எமது நாட்டினை கட்டியொழுப்ப தங்கள் முதலீடுகளை நாட்டில் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நாட்டை கட்டியெழுப்ப நாட்டிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

The post புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் – ஜனாதிபதி அநுர அழைப்பு appeared first on Oruvan.com.

யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்
தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இளைஞன் குளத்தில் தாமரைப்பூ பறித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று (18) அதிகாலை வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். வரணி பகுதியை சேர்ந்த 18 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

The post யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம் appeared first on Oruvan.com.

யாழில் ஊடக சந்திப்பிற்கு வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழில் இன்று இடம்பெற்றதாக அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது .

ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இது உயர் பாதுகாப்பு வலயம் எனவும் இங்கு கூட்டம் கூட முடியாது எனவும் ஊடக சந்திப்பு ஏற்பாட்டாளர்களுடன் பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முரண்பாட்டில் ஈடுபட்டார்.

தாம் எமது காணிகள் விடுவிப்பை வலியுறுத்தி ஊடக சந்திப்பை நடாத்தவே வந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களின் தேசிய அடையாள அட்டையை வாங்கி பெயர்களை பதிவு செய்த பொலிஸார் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களை காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர்.

இவற்றை காணொளியை எடுத்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் காணொளி எடுத்தனர்.

ஊடகவியலாளர் சந்திப்பை முடித்து விரைவாக செல்லுமாறு அங்கு வந்திருந்தவர்களுடன் பொலிஸார் தொடர்ச்சியாக தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

https://oruvan.com/wp-content/uploads/2025/04/jaffna.mp4

The post யாழில் ஊடக சந்திப்பிற்கு வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார் appeared first on Oruvan.com.

யாழில் மணல் ஏற்றி சென்ற டிப்பரை துரத்திய பொலிஸார் – தடம்புரண்டு விபத்து
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தி சென்ற போது , வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாண நகர் பகுதியை நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது, பொலிசாரின் உத்தரவை மீறி , டிப்பர் வாகனத்தை சாரதி மிக வேகமாக துரத்தி சென்றுள்ளார்.

வாகனம் நல்லூர் பின் வீதி வழியூடாக சென்று வீதி வளைவில் திரும்ப முற்பட்ட வேளை வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து, வீடொன்றின் மதிலை உடைத்து , வீதியில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கு உள்ளான வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post யாழில் மணல் ஏற்றி சென்ற டிப்பரை துரத்திய பொலிஸார் – தடம்புரண்டு விபத்து appeared first on Oruvan.com.

யாழில். மேலும் பல இடங்களில் வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும்
யாழ்ப்பாணத்தில் மேலும் பல இடங்களில் வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என மாவட்ட செயலர் கோரியுள்ளார்.

தேசிய போக்குவரத்து நிறுவக செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு கோரினர்.

இச்செயலமர்வில் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் தலைவர் வைத்திய கலாநிதி அரோஷா வித்திய பூஷண, பணிப்பாளர் ரி. ஜி. லக்ஷ்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் 06 வீதி சமிக்கைகளே உள்ளதாகவும், மேலும் பல இடங்களில் வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளதாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இவ் விடயம் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் தலைவர் வைத்திய கலாநிதி அரோஷா வித்திய பூஷண வீதிப் போக்குவரத்து விதிகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

மோட்டார் போக்குவரத்து உதவி ஆணையாளர் அ. கிருபாகரன், வீதிப் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

The post யாழில். மேலும் பல இடங்களில் வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் appeared first on Oruvan.com.

வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை
வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான ந.பொன்ராசா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

அரச உத்தியோகத்தரான அவர் அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது வீதியில் நின்ற வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை மறித்து மது போதையில் செல்வதாகக் கூறி சோதிப்பதற்காக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்ல முற்பட்டனர் என்றும் அதற்கு தாம் மறுப்பு தெரிவித்தபோது தாக்க முற்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2005.04.04 அன்று பிற்பகல் அலுவலக பணி முடித்து பால்மா பேணி ஒன்றையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றேன். இதன்போது மாலை 6.50 மணியளவில் மூளாய் காளி கோயிலுக்கு சமீபமாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரு பொலிஸார் நின்றனர்

(அவர்களின் சீருடை இலக்கம் 70853, 84310) (அவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கம் 2794) நான் இடதுபுறமாக சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் வலது பக்கத்தில் ஒரு இளைஞனை மறித்து வைத்து கதைத்துக்கொண்டு நின்றனர்.

என்னைக் கண்டதும் இடது பக்கம் வந்த பொலிஸார் என்னை மறித்து எங்கே போகின்றீர்கள்? எங்கிருந்து வருகின்றீர்கள்? என்ன வேலை செய்கிறீர்கள்? என விசாரித்துவிட்டு சாரதி அனுமதிப்பத்திரம் காப்புறுதிப் பத்திரம் போன்றவற்றை என்னிடம் இருந்து வாங்கினர். ஏன் விசாரிக்கிறீர்கள் எனக் கேட்டேன்.

இதன்போது ஒரு பொலிஸார் தனது இடது கையை நீட்டி உள்ளங்கையில் ஊதுமாறு பணித்தார். சாராயம் குடித்திருக்கிறாய் சோதிக்கவேண்டும் என்றனர். எங்கே பார்ட்டிக்கு போய் வருகின்றாய் எனக் கேட்டனர்.

கையில் ஊதினால் எப்படி சோதிக்க முடியும்? பலூனில் தானே சோதிப்பது எனக் கேட்டேன். நான் திருப்பி கதைத்தவுடன் எனது மோட்டார் சைக்கிளைப் பூட்டி திறப்பை எடுத்துக்கொண்டனர்.

என்னை பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்போவதாக அச்சுறுத்தினர். அடிக்க முற்பட்டனர். தமது மோட்டார் சைக்கிளை இயக்கி என்னை இடிப்பதற்கு முற்பட்டனர்.

எனது மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையம் கொண்டுச் செல்லப்போவதாகவும் என்னை இறங்குமாறும் அச்சுறுத்தினர்.

இதன்போது நான் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பை மேற்கொண்டு இந்த இரு பொலிஸாரின் அச்சுறுத்தல் தொடர்பாக முறைப்பாடு செய்தேன். ஆனால் அங்கிருந்து எனக்கு சாதகமாக பதில் அளிக்கப்படவில்லை.

என்னை மிரட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் இலக்கத்தை நான் குறிப்பெடுத்தபோது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பின்பக்கம் திரும்பி குனிந்து நின்று தனது ஆசனவாய்ப்பகுதியைக்காட்டி அதற்குள் இலக்கம் இருக்கு எடுக்குமாறு மிகக் கேவலமாக முறையில் நடந்துகொண்டார்.

என்னை பலமுறை தாக்க முற்பட்டனர். நான் பொலிஸ் நிலையம் செல்ல மறுத்தபோது பொலிஸ் வாகனத்தைக் கொண்டுவருமாறு தொலைபேசியில் யாருக்கோ கூறினர். 10 நிமிட நேரம் என்னை வீதியில் வைத்து அச்சுறுத்தினர்.

பின்னர் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடினர். அவர் எனது விபரத்தைக் கேட்டறிந்து நான் ஒரு ஊடகவியலாளர் என இவர்களுக்கு கூறினார். இதன் பின்னர் எனது ஆவணங்களைக் கையளித்துவிட்டு இது உனக்கு இறுதி எச்சரிக்கை என அச்சுறுத்திவிட்டு சென்றனர்.

நான் வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர். ஊடகவியலாளர், அரச உத்தியோகத்தர், சமூக செயற்பாட்டாளன்.

எனக்கே வீதியில் இந்த நிலை என்றால் ஏனைய சாதாரண அப்பாவிப் பொதுமக்களை பொலிஸார் எவ்வாறு நடத்துவார்கள்? அவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம்?

வட்டுக்கோட்டை பொலிஸார் ஏற்கனவே, சித்தங்கேணியை சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞரை பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கி படுகொலை செய்தனர். மேலும் பலரை சித்திரவதைக்கு உட்படுத்தியிருக்கின்றனர்.

கடந்த வருடம் பொன்னாலையில் அன்றாடச் சீவியத்திற்கே கஷ்டப்படும் அப்பாவிக் குடும்பம் ஒன்று குழாய்க் கிணறு வெட்டியபோது அனுமதி எடுக்கவில்லை எனக் காரணம் கூறி அவர்களிடம் இருந்து 8,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பறித்து சென்றனர்.

இவ்வாறு இவர்களின் அராஜகம் தொடர்ந்து செல்கின்றனர்.

எனவே, என்னை அச்சுறுத்திய மேற்படி இரு பொலிஸாருக்கும் கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்த எமது பிரதேச மக்களைப் பாதுகாக்குமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை appeared first on Oruvan.com.

யாழில் வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்த குருக்கள் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்து, பாம்பினை காப்பாற்ற முயன்றவர் பாம்பு தீண்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

புத்தூர், சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் சர்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இரவு, இவரது வீட்டின் முற்றத்தில் காணப்பட்ட வலைகளுக்குள் நாக பாம்பு ஒன்று சிக்கி தவித்துக்கொண்டிருந்தது.

இதனை அவதானித்த அவர், வலைகளுக்குள் சிக்கி இருந்த நாக பாம்பினை வெற்று கைகளால் பிடித்து காப்பாற்ற முற்பட்ட வேளை பாம்பு அவரை தீண்டியுள்ளது.

அதனை அடுத்து , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார்

The post யாழில் வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்த குருக்கள் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம் அதிகரித்துள்ளன
சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது ஆளுநரிடம், யுனிசெப் அமைப்பு முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தமது கள நிலைமை ஆய்வு தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

1991ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபராக தான் பதவியேற்ற காலத்திலிருந்து யுனிசெப் அமைப்பு பல்வேறு வகையான உதவிகளை எமது மக்களுக்குச் செய்து வருகின்றது. அதற்கான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம் என்பன முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளன.

மேலும், வடக்கு மாகாணம் தற்போது புதிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. பாடசாலை இடைவிலகல்கள் அதிகரித்துள்ளன. சிறுவர் இல்லங்களுக்கு சிறுவர்களை சேர்க்கும் போக்கு அதிகரித்துச் செல்கின்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பொருளாதாரப் பாதிப்பால் ஏற்பட்ட வறுமை நிலைமை ஒரு காரணமாக உள்ளபோதும், பெற்றோர் மறுமணம் செய்வதால்தான் பெரியளவு பாதிப்பு ஏற்படுகின்றது. சிறுவர் இல்லங்களில் சிறுவர்களை இணைப்பதை ஊக்குவிக்கவேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் சிறுவர் இல்லங்களை நோக்கி வருபவர்களை இணைக்காமல்விட்டாலும், பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன.

எனவே இது எமக்கு சிக்கலான நிலைமையாக உள்ளது என ஆளுநர் சுட்டிக்காட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் யுனிசெப்பின் சிறுவர் பாதுகாப்பு தலைமை அதிகாரி ரியோனா அஸ்லான்சிவிலுடன் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

The post வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம் அதிகரித்துள்ளன appeared first on Oruvan.com.