Ishara Sewwandi Archives - Oruvan.com

இஷார செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு விளக்கமறியல்
பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலையின் முக்கிய சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷார செவ்வந்திக்கு உதவிதாக கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஷார செவ்வந்திக்கு உதவியமை மற்றும் அவருக்கு தங்குமிடம் வழங்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட நந்த குமார் தக்ஷி மற்றும் பரிதொரு நபரை எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னர் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள், இன்று கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரிகளால் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கு விவரங்களை பரிசீலித்த பின்னர், சந்தேக நபர்கள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி திட்டமிடப்பட்ட அடுத்த விசாரணை வரை காவலில் இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post இஷார செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

செவ்வந்தி மூலம் வெளிப்பட்ட அரசியல் தொடர்புகள் – நாடாளுமன்றில் அமைச்சர் தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“பாதாள குழுவினருக்கு எதிராக பொலிஸார் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுவருகின்றனர். இது சிலருக்கு தலைவலியை கொடுத்துள்ளது. அதனால்தான் பொலிஸாரை இலக்கு வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

பாதாள குழுவினருக்கு எதிரான நடவடிக்கை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பாதாள குழு உறுப்பினர்களுக்கு சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 80 பேருக்கு இவ்வாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களை இந்நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய இராஜதந்திர முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செல்வந்தியை கொண்டுவந்து என்ன செய்தீர்கள் என சிலர் கேட்கின்றனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சில அரசியல் தொடர்புகள் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும்.” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post செவ்வந்தி மூலம் வெளிப்பட்ட அரசியல் தொடர்புகள் – நாடாளுமன்றில் அமைச்சர் தகவல் appeared first on Oruvan.com.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையை திட்டமிட்ட ஐவர்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை ஐந்து நபர்களின் திட்டத்தின்படி, நடத்தப்பட்டுள்ளதாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இராஷா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் பின்னர் கைது செய்யப்பட்டார், மேலும், இந்த சம்பவத்திற்கு உதவிய இராஷாரா செவ்வந்தி நேபாளத்தில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இந்தக் கொலை கெஹல்பத்த பத்மேவால் திட்டமிடப்பட்டது என்பது தெரியவந்துள்ளன, மேலும் இஷாரா செவ்வந்தியும் இந்தக் கொலை தொடர்பான பல விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

கெஹல்பத்த பத்மே, கமாண்டோ சாலிந்த, தரூன், இஷாரா செவ்வந்தி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆகியோர் இந்தத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இஷாரா செவ்வந்தியின் தாயாரின் இறுதிச் சடங்கைப் பதிவுசெய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய இஷாராவின் மாமா பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

அதன்படி, அவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கணேமுல்ல சஞ்சீவவின் கொலையை திட்டமிட்ட ஐவர் appeared first on Oruvan.com.

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்!! கைதாகியுள்ள சட்டத்தரணி தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி, பாணந்துறையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு சாலிந்து மற்றும் ஷிரான் பாசிக் தரூன் உள்ளிட்ட பல பாதாள உலகக் குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தரணி, தற்போது துபாயில் தலைமறைவாக உள்ள கெஹல்பத்தர பத்மேவின் கும்பலின் முக்கய ஒருவராக கருதப்படும் தரூன் என்ற பாதாள உலக நபருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் என்பதையும் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

கல்கிஸை பகுதியில் உள்ள கடற்கரையில் உள்ள அங்கீகரிக்கப்படாத ஹோட்டலை இடித்ததற்காக பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முன்வந்தவரும் இந்த சட்டத்தரணி தான் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இந்த ஹோட்டலானது ஷிரான் பாசிக் என்ற பெரிய போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த சட்டத்தரணி, நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் பாதாள உலகத் தலைவர் என்று கூறப்படும் பாணந்துறை போதைப்பொருள் கடத்தல்காரர் குடு சாலிந்து சார்பாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துபாயில் உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான தரூன் என்பவரின் வேண்டுகோளின் பேரில், நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்கு தேவையான வசதிகளை இந்த சட்டத்தரணி இஷாரா செவ்வந்திக்கு வழங்கியதாக தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையில் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு சட்டத்தரணி தெரிந்தே உதவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த சட்டத்தரணி பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்!! கைதாகியுள்ள சட்டத்தரணி தொடர்பில் வெளியான தகவல் appeared first on Oruvan.com.

இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணி தொடர்பில் வெளியான பகீர் தகவல்
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட சட்டத்தணி, கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான ‘தருன்’ என்ற பாதாள உலகக் குற்றவாளியின் தலைமையில் செயல்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவவை கொல்ல துப்பாக்கியை மறைப்பதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இரண்டு பிரதிகளை இஷாரா செவ்வந்திக்கு இந்த சட்டத்தரணி வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சந்தேக நபர் இஷாரா செவ்வந்திக்கு போலி சட்டத்தரணி அடையாள அட்டை, சட்டத்தரணிகளுக்கான வாகன நுழைவு அனுமதி மற்றும் இரண்டு சட்டத்தரணி டைகளையும் வழங்கியது தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய சட்டத்தரணி கெஹல்பத்தர பத்மேவுக்கும் அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான தருனுக்கும் இடையே சிறிது காலமாக உறவுகளைப் பேணி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த உறவுகளின் அடிப்படையில், பத்மேவின் ஆலோசனையின் பேரில், இந்த சட்டத்தரணி சஞ்சீவவின் கொலைக்கு உதவ முன்வந்துள்ளதாக விசாரணையாளர்களை மேற்கோள்காட் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தருனின் அறிவுறுத்தலின் பேரில், இந்த சட்டத்தரணி இஷாரா செவ்வந்தியைச் சந்தித்து சஞ்சீவவின் கொலைக்குத் தேவையான வசதிகளை வழங்கினார்.

அதன்படி, சஞ்சீவவின் கொலைக்கான துப்பாக்கியை நீதிமன்றத்திற்கு ரகசியமாக எடுத்துச் செல்ல குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இரண்டு பிரதிகள் வழங்கப்பட்டன. கொலையாளி இந்த பிரதிகளில் ஒன்றின் உள் பக்கங்களை வெட்டி, சஞ்சீவவைக் கொலை செய்வதற்காக துப்பாக்கியை அதில் மறைத்து வைத்திருந்தார்.

மேலும், இஷாரா செவ்வந்தி நீதிமன்றத்திற்குள் நுழைவதற்கு சட்டத்தரணிகள் சங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை போலியாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனம் நுழைய சட்டத்தரணிகளுக்கு வழங்கப்படும் வாகன நுழைவு அனுமதிச் சீட்டையும் இந்த சட்டத்தரணி செவ்வந்திக்கு வழங்கியது தெரியவந்துள்ளது.

கொலையைச் செய்த கொமாண்டோ சாலிந்து சட்டத்தரணி உடையை அணிய தேவையான இரண்டு டைகளையும் செவ்வந்திக்கு இந்த பெண் சட்டத்தரணி கொடுத்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அவரை 72 மணி நேரம் காவலில் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

சஞ்சீவ கொலைக்கு உதவிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த சட்டத்தரணி குறித்த தகவல்கள் வெளியாகின.

அதன்படி, கடவத்தை பகுதியில் விசாரணை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, ​​நேற்று முன்தினம் (28) இரவு இந்த சட்டத்தரணி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, பத்மேவும் அவரது கும்பலும் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டபோது தருன் துபாயில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதும் தருன் துபாயில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணி தொடர்பில் வெளியான பகீர் தகவல் appeared first on Oruvan.com.

இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக கூறப்படும் சட்டத்தரணி ஒருவர் கைது
கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக கூறப்படும் பெண் சட்டத்தரணி ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷாரா செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சட்டத்தரணி நேற்று (28) இரவு கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி, வழக்கு விசாரணையொன்றிற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ, அந்த நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவத்தின் துப்பாக்கிதாரி அன்றைய தினமே பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும், துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வந்த இஷாரா செவ்வந்தி என்பவரைக் கைது செய்வதற்கு பாதுகாப்புப் பிரிவினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர்.

இதன்படி, கடந்த 14ஆம் திகதி நேபாளத்தில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பலரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக கூறப்படும் சட்டத்தரணி ஒருவர் கைது appeared first on Oruvan.com.

இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியவர்களுக்கு விளக்கமறியல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை நவம்பர் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் அந்த திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பூசா சிறையில் உள்ள துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும், மற்ற சந்தேக நபர்களையும் ஜூம் தொழில்நுட்பம் மூலம் அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியவர்களுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கைப்பற்றப்பட்டது
கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காகப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப்பிரிவு கைப்பற்றியுள்ளது.

இந்தப் படகு யாழ்ப்பாணம் அராலி கடற்கரையிலிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தப் படகு, இஷாரா இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் ஏ. ஆனந்தனுக்குச் சொந்தமான 400 குதிரைத்திறன் கொண்ட எஞ்சின் படகு என்பது தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை ஆய்வாளர் கபில காரியவசம் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஆனந்தனிடம் நீண்ட நேரம் முன்னெடுத்த விசாரணையின் அடிப்படையில் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

The post செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கைப்பற்றப்பட்டது appeared first on Oruvan.com.

செவ்வந்தி இந்தியாவிற்கு தப்பிச் செல்ல உதவிய முக்கிய சந்தேக நபர் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரர் செவ்வந்தி யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு உதவியதாகக் கூறப்படும் ஆனந்த, நேற்று (21) கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் வரை அவருக்கு தங்குமிடம் வழங்கிய கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான ஆனந்த, ஜே.கே.பாயின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடல் வழியாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்துவதில் யாழ்ப்பாணப் பிரதிநிதியாகவும் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

செவ்வந்தியை இந்தியாவிற்கு அனுப்புவது தொடர்பான விசாரணை தொடங்கியதிலிருந்து ஆனந்தா கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் பதுங்கி இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது ஆனந்த் கைது செய்யப்பட்டு தற்போது நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணக் கடற்கரையிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்ததாகவும், அவர் மூன்று ஆண்களுடன் ஒரு சிறிய படகில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வந்தியை அழைத்துச் சென்ற படகு இந்தியாவை அடைய ஐந்து நாட்கள் ஆனதாகவும், கடற்படை பாதுகாப்புப் பணியாளர்களைத் தவிர்த்து, படகு பாதுகாப்பாக இந்தியாவை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சென்ற செவ்வந்தியை ஜே. கே. பாய் வந்து பொறுப்பில் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகின்றது.

The post செவ்வந்தி இந்தியாவிற்கு தப்பிச் செல்ல உதவிய முக்கிய சந்தேக நபர் கைது appeared first on Oruvan.com.

தமிழினியாக மாறிய இஷாரா செவ்வந்தி!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் எப்படி தப்பிச் சென்றார் என்பது குறித்த பல உண்மைகளை விசாரணை அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, கொலை சம்பவத்திற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கும் மேலாக மதுகம மற்றும் தங்காலை பகுதிகளில் தான் மறைந்திருந்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தி, இலங்கை பொலிஸ் அதிகாரிகள், உள்ளூர் பொலிஸாருடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது சமீபத்தில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் நான்கு அதிகாரிகளால் சந்தேகநபர்கள் அனைவரும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

அழைத்துவரப்பட்ட அனைவரும் சிறப்புப் பாதுகாப்பின் கீழ் பல பொலிஸ் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதன்படி, இஷாரா செவ்வந்தி, டூப்ளிகேட் இஷாரா என்கிற தக்ஷி, ஜே.கே. பாய் மற்றும் யாழ்ப்பாண சுரேஷ் ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கம்பஹா பாபா களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டார், அதே நேரத்தில் நுகேகொட பாபி மேற்கு தெற்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

உதவி காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் சில்வா என்ற காவல்துறை அதிகாரி ஆகியோர் அக்டோபர் 10 ஆம் திகதி தொடர்புடைய நடவடிக்கைக்காக நேபாளம் சென்றிருந்தனர்.

நேபாளத்திற்கான துணைத் தூதர் சமீரா முனசிங்கவும் அவரது கணவரும் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கியுள்ளதோடு, அந்நாட்டு காவல்துறையினரையும் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, உள்ளூர் புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மற்றொரு தரப்பினர் மூலம் ஜே.கே. பாயைக் கைது செய்தனர்.

இஷாராவைப் பற்றி ரோஹன் ஒலுகலா அவரிடம் கேட்டபோது, ​​அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். ஆனால் பொலிஸார் இஷாராவின் தொலைபேசி எண்ணை அவரிடமிருந்து பெற்றுள்ளனர்.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​இஷாராவின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் ஒலுகலவும் மற்ற காவல்துறை அதிகாரியும் அவரது வீட்டிலிருந்து சுமார் ஐந்து வீடுகள் தொலைவில் தங்கி விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்த இடத்தில் நேபாள காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்தியாவின் பெங்களூரிலிருந்து வந்த தமிழனி என்ற பெண், சம்பந்தப்பட்ட இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு தங்கியிருந்தது தெரியவந்தது.

இதற்காக அவள் மாதத்திற்கு 6,000 நேபாள ரூபாய் செலுத்துகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில் இஷாரா செவ்வந்தி தமிழினியாகக் காட்டிக் கொண்டது தெரியவந்தது.

அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பிறகு, நேபாள பொலிஸாருடன் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்ற ஒலுகல மற்றும் பிற அதிகாரிகள், கீழ் தளத்தில் தங்கி, இஷாராவைக் கைது செய்ய மேல் மாடிக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நேபாள பொலிஸார் இஷாராவை கைது செய்தபோது அவர் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை, பின்னர் ரோஹன் ஒலுகல இராஷா செவ்வந்தி இருந்த இடத்திற்குச் சென்றார்.

பின்னர் ஒலுகல, “உங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார், இதன்போது செவ்வந்தி “ஐயா, எனக்கு இந்த நாடு சலிப்பாக இருக்கிறது” என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

விசாரணையின் போது, ​​கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட பின்னர் சுமார் ஒரு மாத காலமாக மதுகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்ததாக இஷாரா தெரிவித்தார்.

பின்னர் பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் மித்தெனிய பகுதிக்குச் சென்று சுமார் ஒரு மாதம் அங்கேயே தங்கியிருந்தார் என்றும், பெக்கோ சமன் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

பின்னர் அவர் யாழ்ப்பாணம் சென்று, மூன்று நாட்கள் தங்கி, ஜே.கே. பாயுடன் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

இஷாரா கூறுகையில், இந்தியா செல்ல சுமார் ஐந்து மணி நேரம் எடுத்ததாகவும், அவர்கள் ஒரு பெரிய படகில் சிறிது தூரம் பயணித்து, பின்னர் சிறிய படகு ஒன்றில் சென்று இந்தியாவுக்குள் நுழைந்ததாகவும் கூறினார்.

இந்தியாவில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கிய பிறகு, ஜே.கே. பாய் தமிழினி என்ற பெயரில் தனக்காக ஒரு இந்திய அடையாள அட்டையைத் தயாரித்து, பின்னர் நேபாளத்திற்குச் சென்றதாக அவர் கூறினார்.

மேலும் விசாரணையின் போது, ​​ஜே.கே. பாயைத் தவிர, தன்னுடன் மேலும் நான்கு பேர் இருந்ததாக இஷாரா கூறினார்.

அதன்படி, அந்தக் குழுவும் கைது செய்யப்பட்டுள்ளது, மேலும் கைது செய்யப்பட்டவர்கள் கம்பஹா பாபா, நுகேகொட பாபி, யாழ்ப்பாண சுரேஷ் மற்றும் தக்ஷி என்றும் கூறப்படுகிறது.

இதில் தக்ஷி, இஷாரா செவ்வந்தியை ஒத்த தோற்றத்தை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஹல்பத்தர பத்மே கைது செய்யப்படுவதற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு யாழ்ப்பாண சுரேஷும், தக்ஷியும் விமானம் மூலம் நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.

அவர்கள் ஆறு பேரும் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாகவும், பத்மே கைது செய்யப்பட்ட பிறகு அந்தக் குழு ஆறு இடங்களாகப் பிரிந்து சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தக்ஷி என்ற பெண்ணின் விவரங்களைப் பயன்படுத்தி, செவ்வந்தியை ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்ப பத்மே ஏற்பாடு செய்திருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், பத்மே கைது செய்யப்பட்டதிலிருந்து அந்தக் குழு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post தமிழினியாக மாறிய இஷாரா செவ்வந்தி!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் appeared first on Oruvan.com.