IPL Archives - Oruvan.com

சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிகெல்டன் படைத்துள்ளார்.

வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின் 18 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

சனத் ஜயசூரிய 2008ம் ஆண்டு மும்மை அணி சார்பில் 45 பந்துகளில் சதம் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களை குவித்திருந்தது.

தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் ரியான் ரிகெல்டன் 44 பந்துகளில் தனது சதத்தை நிறைவுசெய்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களை குவித்தார்.

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடிக்கப்பட்ட அதிவேக சதம் மற்றும் அந்த அணியின் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஓட்டம் ஆகிய சாதனைகளை அவர் முறியடித்தார்.

எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன் appeared first on Oruvan.com.

சென்னை அணிக்கு பேரிடி – தொடரில் இருந்து நட்சத்திர பந்து வீச்சாளர் விலகல்
வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் கலீல் அகமது ஐபிஎல் தொடரில் இருந்து விலக்கியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டில் கலீல் அகமது பந்து வீசிய போது வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக இடையில் வெளியேறினார்.

இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்குத் தசைநார் கிழிவுஇருப்பது உறுதியானது.

இதிலிருந்து அவர் மீண்டு வரக் குறைந்தது 10 முதல் 12 வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கலீல் அகமது, காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.

இந்த பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் கலீல் அகமது இடம் பெற்றிருந்தார். சென்னை அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக அவர் செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில், கலீல் அகமதுவுக்குப் பதிலாக மாற்று வீரராக யாரை சென்னை அணி ஒப்பந்தம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

The post சென்னை அணிக்கு பேரிடி – தொடரில் இருந்து நட்சத்திர பந்து வீச்சாளர் விலகல் appeared first on Oruvan.com.

தேர்தல் காரணமாக சென்னையில் சிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு திகதிக்கு மாற்றக்கோரி வழக்கு
சட்​டசபைத் தேர்​தலை முன்​னிட்டு சென்​னை​யில் சூப்​பர் கிங்ஸ் அணி​ பங்​கேற்​கும் இரு ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளை​யும் வேறு திகதி​களுக்கு மாற்​றக்​கோரி, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சேப்​பாக்​கம் – திரு​வல்​லிக்​கேணி தொகுதி வாக்​காளர் டி.பிர​பாகரன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தாக்கல் செய்​துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,

“தமிழகத்​தில் சட்​டசபைத் தேர்​தல் எதிர்வரும் ஏப்​ரல் 23 ஆம் திகதி அன்று நடை​பெறவுள்​ளது. தேர்​தலுக்​கான வேட்​புமனு தாக்​கல் மார்ச் 30 ஆம் திகதி தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் ஏப்ரல் 4 மற்​றும் ஏப்​ரல் 11 ஆம் திகதி​களில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி பங்​கேற்​கும் கிரிக்​கெட் போட்​டிகள் நடை​பெறவுள்​ளது.

தேர்​தல் நேரத்​தில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெறவுள்ள போட்​டிகளை வேறு திபதிக்கு மாற்ற உத்​தர​விட வேண்​டும்.

சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி பங்​கேற்​கும் போட்​டிகளை தேர்​தல் முடிந்த பிறகு நடத்​திக் கொள்ள ஐபிஎல் நிர்​வாகத்​துக்கு அறி​வுறுத்த வேண்​டும்.

சேப்​பாக்​கத்​தில் கிரிக்​கெட் போட்டி நடத்​தப்​பட்​டால் கிரிக்​கெட் போட்​டியைக் காண வரும் இரசிகர்​களுக்​கும், கிரிக்​கெட் வீரர்​களுக்​கும் பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டிய கட்​டா​யம் பொலிஸாருக்கு ஏற்​படும்.

ஐபிஎல் போட்​டிகளின் போது கிரிக்​கெட் இரசிகர்​கள் என்ற போர்​வை​யில் மைதானத்​துக்​குள் தங்​களது சின்​னத்​துடன் கட்சியினர் பிர​ச்சா​ரம் செய்​வர் என்​ப​தால் தேவையற்ற சட்​டம் – ஒழுங்கு பிரச்​சினை ஏற்​படும்.

எனவே, ஏப்ரல் 04 மற்​றும் ஏப்​ரல் 11 ஆம் திகதி​களில் நடை​பெறவுள்ள கிரிக்​கெட் போட்​டிகளை தமிழகத்​தில் தேர்​தல் முடிந்த பிறகு நடத்​திக் கொள்​ளு​மாறு போட்டி ஏற்​பாட்​டாளர்​களை அறி​வுறுத்த தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும்.

ஒரு​வேளை கிரிக்​கெட் போட்​டிகளுக்​கான திகதி​களை மாற்ற முடி​யாது எனக் கூறி​னால் தேர்​தல் நடத்தை விதி​களை கடுமை​யாக அமுல்​படுத்​த​வும், அரசி​யல் கட்​சிகளின் சின்​னங்​கள், கொடிகள் என எதை​யும் மைதானத்​துக்​கு உள்​ளே​யும், வெளி​யே​யும் காட்​சிப்​படுத்த அனு​ம​திக்​கக் கூடாது என ஐபிஎல் நிர்​வாத்​துக்கு உத்​தர​விட வேண்​டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேர்தல் காரணமாக சென்னையில் சிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு திகதிக்கு மாற்றக்கோரி வழக்கு appeared first on Oruvan.com.

தோனியின் சகாப்தம் முடிகின்றதா? இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 2026 ஐபிஎல் சீசனுக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு செய்துள்ளது.

நேற்று நடந்து முடிந்த மினி ஏலத்தில் சுமார் 32 கோடி இந்திய ரூபாயை இரண்டு வீரர்களுக்காக செலவிட்டுள்ளது.

இந்தத் தொகை அணியின் திறன்களை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், தோனிக்குப் பிறகு எதிர்காலத்திற்கு சென்னை அணி தயாராகி வருவதையும் குறிக்கிறது.

தோனியை அணி தக்க வைத்துக் கொண்டிருக்கலாம் என்றாலும், இந்த முதலீடு எதிர்காலத்திற்கான ஒரு உத்தியையும் ஒரு வாரிசை உருவாக்குவதையும் தெளிவாகக் குறிக்கிறது.

நேற்று செலவிட்ட தொகையே இதை பறைசாற்றுகின்றன. 19 வயதான கார்த்திக் சர்மாவை சென்னை 14.20 கோடிக்கு வாங்கியுள்ளது. முன்னதாக, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை 18 கோடிக்கு சென்னை அணி வாங்கியது.

உர்வில் படேலை தக்கவைத்துக் கொண்டதன் மூலம், அணியில் இப்போது நான்கு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்கள் (சஞ்சு சாம்சன், எம்எஸ் தோனி, உர்வில் படேல் மற்றும் கார்த்திக் சர்மா) உள்ளனர்.

2008 முதல் தோனியை மட்டுமே நம்பியிருக்கும் அணிக்கு இந்த நடவடிக்கை நம்பிக்கையை கொடுத்துள்ளது.

தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் சென்னை அணியின் உத்தியில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.

சென்னை அணி தனது மொத்த கையிருப்பான 43.40 கோடியில் 60 வீதத்தை இரண்டு புதிய வீரர்களுக்காக மட்டுமே செலவிட்டது, இது அவர்களின் பாரம்பரிய கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

44 வயதான தோனி தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, ஆனால் அவரது சமீபத்திய அறிக்கைகள் அவரது வாழ்க்கை அதன் இறுதி கட்டத்தில் இருப்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

“நான் என் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன் என்பதில் இருந்து தப்பிக்க முடியாது. நான் என் வாழ்க்கையை முழுமையாக முடித்துவிட்டேன் என்று சொல்லவில்லை.

ஆனால் அடுத்த சீசனுக்கான உறுதியான உறுதிப்பாடுகள் இன்னும் எனக்கு இல்லை.” என்று தோனி அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post தோனியின் சகாப்தம் முடிகின்றதா? இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சென்னை appeared first on Oruvan.com.

ஐபில் மினி ஏலம் – 18 கோடிக்கு வாங்கப்பட்ட மதீஷ பத்திரன
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று இடம்பெற்ற நிலையில், இலங்கை அணியின் மதீஷ பத்திரன 18 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்திருந்தது.

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று மதியம் அபுதாபியில் ஆரம்பமாகியிருந்தது.

ஆரம்பம் முதலே வீரர்களை வாங்குவதில் அணிகள் தீவிரம் காட்டியிருந்தன.

இதில் அவுஸ்திரேலியா அணியின் கெமரூன் கிரீன் 25.2 கோடி இந்திய ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டிருந்தார்.

எனினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

வெங்கடேஷ் ஐயர் ஏழு கோடி ரூபாவிற்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்டிருந்தார்.

இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டிருந்தார்.

இந்த ஏலத்தின் போது சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மதீஷ பத்திரனவை வாங்குவதில் லன்னோ, டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் தீவிரடாக போட்டியிட்டன.

இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post ஐபில் மினி ஏலம் – 18 கோடிக்கு வாங்கப்பட்ட மதீஷ பத்திரன appeared first on Oruvan.com.

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் இன்று ஆரம்பம்
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில்  இடம்பெறவுள்ளது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30க்கு மினி ஏலம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் பங்கேற்றும் 10 அணிகளும் இந்திய மதிப்பில் 237.55 கோடி ரூபாவுடன் இந்த ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ளன.

மொத்தம்  359 வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்வதுடன், அதிகபட்சமாக 10 அணிகளும் மொத்தம் 77 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.

இந்த ஏலத்தில் அதிகூடிய தொகையாக  64.3 கோடி ரூபாவுடன் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி கலந்துகொள்கின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி 2.75 கோடியுடன் மிகச்சிறிய தொகையுடன் ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ளது.

கொல்கத்தா அணிக்கு அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 43.40 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கவுள்ளது.

இந்த ஏலத்தில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கேமரூன் கிரீன் முக்கியத்துவம் பெற்றுள்ளார்.

அவர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெங்கடேஷ் ஐயர், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற வீரர்களும் இந்த ஏலத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.

The post ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் இன்று ஆரம்பம் appeared first on Oruvan.com.

ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெருவதாக ஆன்ட்ரே ரசல் அறிவிப்பு
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆன்ட்ரே ரசல் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த ரசல் அண்மையில் அந்த அணியில் இருந்து அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். கொல்கத்தா அணியின் முக்கிய வீரராக இருந்த ரசல் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ரசல்140 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 174.18 ஸ்ட்ரைக் ரேட்டில் 2,651 ஓட்டங்களை குவித்துள்ளார். அத்துடன் 123 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கொல்கத்தா அணியை தவிர வேறு அணியில் விளையாட விருப்பம் இல்லை எனவும், அடுத்த சீசனில் கொல்கத்தா அணியின் ‘பவர் கோச்’ ஆக செயல்படுவேன் என அவர் தெரிவித்துள்ளார் .

The post ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெருவதாக ஆன்ட்ரே ரசல் அறிவிப்பு appeared first on Oruvan.com.

ஐபிஎல் 2026 – ஏலம் நடைபெறும் இடம் மற்றும் திகதி அறிவிப்பு
ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஏலம் நடைபெறும் இடம் மற்றம் திகதி பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதன்படி மினி ஏலம் டிசம்பர் 16ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 19ஆம் பதிப்பு அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளைக்குள் 10 அணிகளும், ஐபிஎல் நிர்வாகத்திடம் கையளிக்க வேண்டும்.

இதற்கு முன்னதாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.

இதில் சென்னை அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் ஆகியோரை இரு அணிகளும் பரிமாற்றிக்கொள்ளும் விடயம் மிகவும் பேசுபொருளாகியுள்ளது.

இரு அணிகளும் குறித்த இரு வீரர்களையும் பரிமாற்றிக்கொள்ள இணக்கம் கண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையிலேயே மினி ஏலம் நடைபெறும் திகதி மற்றும் இடம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி மினி ஏலம் டிசம்பர் 16ஆம் திகதி அபுதாபியில் நடைபெறுகிறது.

The post ஐபிஎல் 2026 – ஏலம் நடைபெறும் இடம் மற்றும் திகதி அறிவிப்பு appeared first on Oruvan.com.

சஞ்சு சாம்சான் உள்ளே, ஜடேஜா வெளியே!! பாரிய பரிமாற்றத்திற்கு தயாராகும் சிஎஸ்கே
ஐபிஎல் தொடரில் மிகவும் பரபரப்பான வீரர்கள் பரிமாற்றம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சான் சென்னை அணிக்கு வருவது உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஞ்சு சாம்சான் சென்னை அணிக்கு வரும் நிலையில், சென்னை அணியின் தூணாக விளங்கிய ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு செல்லவுள்ளார்.

ஜடேஜாவுடன் சென்னை அணியில் இருந்து சாம் கரனும் ராஜஸ்தானி அணிக்கு பரிமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மூன்று வீரர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீரர்களின் பரிமாற்றத்திற்கான விருப்பம் தற்போது இந்திய கிரிக்கெட் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த 48 மணி நேரத்தில் இறுதி ஒப்புதலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சஞ்சு சாம்சன், ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகிய மூவரும் இந்த பரிமாற்றத்திற்கு இணக்கம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருமே தங்கள் அணிகளில் தலா 18 கோடி ரூபாவிற்கு தக்கவைக்கப்பட்ட (Retained) வீரர்கள் ஆவர்.

இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஜடேஜாவை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர் சென்னை அணிக்கு ‘Gun Player’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.

The post சஞ்சு சாம்சான் உள்ளே, ஜடேஜா வெளியே!! பாரிய பரிமாற்றத்திற்கு தயாராகும் சிஎஸ்கே appeared first on Oruvan.com.

விற்பனைக்கு வருகின்றது ஆர்சிபி அணி!! விபரங்கள் வெளியாகின
ஐபிஎல் தொடரில் பிரபலமான அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விற்பனை செய்யப்படவுள்ளது.

இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அணியை விற்பனை செய்வதற்கான பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக அணி நிர்வாகம் அறித்துள்ளது.

இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில், அணிக்கு இரண்டு பில்லியன் டொலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

18 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் நடப்பு ஆண்டில் இடம்பெற்ற தொடரிலேயே ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.

அணியின் வெற்றியை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் அந்த அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

இவ்வாறான பின்னணியில் அணியை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விற்பனைக்கு வருகின்றது ஆர்சிபி அணி!! விபரங்கள் வெளியாகின appeared first on Oruvan.com.