IPL 2025 Archives - Oruvan.com

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு!!! சறுக்கியது சென்னை… முதலிடத்தில் ஆர்சிபி
கிரிக்கெட் உலகில் இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுக்க வரவேற்பு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் மதிப்பு ஏறுமுகத்தில் தான் செல்கிறது.

அதிலும் நடப்பாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக பட்டம் வெல்லாத பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதனால் ஐபிஎல்-லின் பிராண்ட் மதிப்பு மட்டுமின்றி, பெங்களூர் அணியின் பிராண்ட் மதிப்பும் உயர்ந்துள்ளது. ஆனால் எப்போதும் முன்னணியில் இருந்த சென்னை அணியின் பிராண்ட் மதிப்பு இம்முறை சறுக்கியுள்ளது.

ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார் விராட் கோலி. தரமான வீரர்கள் இருந்தும் 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த பெங்களூர் அணிக்கு, 2025 இல் தான் விடிவுகாலம் பிறந்தது.

இறுதிப்போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூர் அணியின் பிராண்ட் மதிப்பு சந்தையில் தற்போது 2,306 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

முதலீட்டு வங்கி நிறுவனமான ‘ஹூலிஹன் லாகி’ ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிடும். அதேபோல் நடப்பாண்டும் மதிப்பீடு செய்து தனது அறிக்கையை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் பெங்களூர் அணியும், இரண்டாம் இடத்தில் 2,076 கோடி ரூபா பிராண்ட் மதிப்புடன் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளன.

முந்தைய ஆண்டுகளில் முதலிடத்தில் இருந்து வந்த சென்னை அணி 2,015 கோடி ரூபா பிராண்ட் மதிப்புடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இம்முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிராண்ட் மதிப்பு கிட்டத்தட்ட 39.6% உயர்ந்து, 1,209 கோடி ரூபாயாக உள்ளது.

ஐபிஎல் பிராண்டுக்கான தனி மதிப்பு மட்டும் 13.8 வீதம் உயர்ந்து 33,440 கோடி ரூபாயாக உள்ளது. ஐபிஎல் தொடரின் ஊடகம், விளம்பரம் மற்றும் வர்த்தகம் என அனைத்தையும் கணக்கிட்டால் இதன் ஒட்டுமொத்த மதிப்பு 12.9 வீதம் உயர்ந்து 1.6 இலட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு

1. ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ரூ.2,306 கோடி

2.மும்பை இந்தியன்ஸ் – ரூ.2,076 கோடி

3. சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.2,015 கோடி

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ.1,947 கோடி

5. சன் ரைசர்ஸ் ஐதராபாத் – ரூ‌.1,320

6. டெல்லி கேபிடல்ஸ் – ரூ.1,303 கோடி

7. ராஜஸ்தான் ரோயல்ஸ் – ரூ.1,252 கோடி

8. குஜராத் டைட்டன்ஸ் – ரூ.1,217 கோடி

9. பஞ்சாப் கிங்ஸ் – ரூ.1,209 கோடி

10. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – ரூ.1,046 கோடி.

The post ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு!!! சறுக்கியது சென்னை… முதலிடத்தில் ஆர்சிபி appeared first on Oruvan.com.

சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை… 35 வயது வீரரையும் வாங்கும் சென்னை அணி?
ஐபிஎல் 2025 சீசன் முடிவடைந்தாலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் டிரேடிங் செயல்முறைகள் தான் தற்போது அதிக கவனம் பெறுகின்றன. ஏனெனில், இந்த டிரேடிங் முறையின் மூலம் அணிகள், எதிர்கால சீசனுக்கான தங்களின் பிளேயிங் லெவனை வலுப்படுத்த திட்டமிடுகின்றன.

அந்தவகையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தங்கள் அணிக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 35 வயது ஸ்டோய்னிஸின் ஆட்டத்திறமை மீது சென்னை அணி உயர்ந்த நம்பிக்கையுடன் உள்ளது.

2025 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயாண்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டோய்னிஸ், சென்னைக்கு எதிரான போட்டியில் சென்னையின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சதம் விளாசியதும், அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததும் இன்னும் ரசிகர்கள் நினைவில் உள்ளது.

அதன் பின் அவரைத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க விருப்பமாக இருந்ததாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துடுப்பாட்டத்தில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் திறமையுடன் செயல்படக்கூடிய ஸ்டோய்னிஸை டிரேடிங் முறையில் கைப்பற்றுவதற்கு சென்னை அணி தீவிரமாக முனைந்துள்ளது.

இதற்காக பஞ்சாப் அணியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸை பஞ்சாப் கேட்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஏற்கனவே எல்லிஸ், பஞ்சாப் அணிக்காக விளையாடிய அனுபவம் உள்ளவர் என்பதால், இந்த பரிமாற்றம் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ராஜஸ்தான் அணியின் அணியின் சஞ்சு சாம்சன், குஜராத் அணியின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் பினிஷர் ராகுல் தெவட்டியாவையும் சென்னை அணி இலக்காகக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சென்னை அணி தங்கள் அடுத்த சீசனுக்கான அணியை மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் உருவாக்கிக்கொண்டு இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

மொத்தத்தில், 2026 சீசனுக்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலுவூட்டும் நடவடிக்கைகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

The post சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை… 35 வயது வீரரையும் வாங்கும் சென்னை அணி? appeared first on Oruvan.com.

யாஷ் தயாள் என்னை ஏமாற்றவிட்டார் – பெண் பரபரப்பு புகார்
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள்க்கு எதிராக உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் திருமண மோசடி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, அம்மாநில முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு முறைப்பாடு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தன்னுடன் நன்றாக பழகிய யாஷ் தயாள், திருமண ஆசை காட்டி, பல மோசடிகளை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நானும், யாஷ் தயாளும் நன்றாக பழகினோம். திருமணம் செய்துகொள்கிறேன் எனக் கூறி, அவரது குடும்ப நபர்களிடம் என்னை ‘மருமகள்’ என அடையாளப்படுத்தினார்.

இதனை நம்பி அவரிடம் பல வழிகளில் ஏமாந்துவிட்டேன். பணத்தையும் இழந்தேன், என்னையையும் இழந்தேன். ஐந்து ஆண்டுகள் நன்றாக பழகிய நிலையில், தற்போது அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.

என்னுடன் அடிக்கடி சண்டை போட ஆரம்பித்தார். மேலும், திருமணம் செய்துகொள்ள முடியாது எனக் கூறிவிட்டார். அதன்பின்னர் தான், எனக்கு ஒரு உண்மை தெரிய வந்தது, அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது.

இதுகுறித்து, ஜூன் 14ஆம் திகதி 181 என்ற பெண்கள் உதவி எண்ணிற்கு அழைத்தேன். இதுகுறித்து முறைப்பாடும் செய்திருந்தேன். எனினும், முறைப்பாட்டை பதிவுசெய்ய மறுத்துவிட்டனர்.

இதனால்தான், தற்போது முதல்வர் தனிப்பிரிவில் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘என்னிடம், யாஷ் தயாள் பேசியதற்காக வாட்சப் சேட்கள் இருக்கிறது. வீடியோ அழைப்பில் பேசிய ஆதாரம் இருக்கிறது. இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இருக்கிறது.

எனக்கு நியாயம் வேண்டும். இது எனக்கான நியாயம் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட அனைத்து பெண்ணிற்கும் நியாயம் கிடைக்கும் என்ற நீதிக்கான நியாயம். உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்’’ என அந்தப் பெண் கூறியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த 18வது ஐபிஎல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது. அணியின் வெற்றிக்கு யாஷ் தயாள் முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post யாஷ் தயாள் என்னை ஏமாற்றவிட்டார் – பெண் பரபரப்பு புகார் appeared first on Oruvan.com.

ஐபிஎல்க்கு வரும் புதிய அணி? பிசிசிஐக்கு ரூபாய் 538 கோடி அபராதம் விதிப்பு
ஐபிஎல் தொடரில் தற்போது பத்து அணிகள் விளையாடி வருகின்றனர். கடந்த 2022 மெகா ஏலத்தின் போது குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டது.

இதற்கு முன்பும் ஐபிஎல் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து ஒரு சில அணிகள் புதிதாக இணைந்து பிறகு காணாமல் போய் உள்ளன. அப்படி ஒரு அணி தான் கொச்சி டர்க்கர்ஸ்.

2010 ஆம் ஆண்டு இந்த கொச்சி டர்க்கர்ஸ் அணி ஐபிஎல்லில் விளையாடியது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு பிசிசிஐ இந்த அணிக்கு தடை விதித்தது.

பிசிசிஐ தரப்பிலிருந்து ரூபாய் 153 கோடி வங்கி உத்தரவாதம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் இது ஒருதலை பட்சமாக இருப்பதால் எங்கள் தர முடியாது என்று கொச்சி டர்க்கர்ஸ் தெரிவித்துள்ளது.

இதனால் பிசிசிஐ விதிகளை மீறியதாக கொச்சி டர்க்கர்ஸ் அணிக்கு 2011 ஆம் ஆண்டு தடை விதித்தது. ரெண்டெஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் என்ற நிறுவனம் தான் கொச்சி டர்க்கர்ஸ் அணியை நடத்தி வந்தது.

பிசிசிஐயின் இந்த அடாவடி போக்கை எதிர்த்து 2012ம் ஆண்டு கொச்சி டர்க்கர்ஸ் அணி நடுவர் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது. அதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

அந்த விசாரணை முடிவில், பிசிசிஐ ரூபாய் 384 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சக்தி வாய்ந்த இடத்தில் இருந்த பிசிசிஐ அதனை தர மறுத்தது.

எங்கள் அணியை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும், உங்கள் இழப்பீடு வேண்டாம் என்றும் அணியின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதனையும் பிசிசிஐ நிராகரித்தது.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலான தொடர் சட்டப் போராட்டங்களுக்கு பிறகு கொச்சி டர்க்கர்ஸ் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் படி, பிசிசிஐ கொச்சி டர்க்கர்ஸ் அணிக்கு ரூபாய் 538 கோடி அபராதமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிசிசிஐக்கு பெரும் அடியாகவே பார்க்கப்படுகிறது.

கொச்சி டர்க்கர்ஸ் அணியை போலவே சகாரா குழுமத்தை சேர்ந்த புனே வாரியர்ஸ் அணிக்கும் பிசிசிஐ 2014 ஆம் ஆண்டு தடை விதித்திருந்தது.

2010ம் ஆண்டு ஐபிஎல்லின் தலைவராக இருந்த லலித் மோடி கொச்சி டர்க்கர்ஸ் அணிக்கு முதலில் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அப்போதைய பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகரின் உத்தரவின் பேரில் ஐபிஎல்லில் கொச்சி டர்க்கர்ஸ் அணி விளையாடியது.

இருப்பினும் அந்த சீசனில் எட்டாவது இடத்தை மட்டுமே பிடித்தது. கொச்சி டர்க்கர்ஸ் அணியில் கிரேம் ஸ்மித், மிட்செல் மார்ஷ், ஜெரோம் டெய்லர், யுவராஜ் சிங், ஏஞ்சலோ மேத்யூஸ், ஆஷிஷ் நெஹ்ரா, முத்தையா முரளிதரன், பிரெண்டன் மெக்கல்லம் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம் பெற்று இருந்தனர்.

தற்போது கொச்சி அணிக்கு தீர்ப்பு சாதகமாக வந்துள்ளதால் அடுத்த ஆண்டு இந்த அணி மீண்டும் ஐபிஎல்லில் இடம் பெறுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

The post ஐபிஎல்க்கு வரும் புதிய அணி? பிசிசிஐக்கு ரூபாய் 538 கோடி அபராதம் விதிப்பு appeared first on Oruvan.com.

ஐ.பி.எல் இறுதிப் போட்டி இன்று – ஓய்வை அறிவிக்க தயாராகும் விராட் கோலி?
ஐபிஎல் இறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை வெல்லும் பட்சத்தில் விராட் கோலி ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று அகமதாபாத் மைதானத்தில் இறுதிப்போட்டி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இன்றைய போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ஏனெனில் இதுவரை இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் கிண்ணத்தை வென்றது இல்லை. இந்நிலையில் ஏதேனும் ஒரு அணி புதிதாக கிண்ணத்தை வெல்லும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் ரோயல் சேஞ்சஸ் பெங்களூர் அணி வெற்றி பெறும் பச்சத்தில் விராட் கோலி ஐபிஎல் தொடர்களிலிருந்து தனது ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 18ஆண்டுகளாக பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியால் தலைவராக இருந்தும் கிண்ணத்தை வெல்ல முடியவில்லை. ஏற்கனவே சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார்.

இதனால், இந்த ஆண்டுபெங்களூரு அணிக்காக எப்படியாவது கோப்பையை வென்று தரவேண்டும் என்ற முனைப்பில் விராட் கோலி இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்றைய போட்டியின் முடிவில் தான் அவரது ஐபிஎல் எதிர்காலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

The post ஐ.பி.எல் இறுதிப் போட்டி இன்று – ஓய்வை அறிவிக்க தயாராகும் விராட் கோலி? appeared first on Oruvan.com.

ஓய்வை அறிவிக்க தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்
ஐபிஎல் 2025இன் லீக் போட்டிகள் இன்றுடன் முடிய உள்ளது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன.

ஜூன் மூன்றாம் திகதி இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்தாண்டு ஐபிஎல்லில் அதிக இளம் வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஐந்து வீரர்கள் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

மொயின் அலி

தற்போது 38 வயதாகும் மொயின் அலி டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடினார்.

இந்த ஆண்டு அவருக்கு அணியிலும் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். எனவே இந்த வருடத்தின் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

விஜய் சங்கர்

கடந்த சீசன் வரை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த விஜய் சங்கரை இந்த ஆண்டு மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. இருப்பினும் அவரால் போதிய இம்பாக்டை கொடுக்க முடியவில்லை.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மினி ஏலத்திற்கு முன்பு அணியில் இருந்து அவரை விடுவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் அவரை இனி எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவும் வாய்ப்பில்லை. இதனால் விஜய் சங்கர் ஓவை அறிவிக்கலாம்.

ஃபாஃப் டு பிளெசிஸ்

தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஃபாஃப் டு பிளெசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல முக்கிய போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது 41 வயதாகும் அவர் கடந்தாண்டு வரை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்தார்.

இந்த சீசனில் இரண்டு கோடிக்கு அவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி வாங்கியது. இருப்பினும் அவரால் பழைய மாதிரி பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனால் இந்த சீசனுடன் அவர் ஓய்வை அறிவிக்கலாம்.

தோனி

மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் தலைவராக இந்த சீசனில் செயல்பட்டார். ருதுராஜ் கைக்குவாட்டிற்கு காயம் ஏற்பட்ட காரணமாக அவர் தலைமைப் பொறுப்பை ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் தோனி ஓய்வு அறிவிப்பாரா என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த சீசனில், அடுத்த ஆண்டு வருவேனா வரமாட்டானா என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது 44 வயதாகும் தோனிக்கு முட்டி காலில் பிரச்சினை அதிகளவில் இருந்து வருகிறது. எனவே அவரது முடிவு இந்த ஆண்டுக்குள் தெரிந்துவிடும்.

அஸ்வின்

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார்.

இவரிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் இந்த சீசனில் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் அவ்வளவு சிறப்பாக இல்லை.

கிட்டத்தட்ட 10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர் சென்னை பிட்சிலேயே விக்கெட்கள் எடுக்க சிரமப்பட்டார். எனவே இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஐபிஎல்லில் இருந்தும் இவர் ஓய்வை அறிவிக்கலாம் என கூறாப்படுகின்றது.

The post ஓய்வை அறிவிக்க தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் appeared first on Oruvan.com.

சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஆகிறார் சுரேஷ் ரெய்னா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் 2025ஆம் பதிப்பு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. தற்போது தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை அணி தனது இறுதி லீக் போட்டியில் நேற்று விளையாடியிருந்தது.

18 கால ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தை இம்முறை பிடித்திருந்தது. 14 போட்டிகளில் வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே சென்னை அணி வெற்றிபெற்றிருந்தது.

தனது இறுதி லீக் போட்டியில் சென்னை அணி மிகவும் அபாராமாக விளையாடி வெற்றிபெற்றிருந்தது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய போட்டியின் வர்ணனையின்போது, “அடுத்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் வருவார்” என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்திருந்தார்.

இதற்கு உடனே பதிலளித்த சக வர்ணனையாளர் சோப்ரா, அவரின் பெயர் S இல் தொடங்குமா என்று கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ரெய்னா, அவர் சென்னை அணிக்காக அதிவேக அரைசதம் அடித்துள்ளார் என்று சிரித்தபடியே பதில் கூறினார்.

இதேவேளை, சென்னை அணிக்கான அதிவேகமாக அரைச்சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருக்கின்றார்.

2014ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் ரெய்னா அரைச்சதம் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஆகிறார் சுரேஷ் ரெய்னா appeared first on Oruvan.com.

தோனி விளையாடும் கடைசிப் போட்டி – திருவிழா போல் கொண்டாடுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி லீக் போட்டியில் சென்னை அணி இன்று விளையாடவுள்ள நிலையில், இந்தப் போட்டியை திருவிழா போல கொண்டாடுமாறு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார்.

ஏனெனில், ஒரு தலைவராகவும், அணியின் வீரராகவும் தோனியின் கடைசிப் போட்டியாக இது இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பகல் இடம்பெறவுள்ள சென்னை அணியின் கடைசி லீக் போட்டியை 43 வயதான தோனி வழிநடத்தவுள்ளார்.

தொடரின் ஆரம்பத்தில் சென்னை அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் செயற்பட்டார். ஆனால் முழங்கை எலும்பு முறிவு காரணமாக அவர் தொடரின் பாதியிலேயே வெளியேறினார்.

இதனையடுத்து அணி நிர்வாகம் தலைமைப் பதவியை தோனியிடம் ஒப்படைத்தது. எனினும், சென்னை அணியின் தோல்வியை அவராலும் தடுக்க முடியவில்லை. துடுப்பாட்டம், பந்துவீச்சு என அனைத்து துறையிலும், சென்னை அணி பலவீனமாக காணப்படுகின்றது.

இந்நிலையில், தோனி இந்த தொடருடன் ஓய்வு பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்து தோனி வெளிப்படையாக பேசவில்லை. தற்போது அடுத்த பதிப்பிற்கான அணியை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், குஜராத் அணியுடன் சென்னை அணி இன்று பகல் மோதவுள்ளது. இந்தப் போட்டியை ரசிகர்கள் ஒரு திருவிழா போல கொண்டாட வேண்டும், ஏனெனில் இது தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம்.

அவர் ஒரு தலைவராகவும், வீரராகவும் கடைசியாக ஒரு முறை மைதானத்தில் நுழைவார். அவருக்கு அன்பைக் கொடுத்து மைதானத்தை மஞ்சள் வண்ணம் தீட்ட வேண்டும்,” என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

“அவர் கடைசி போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் தான் தோனி, தோனி தான் சென்னை சூப்பர் கிங்ஸ்.

எட்டு மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த பின்னர் மூன்று மாதங்கள் விளையாடுவது கடினம். இந்த ஆண்டு தோனி அதைப் புரிந்துகொண்டார்,” என்று முகமது கைஃப் மேலும் கூறினார்.

The post தோனி விளையாடும் கடைசிப் போட்டி – திருவிழா போல் கொண்டாடுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை appeared first on Oruvan.com.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு – ஆனால், தோனி விடுவாரா?
ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும்.

இதன் மூலம் ஐபிஎல் குவாலிபயர் 1 போட்டிகளை குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடும். இப்படியான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது.

நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதால் இந்த வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது.

ஒருவேளை பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று அந்த அணி கடைசியாக விளையாடும் போட்டியிலும் வெற்றி பெற்று இருந்தால் ஐபிஎல் 2025 தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றிருக்க முடியும்.

அந்த வாய்ப்பை பஞ்சாப் கிங்ஸ் அணி இப்போது இழந்திருக்கிறது. இப்போது இந்த வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது.

இன்று இரவு நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி 20 புள்ளிகளைப் பெற்று ஐபிஎல் 2025 புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும்.

ஆனால் குஜராத் அணியின் இந்த கனவு அவ்வளவு எளிதாக நிறைவேறி விட வாய்ப்பு இல்லை.

ஏனென்றால் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் 2025 தொடரை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறது.

அப்படியான சூழலில் குஜராத் டைட்டன்ஸ் அணி இப்போட்டியை அவ்வளவு எளிதாக வென்று விட வாய்ப்பு இல்லை.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இருக்கும் ஒரே ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால் இந்த போட்டி குஜராத் அணியின் சொந்த மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.

சூழல் சாதகமாக இருப்பதை பயன்படுத்திக் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது அந்த அணி ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இப்போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறது.

13 போட்டியில் விளையாடி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது ஒரு வேளை இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நான்காவது வெற்றியாக அந்த அணிக்கு இருக்கும்.

அத்துடன் இந்த ஐபிஎல் போட்டியில் மிகக் குறைந்த வெற்றிகளை பெற்றிருக்கும் ராஜஸ்தான் அணிக்கு நிகரான வெற்றி பெற்று இருக்கிறோம் என்ற ஆறுதலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்காகவாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற கடினமாக முயற்சிக்கும்.

குஜராத் டைட்டன்ஸ் அணி இப் போட்டியில் தோற்றால், ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதற்காக பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகளின் கடைசி ஆட்டங்களின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்.

ஏனென்றால் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்றைய போட்டியில் தோற்று, பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் முறையே தங்களது கடைசி போட்டிகளில் வெற்றி பெற்றால் அந்த இரு அணிகளும் ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் 2 இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.

குவாலிஃபயர் முதல் சுற்றில் விளையாட வேண்டும் என்றால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இன்றைய போட்டி வெற்றி மிக மிக முக்கியமானது.

The post குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு – ஆனால், தோனி விடுவாரா? appeared first on Oruvan.com.

இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்
இந்திய – பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் மீளவும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்பூரில் மே 24ஆம் திகதி மீளவும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள லீக் போட்டிகள் யாவும் ஆறு மைதானங்களில் நடத்தி முடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெங்களூரு, ஜெய்பூர், டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் அஹமதாபாத் ஆகிய மைதானங்களில் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் தலா இரண்டு போட்டிகள் நடைபெறும். ப்ளே ஓவ் போட்டிகள் எங்கெங்கு நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். ஆனால் அவற்றுக்கான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

முதலாவது தகுதிகாண் போட்டி மே 29ஆம் திகதியும் நீக்கல் போட்டி மே 30ஆம் திகதியும் இரண்டாவது தகுதிகாண் போட்டி ஜூன் 1ஆம் திகதியும், இறுதிப் போட்டி ஜூன் 3ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

The post இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம் appeared first on Oruvan.com.