IPL 2026 Archives - Oruvan.com

சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிகெல்டன் படைத்துள்ளார்.

வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின் 18 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

சனத் ஜயசூரிய 2008ம் ஆண்டு மும்மை அணி சார்பில் 45 பந்துகளில் சதம் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களை குவித்திருந்தது.

தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் ரியான் ரிகெல்டன் 44 பந்துகளில் தனது சதத்தை நிறைவுசெய்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களை குவித்தார்.

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடிக்கப்பட்ட அதிவேக சதம் மற்றும் அந்த அணியின் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஓட்டம் ஆகிய சாதனைகளை அவர் முறியடித்தார்.

எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன் appeared first on Oruvan.com.

ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவரான ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர், ஆனால் சில விடயங்கள் சரியாக அமையவில்லை, அதனால்தான் அவர் அணியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்று பண்டிட் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையின் கீழ், கொல்கத்தா அணி 2024ம் ஆண்டு ஐபிஎல் கிண்ணத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றியது. எனினும், அடுத்த பருவத்தில் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனைடுத்த 2025ம் ஆண்டு இடம்பெற்ற மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தற்போது அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி வருகின்றார்.

ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்த அணியின் தலைவராக இருந்தபோது, ​​சந்திரகாந்த் பண்டிட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.

இந்நிலையிலேயே, ஐயரை விடுவிக்க கொல்கத்தா நிர்வாகம் ஏன் முடிவு செய்தது என்பதை பண்டிட் வெளிப்படுத்தியுள்ளார்.

“துரதிர்ஷ்டவசமாக, எங்களால் ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. ஸ்ரேயாஸ் ஒரு அற்புதமான வீரர், அவர் தலைவராக எங்களுக்குக் கிண்ணத்தை வென்று கொடுத்தார்.

அவர் அணியைக் கையாண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆனால் சில சமயங்களில், சில சூழ்நிலைகள் எழுகின்றன மற்றும் எதிர்காலத் திட்டங்கள் அத்தகைய வீரர்களைக் கைவிட உங்களைக் கட்டாயப்படுத்தும் என சந்திரகாந்த் பண்டிட் மேலும் தெரிவித்துள்ளார்.

The post ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம் appeared first on Oruvan.com.

சென்னை அணிக்கு மற்றுமொரு பேரிடி – தொடரில் இருந்து விலகிய அதிரடி ஆட்ட நாயகன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அண்மையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவருக்கு இடது தொடை தசை நார் காயமடைந்துள்ளதாகவும், இதில் இருந்து குணமடைய ஆறு முதல் 12 வாரங்கள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ் மாத்ரே, முதல் ஆறு போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 177.88 ஸ்ட்ரைக் ரேட்டில், 33.50 சராசரியில் 201 ஓட்டங்களை குவித்திருந்தார்.

சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற ஆயுஷ் மாத்ரேவின் துடுப்பாட்ட முக்கிய காரணமாகும்.

இறுதியாக விளையாடியப் போட்டியிலும் 13 பந்துகளில் 30 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இந்நிலையில், மாத்ரேவிற்கு பதிலாக மாற்று வீரரை தெரிவு செய்ய சென்னை அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் வேகப் பந்து வீச்சாளர் கலீல் அகமது தொடரில் இருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஆயுஷ் மாத்ரே தொடரில் இருந்து விலகியுள்ளமை சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.

The post சென்னை அணிக்கு மற்றுமொரு பேரிடி – தொடரில் இருந்து விலகிய அதிரடி ஆட்ட நாயகன் appeared first on Oruvan.com.

டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை
டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்ததாக இந்திய அணி விளையாடவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர்களில் புதிய வீரர்களை இணைத்துக்கொள்வது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலரும் தங்களின் அபார திறமையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், புதிய வீரர்களை தெரிவு செய்வதில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் புதிய திட்டம் ஒன்றை இந்திய கிரிக்கெட் சபை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீரர்களை இரண்டு அணிகளாக பிரித்து விளையாட வைப்பதே நோக்கமாகும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரே நேரத்தில் பல போட்டிகள் வரவிருப்பதையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏராளமாக டி20 கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறவுள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது சிறந்த 35 வீரர்களை இந்திய கிரிக்கெட் சபை பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை appeared first on Oruvan.com.

சென்னை அணிக்கு பேரிடி – தொடரில் இருந்து நட்சத்திர பந்து வீச்சாளர் விலகல்
வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் கலீல் அகமது ஐபிஎல் தொடரில் இருந்து விலக்கியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டில் கலீல் அகமது பந்து வீசிய போது வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக இடையில் வெளியேறினார்.

இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்குத் தசைநார் கிழிவுஇருப்பது உறுதியானது.

இதிலிருந்து அவர் மீண்டு வரக் குறைந்தது 10 முதல் 12 வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கலீல் அகமது, காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.

இந்த பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் கலீல் அகமது இடம் பெற்றிருந்தார். சென்னை அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக அவர் செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில், கலீல் அகமதுவுக்குப் பதிலாக மாற்று வீரராக யாரை சென்னை அணி ஒப்பந்தம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

The post சென்னை அணிக்கு பேரிடி – தொடரில் இருந்து நட்சத்திர பந்து வீச்சாளர் விலகல் appeared first on Oruvan.com.

சென்னை அணியின் தொடர் தோல்வி – கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்துவரும் அவலநிலைகள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரவி அஸ்வின் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

நேற்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அஸ்வின் இவ்வாறு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

சென்னை அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெறும் முடிவு தனக்கு மிகுந்த வேதனையை அளித்ததாக அஸ்வின் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

“நான் மனதளவில் மிகுந்த சிரமத்தில் இருந்தேன். என்னால் இன்னும் அதிகமாக விளையாடியிருக்க முடியும், ஆனால் அதற்கான ஆற்றல் என்னிடம் இல்லை. நான் சென்னையில் தொடங்கி சென்னையிலேயே முடிப்பேன் என்று நினைத்தேன்.

என்னை அணியில் வைத்திருப்பதா அல்லது விடுவிப்பதா என்ற தலைவலியை நிர்வாகத்திற்குக் கொடுக்க விரும்பாததால், நான் ஓய்வு பெற முடிவு செய்தேன்.

அது அவர்களுக்கு 10 கோடி ரூபாயை சேமிக்க உதவியது என்று அஸ்வின் கூறினார்.

கடந்த ஆண்டு அணியில் நடந்தவை குறித்து அதிகம் பேச விரும்பாத அஸ்வின், அது இன்னும் தன்னை பாதிப்பதாகக் கூறினார்.

அனுபவமிக்க வீரர்களை விலக்கிவிட்டு இளம் வீரர்களை உள்ளே கொண்டுவரும் சென்னை அணியின் உத்தியையும் அஸ்வின் கேள்விக்குள்ளாக்கினார்.

இளம் வீரர்களுக்கு முறையான பயிற்சியையும் சூழலையும் வழங்குவதில் அணி தவறி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் துடுப்பாட்ட வீரர்கள் பலத்தைப் புரிந்து கொள்ளாமல் பந்து வீசுகிறார்கள்.

அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் தங்களுடைய பாணிக்கு மாறான ‘வைட் யோர்க்கர்களை’ வீசியதுதான், டிம் டேவிட் மற்றும் ஏனைய வீரர்கள் சென்னை அணியை வீழ்த்தியதற்கு காரணம் என்றும் அஸ்வின் விமர்சித்தார்.

இந்த பருவத்தில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ளது. அந்த அணியால் தற்போது ஒரு முறையான ஆடும் பதினொருவர் அணியை கூட அமைக்க முடியவில்லை.

நேற்றையப் போட்டியில் பெங்களூருவிடம் அடைந்த தோல்வியும் அணியின் நம்பிக்கையைப் பாதித்துள்ளது.

பெங்களூரு அணி நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர்கள் மற்ற அணிகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்து வருவதாகவும் அஸ்வின் மேலும் தெரிவித்துள்ளார்.

The post சென்னை அணியின் தொடர் தோல்வி – கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின் appeared first on Oruvan.com.

விராட் கோலியின் சாதனையை முறியடித்த சர்மா
ஐபில் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். நேற்றையப் போட்டியில் சர்மா 78 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சர்மா 1,161 ஓட்டங்களை குவித்துள்ளார்.

முன்னதாக, விராட் கோலி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,159 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

அதன்படி, விராட் கோலியின் சாதனையை முறியடித்தசர்மா, தற்போது ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் ஒரே அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,146 ஓட்டங்கள் எடுத்திருப்பதால், விராட் கோலி இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் தக்கவைத்துள்ளார்.

அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,134 ஓட்டங்கள் எடுத்து நான்காவது இடத்தில் உள்ளார்.

இதற்கிடையில், இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா நேற்றைய (29) போட்டியின் போது நான்காவது இடத்தைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

சர்மா இதுரை 273 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 268 இன்னிங்ஸ்களில் 48 அரை சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி 64 அரை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post விராட் கோலியின் சாதனையை முறியடித்த சர்மா appeared first on Oruvan.com.

ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் RCB அணிகள் பெரும் தொகைக்கு விற்பனையானது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் பிரபலமான அணிகளான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கல் சோமானி வாங்கியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோல் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆதித்ய பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு 1.78 பில்லியன் அமெரிக்க டொலருக்கு முழுமையாக வாங்கியுள்ளது.

இந்த கூட்டமைப்பில், டைம்ஸ் ஒஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ், மற்றும் பிளாக்ஸ்டோனின் பெர்ப்பெச்சுவல் பிரைவேட் ஈக்விட்டி” முதலீட்டு நிறுவனம் ஆகியவையும் இணைந்துள்ளன.

எனினும், ஆதித்ய பிர்லா குழுமமே இதற்குத் தலைமை தாங்குகிறது.

இந்த விற்பனையில்ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆண்களுக்கான அணி மற்றும் டபிள்யூ.பி.எல். பெண்களுக்கான அணி ஆகிய இரண்டும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு அணியின் புதிய தலைவராக, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆர்யமன் பிர்லா நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, அமெரிக்க தொழிலதிபர் கல் சோமணி தலைமையிலான கூட்டமைப்பு, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 100 சதவீத பங்குகளை சுமார் 15,286 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் மதிப்புமிக்க அணியாக ராஜஸ்தான் ரோயல்ஸ் உருவெடுத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய தொகைக்கு ஒரு அணி விற்கப்பட்டிருப்பது கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கல் சோமணி, 2021ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சிறு பங்கை தனது வசம் வைத்திருந்தார்.

எவ்வாறாயினும், கல் சோமணி ஐபிஎல் 2026 பருவத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை தன்வசப்படுத்த முடியாது எனவும், 2026 பருவத்திற்கு பின்னர் அணிக்கு உரிமையாளராக மாற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணி விற்பனை செய்யப்பட்ட போதிலும், அணியின் பயிற்சி ஊழியர்களிலோ அல்லது உயர் கிரிக்கெட் நிர்வாகத்திலோ எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இயக்குநராக செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

The post ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் RCB அணிகள் பெரும் தொகைக்கு விற்பனையானது appeared first on Oruvan.com.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் யார்?
ஐபில் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக அவுஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் செயற்பட்டுவரும் நிலையில், முதுகு காயத்தால் அவர் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஐபிஎல் 2026 தொடருக்காக எப்போது அணியில் இணைவார் என்பதும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், பட் கம்மின்ஸுக்குப் பதிலாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக ஆஷஸ் தொடரின் பல போட்டிகளில் பட் கம்மின்ஸ் பங்கேற்றிருக்கவில்லை. மேலும், 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்தும் விலகியிருந்தார்.

டைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகையின் தகவல்படி, நடப்பு ஐபில் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தும் பொறுப்பு இஷான் கிஷனிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அபிஷேக் சர்மா அணியின் துணை தலைவராக நியமிக்கப்படலாம் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் யார்? appeared first on Oruvan.com.

தோனியின் சகாப்தம் முடிகின்றதா? இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 2026 ஐபிஎல் சீசனுக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு செய்துள்ளது.

நேற்று நடந்து முடிந்த மினி ஏலத்தில் சுமார் 32 கோடி இந்திய ரூபாயை இரண்டு வீரர்களுக்காக செலவிட்டுள்ளது.

இந்தத் தொகை அணியின் திறன்களை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், தோனிக்குப் பிறகு எதிர்காலத்திற்கு சென்னை அணி தயாராகி வருவதையும் குறிக்கிறது.

தோனியை அணி தக்க வைத்துக் கொண்டிருக்கலாம் என்றாலும், இந்த முதலீடு எதிர்காலத்திற்கான ஒரு உத்தியையும் ஒரு வாரிசை உருவாக்குவதையும் தெளிவாகக் குறிக்கிறது.

நேற்று செலவிட்ட தொகையே இதை பறைசாற்றுகின்றன. 19 வயதான கார்த்திக் சர்மாவை சென்னை 14.20 கோடிக்கு வாங்கியுள்ளது. முன்னதாக, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை 18 கோடிக்கு சென்னை அணி வாங்கியது.

உர்வில் படேலை தக்கவைத்துக் கொண்டதன் மூலம், அணியில் இப்போது நான்கு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்கள் (சஞ்சு சாம்சன், எம்எஸ் தோனி, உர்வில் படேல் மற்றும் கார்த்திக் சர்மா) உள்ளனர்.

2008 முதல் தோனியை மட்டுமே நம்பியிருக்கும் அணிக்கு இந்த நடவடிக்கை நம்பிக்கையை கொடுத்துள்ளது.

தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் சென்னை அணியின் உத்தியில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.

சென்னை அணி தனது மொத்த கையிருப்பான 43.40 கோடியில் 60 வீதத்தை இரண்டு புதிய வீரர்களுக்காக மட்டுமே செலவிட்டது, இது அவர்களின் பாரம்பரிய கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

44 வயதான தோனி தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, ஆனால் அவரது சமீபத்திய அறிக்கைகள் அவரது வாழ்க்கை அதன் இறுதி கட்டத்தில் இருப்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

“நான் என் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன் என்பதில் இருந்து தப்பிக்க முடியாது. நான் என் வாழ்க்கையை முழுமையாக முடித்துவிட்டேன் என்று சொல்லவில்லை.

ஆனால் அடுத்த சீசனுக்கான உறுதியான உறுதிப்பாடுகள் இன்னும் எனக்கு இல்லை.” என்று தோனி அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post தோனியின் சகாப்தம் முடிகின்றதா? இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சென்னை appeared first on Oruvan.com.