isreal Archives - Oruvan.com

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் படுகாயம்
இஸ்ரேலின் பீயேர்ஷெபா குடியிருப்புப் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பீயேர்ஷெபா பகுதிக்கு ஈரான் ஏவிய ஏவுகணையை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஏவுகணையின் பாகங்கள் குறித்த இலங்கை பெண் பணிபுரிந்த வீட்டின் மீது விழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காயமடைந்த பெண் சொரோகா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு லேசான காயங்களே ஏற்பட்டிருந்ததால், வைத்திய ஆலோசனையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.

அவரது நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என்றும், காயமடைந்த இலங்கை பெண் அந்த வீட்டில் பராமரிப்பாளராக பணிபுரிந்து வந்ததாக இலங்கை தூதுவர் நிமால் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

The post ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் படுகாயம் appeared first on Oruvan.com.

பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை இஸ்ரேல் செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தீர்க்கமான முடிவுக்கு வரும் என இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும், இஸ்ரேலும் தங்களின் பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிப்பதன் மூலம் தங்கள் பாதுகாப்பு கூட்டாண்மையை விரிவுப்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்பது ஆண்டுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கொண்ட பயணத்தின் போது இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு மூலோபாய கூட்டாண்மையாக மேம்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்! appeared first on Oruvan.com.

இஸ்ரேல் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்க கடும் கண்டனம்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் விரிவாக்க நடவடிக்கைகளைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் சபையின் 85 உறுப்பு நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

சர்வதேச சட்டங்களுக்கு முரணான இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை வல்லரசு நாடுகளும், பல அண்டை நாடுகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.

குறிப்பாக, மேற்குக் கரையில் இஸ்ரேல் மீண்டும் நிலப் பதிவுகளை ஆரம்பித்துள்ளமையானது, பாலஸ்தீன நிலங்களை உத்தியோகபூர்வமாகத் தன்னுடன் இணைக்கும் முயற்சி எனப் பாலஸ்தீனம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் கண்டன அறிக்கையில் சீனா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

இருப்பினும், ஐநாவுக்கான பாலஸ்தீனத் தூதரகம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் இந்தியாவும் இலங்கையும் இடம்பெறவில்லை.

சர்வதேச மட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராகப் பெரும் கண்டன அலை எழுந்துள்ள போதிலும், இலங்கை இந்தப் பட்டியலில் இணையாமல் தவிர்ந்துள்ளமை அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post இஸ்ரேல் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்க கடும் கண்டனம்! appeared first on Oruvan.com.

இஸ்ரேலிய ஜனாதிபதியின் அவுஸ்திரேலியா பயணத்திற்கு கடும் எதிர்ப்பு
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் (Isaac Herzog) அவுஸ்திரேலியப் பயணத்திற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் Bondi தாக்குதலில் பாதிக்கப்பட்ட யூத சமூகத்திற்கு ஆதரவளிக்கவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இருப்பினும், காசா போரில் 70,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதால், இந்தப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என சுயேச்சை மற்றும் பசுமைக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நாட்டின் ஒற்றுமைக்காக இந்த வருகை அவசியம் என அவுஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் தெரிவித்துவரும் நிலையில், சிட்னி போன்ற முக்கிய நகரங்களில் பாரிய போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதால் பாதுகாப்பு உச்சகட்டமாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post இஸ்ரேலிய ஜனாதிபதியின் அவுஸ்திரேலியா பயணத்திற்கு கடும் எதிர்ப்பு appeared first on Oruvan.com.

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் – 33 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள விமானத் தாக்குதல்களில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.

அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா நகரம், பெய்ட் லாஹியா, அல்-புரைஜ், நுசைரத் மற்றும் கான் யூனிஸ் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், பாடசாலைகள் மற்றும் குடியிருப்புத் தொகுதிகள் இவ்வாறு தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், செவ்வாயன்று காசாவில் இஸ்ரேலிய வீரர்களைத் தாக்கியதாகவும், இறந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அனுப்புவதற்கான விதிமுறைகளை மீறியதாகவும் ஹமாஸ் மீது குற்றம் சாட்டினார்.

எவ்வாறாயினும்,  இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் “எந்தத் தொடர்பும்” இல்லை என்றும், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் ஹமாஸ் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, “தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும்  மிகவும் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருவதாக” காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“காணாமல் போனவர்களில் சிலர் இன்னும் இடிபாடுகளுக்குள் உள்ளனர் எனவும், இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “பலமான தாக்குதல்களுக்கு” உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தாக்குதல் உத்தரவிற்கான காரணங்களைக் குறிப்பிடவில்லை.

எவ்வாறாயினும், செவ்வாயன்று காசாவில் இஸ்ரேலிய வீரர்கள் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் ஹமாஸ் “எச்சரிக்கை எல்லையை” கடந்து விட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post காசாவில் இஸ்ரேல் தாக்குதல் – 33 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்
பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என இராணுவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர போர் நடக்கிறது. ஹமாஸ் படையினர் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இவர்களில் சிலர் இறந்து விட்டனர். பலர் மீட்கப்பட்டனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் வசம் இருக்கின்றனர்.

அவர்களை மொத்தமாக விடுவித்தால் போரை நிறுத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பிணைக்கைதி ஒருவர் தனது புதைகுழியை தோண்டும் அதிர்ச்சி காணொளியை ஹமாஸ் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது,

‘ பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். புதிய உத்தரவைப் பின்பற்ற வேண்டும்.

பிணைக்கைதி புதைகுழி தோண்டும் காணொளி வெளியிட்டதை பார்க்கும்போது, ஹமாஸ் என்ன விரும்புகிறது என்பதை நான் சரியாகப் புரிந்துகொள்கிறேன். அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை விரும்பவில்லை.

இந்த திகில் வீடியோக்களைப் பயன்படுத்தி எங்களை வேதனையடைய செய்ய விரும்புகிறார்கள். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் ராணுவத்திற்கு உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

அதேவேளை, போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் உடனடியாக உடன்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

The post காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் appeared first on Oruvan.com.

காசாவில் உணவு வாங்க வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – 24 மணி நேரத்தில் 116 பேர் பலி
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் இஸ்ரேல் காசா மக்களை தொடர்ந்து படுகொலை செய்கிறது. உணவு வாங்க வரும் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.

காசா மக்களைக் கொல்ல ஐ.நா. உணவு விநியோக மையங்களை இஸ்ரேல் மரணப் பொறிகளாக மாற்றுகிறது. காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் 35 நாள் குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தது.

மருத்துவமனையின் இயக்குனர் முகமது அபு சலாமியா இந்த மரணத்தை அறிவித்தார். இதன் மூலம் சனிக்கிழமை காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

காசாவில் 17,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பல மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பியுள்ளன.

இதற்கிடையில், இஸ்ரேலிய தாக்குதல்களில் 116 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 38 பேர் உணவு விநியோக மையங்களை அடையும் போது கொல்லப்பட்டனர்.

கான் யூனிஸின் வடமேற்கே உள்ள உணவு விநியோக மையத்திலும், ரஃபாவிற்கு அருகிலுள்ள ஒரு மையத்திலும் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.

அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளையால் நடத்தப்படும் உணவு விநியோக மையங்களில் குறைந்தது 900 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காசாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று தங்கள் மேல்நிலைப் பாடசாலைத் தேர்வுகளை எழுதினர்.

இந்தத் தேர்வுகள் அவர்களின் பல்கலைக்கழகப் படிப்பு கனவை நோக்கிய முதல் படியாகும். இந்தத் தேர்வுகள் இந்த மாத தொடக்கத்தில் சனிக்கிழமை நடைபெறும் என்று காசா கல்வித் துறை அறிவித்துள்ளது.

2023 அக்டோபர் மாதம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதிலிருந்து காசாவில் தேர்வு நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

1,500 மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்துள்ளதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது. சிறப்பு மென்பொருளைப் பயன்படுத்தி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.

The post காசாவில் உணவு வாங்க வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – 24 மணி நேரத்தில் 116 பேர் பலி appeared first on Oruvan.com.

இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் – 100 ட்ரோன்களை ஏவியுள்ளதாக தகவல்
ஈரானிய தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களுக்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, ஈரான் சுமார் 100 ட்ரோன்களை இஸ்ரேலுக்குள் ஏவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தாக்குதல்களை முறியடிக்க அதன் வான் பாதுகாப்பு அமைப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் கூறுகையில், ஈரான் “சுமார் 100 ட்ரோன்களை இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ஏவியது” என்று கூறுகிறார்.

எனினும், அவற்றை இடைமறிக்க பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு நடந்த தாக்குதல்களில் ஈரானிய இராணுவத்தின் தலைமைத் தளபதி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மற்றும் ஈரானின் அவசரகால கட்டளைத் தளபதி ஆகியோர் கொல்லப்பட்டதாக டெஃப்ரின் மேலும் கூறுகிறார்.

புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்களும் முன்னதாக செய்தி வெளியிட்டன.

இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஈரானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் – 100 ட்ரோன்களை ஏவியுள்ளதாக தகவல் appeared first on Oruvan.com.

ஈரானை தாக்கியது இஸ்ரேல் – அவசர நிலை அறிவிப்பு
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் போர் வெடித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதன்படி, ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்க ஈரானிய அணு இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அதிகாலை அறிவித்துள்ளது.

ஈரானின் பல்வேறு பகுதிகளில் அணு ஆயுத இலக்குகள் உட்பட டஜன் கணக்கான இராணுவ இலக்குகளைத் தாக்கிய முதல் கட்டத் தாக்குதலை IAF ஜெட் விமானங்கள் நிறைவு செய்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கு ஆபத்தான விரிவாக்கத்தின் விளிம்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவித்துள்ளது என்று அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

களத்தில் நிலைமை வேகமாக மாறி வருகிறது, கெர்மன்ஷா, லோரெஸ்தான் மற்றும் தலைநகர் தெஹ்ரானின் சில பகுதிகள் உட்பட பல ஈரானிய மாகாணங்களில் பல வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

அவசர சேவைகள் குவிக்கப்பட்டுள்ளன, மேலும் ஈரானிய இராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உயர் இராணுவ மற்றும் அணுசக்தி பிரமுகர்களை குறிவைத்து கொலை செய்வது ஏற்கனவே நிலையற்ற சூழ்நிலையை மேலும் தூண்டிவிட்டுள்ளது.

இந்த விரிவடையும் நெருக்கடி பிராந்தியத்தின் புவிசார் அரசியல் நிலப்பரப்பை வியத்தகு முறையில் மாற்றியமைக்கக்கூடும் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

The post ஈரானை தாக்கியது இஸ்ரேல் – அவசர நிலை அறிவிப்பு appeared first on Oruvan.com.

காசாவுக்கு உதவிக்காக சென்ற கப்பலை இஸ்ரேல் கைப்பற்றியது
மூன்று மாதங்களாக முற்றுகையிடப்பட்ட காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மேடலின் என்ற கப்பலை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.

அந்தக் கப்பல் இஸ்ரேலின் ஆஷ்டோட் துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சுதந்திர புளோட்டிலா இயக்கத்தின் ஒரு பகுதியாக, காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் தலைமையிலான 12 தன்னார்வலர்களை அந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது.

இஸ்ரேல் முற்றுகையை நீக்கி காசாவிற்கு ஒரு மனிதாபிமான வழித்தடத்தைத் திறக்கும் என்று துன்பெர்க் கூறியிருந்தார். மேடலின் கப்பல் காசா கடற்கரையை அடைவதைத் தடுக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்திருந்தது.

கப்பலைக் கைப்பற்றி அதைத் திருப்பிய இஸ்ரேல், அந்தப் பயணத்தை ‘பிரபல செல்ஃபி கப்பல்’ என்று கேலி செய்துள்ளது.

கப்பலில் உள்ள பயணிகள் காசாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு உறுப்பினர் ரிமா ஹாசன், நடிகை லியான் கன்னிங்ஹாம் மற்றும் ஜெர்மன் மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் அகார் ஆகியோரும் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இணைந்துள்ளனர்.

சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேலிய முற்றுகையை உடைக்கும் அதே வேளையில், இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை உலகிற்கு அம்பலப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.

இந்த பயணத்தை ஃப்ரீ காசா இயக்கத்தின் காசா ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா ஏற்பாடு செய்துள்ளது. ஜூன் முதலாம் திகதி இத்தாலியின் மத்திய தரைக்கடல் தீவுப் பகுதியான சிசிலியிலிருந்து கப்பல் பயணத்தை ஆரம்பித்திருந்தது.

இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் காசாவில் தனது படுகொலைகளை நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், காசாவில் 108 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உணவு தேடிய மக்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எரிபொருள் துண்டிக்கப்பட்டால் மீதமுள்ள காசாவின் மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. கான் யூனிஸில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் எட்டு குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

ரஃபாவில் உள்ள இரண்டு காசா மனிதாபிமான அறக்கட்டளை உணவு விநியோக மையங்கள் மீது நடத்தப்பட்ட புதிய ஷெல் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவில் சுகாதார அமைப்பு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவி அதிகாரிகள் காசா இனப்படுகொலையின் மிக மோசமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக எச்சரித்தனர்.

The post காசாவுக்கு உதவிக்காக சென்ற கப்பலை இஸ்ரேல் கைப்பற்றியது appeared first on Oruvan.com.