Is Deshabandhu Tennakoon allowed to bring food from home for all three meals? Archives - Oruvan.com

தேசபந்து தென்னகோனுக்கு மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி?
சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நேற்று (24) முதல் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

வெலிகம பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன்,உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரை ஏப்ரல் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.

தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி கோரியிருந்தார்.

குறித்த கோரிக்கையை பரிசீலித்த சிறைச்சாலைத் திணைக்களம், வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அவருக்கு அனுமதி அளித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, தேசபந்து தென்னகோனுக்கான மூன்று வேளை உணவு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.

The post தேசபந்து தென்னகோனுக்கு மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி? appeared first on Oruvan.com.