Investigation Archives - Oruvan.com

பிரித்தானியாவில் புகலிட மோசடி – ஓரினச்சேர்க்கை போன்று உருவகப்படுத்திக்கொள்ள ஆலோசகர்கள் உதவி
மறைமுக வணிகம் அம்பலம் – சட்ட ஆலோசகர்கள் துணையுடன் நடக்கும்

முறைகேடு குறித்து பிபிசியின் இரகசிய விசாரணை

பிரித்தானியாவின் புகலிட மற்றும் குடியேற்றக் கொள்கைகள் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான அரசியல் விவாதங்களின் மையமாக இருந்து வருகின்றன. குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றம், சிறிய படகுகள் மூலம் வருகை, மற்றும் புகலிடக் கோரிக்கைகளின் அதிகரிப்பு ஆகியவை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளன.

இந்நிலையில், போலியான புகலிடக் கோரிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகின்றமை குடியேற்றக் கட்டுப்பாடுகளை மேலும்

கடுமையாக்க வேண்டும் என்ற வலதுசாரி அரசியல் வாதங்களை வலுப்படுத்தக்கூடும்.

புகலிட அமைப்பு என்பது உண்மையான உயிர் அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்கும் மக்களுக்கு பாதுகாப்பளிக்க உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான மனிதாபிமான நடைமுறை.

ஆனால், அண்மைய விசாரணைகள் இந்த நடைமுறையை திட்டமிட்டு தவறாக பயன்படுத்தப்படுகின்றது என்பதை காட்டுகின்றன.

போலியான ஆதாரங்கள், கற்பனை கதைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் மூலம் உருவாக்கப்படும் இத்தகைய விண்ணப்பங்கள், முழு அமைப்பின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்குகின்றன. இதனால், உண்மையில் பாதுகாப்பு தேவைப்படுகிறவர்களின் நிலையும் பாதிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் தங்குவதற்காக, புலம்பெயர்ந்தோர் தங்களை போலியாக ஓரினச்சேர்க்கையாளர்கள் போன்று

அடையாளப்படுத்திற்கொள்வதற்கு உதவுவதற்காக மறைமுக வணிக வலையமைப்பொன்று செயற்பட்டு வருகின்றமை பிபிசி விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசா காலம் நிறைவடையவுள்ள நபர்களுக்கு போலியான பின்னணிக் கதைகள் உருவாக்கப்படுகின்றமை பிபிசியின் இரகசிய விசாரணையின் முதற்கட்டத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

மேலும், ஆதரவுக் கடிதங்கள், புகைப்படங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் போன்ற போலி ஆதாரங்களை எவ்வாறு தயாரிக்க வேண்டும்

என ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் பின்னர், தாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றும், பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குத் திரும்பினால்

உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறி தஞ்சம் கோரும் நடைமுறை பயன்படுத்தபட்டுள்ளது.

விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. சில சட்ட நிறுவனங்கள் போலி புகலிடக் கோரிக்கைக்காக £7,000 வரை வசூலித்துள்ளதுடன், போலியான மருத்துவ அறிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் ஆதரவுக் கடிதங்களையும் தயாரித்து வழங்கியுள்ளன.

மேலும், ஒரு ஆலோசகர் 17 ஆண்டுகளாக இத்தகைய சேவையில் ஈடுபட்டு வருவதாகக் கூறியுள்ளார். சிலர் £1,500 முதல் £3,000 வரை கூடுதல் கட்டணத்தில் ஆதாரங்களை உருவாக்க முன்வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் உண்மையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்ல என்று தாமாகவே ஒப்புக்கொண்ட சம்பவமும் விசாரணையில் பதிவாகியுள்ளது.

மேலும், தனிசா கான் என அறிமுகமான ஆலோசகர் ஒருவர், போலியான கதைகளை மனப்பாடம் செய்யக் கூறல்,களியாட்ட விடுதிகளில்

எடுத்த புகைப்படங்களை ஆதாரமாக பயன்படுத்துவது மற்றும் போலியான உறவு கடிதங்களை உருவாக்குவது போன்ற முறைகளை விளக்கியுள்ளார். இவரது சேவைக்காக £2,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த குடிவரவு சட்ட நிபுணர் அனா கோன்சலஸ், இத்தகைய மோசடிகள் உண்மையான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும், உண்மையை நிருபிக்கும் செயன்முறை மேலும் கடினமாகிறது என்றும் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, தன்மீதான குற்றச்சாட்டுகளை தனிசா கான் மறுத்துள்ளார்.  அதேவேளை, சட்டம் மற்றும் நீதி வழக்கறிஞர்கள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்புகள், இந்த விவகாரம் குறித்து உள்ளக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளன.

மொத்தத்தில், இந்த விசாரணை பிரித்தானியாவின் புகலிட அமைப்பு சிலரால் திட்டமிட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும், அதன் விளைவாக உண்மையான அகதிகள் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

புகலிட அமைப்பைச் சுரண்டும் இந்த மோசடி வலையமைப்பு, பிரித்தானியாவின் குடியேற்றக் கொள்கைகளில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்துவதுடன், அரசியல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் மனிதாபிமான பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் இடையில் சமநிலையைப் பேணுவது அரசாங்கத்திற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். இதனைச் சரியாக கையாளத் தவறும் பட்சத்தில்,எதிர்கால அரசியல் சூழலையும், குடியேற்றக் கொள்கைகளையும் மாற்றக்கூடும்.

பாலகணேஷ் டிலுக்ஷா

The post பிரித்தானியாவில் புகலிட மோசடி – ஓரினச்சேர்க்கை போன்று உருவகப்படுத்திக்கொள்ள ஆலோசகர்கள் உதவி appeared first on Oruvan.com.

அக்குரேகொடை கொலை விசாரணை 80 வீதம் நிறைவு
அக்குரேகொடை கொலை தொடர்பிலான விசாரணைகள் 80 வீதம் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அக்குரேகொடை துப்பாக்கிச் சூடு இடம்பெற்று 03 நாட்களுக்குள் பிரதான துப்பாக்கிதாரி உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் மூவர் 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவிற்கமைய விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏனைய சந்தேக நபர்கள் விளக்கமறியலில் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.

The post அக்குரேகொடை கொலை விசாரணை 80 வீதம் நிறைவு appeared first on Oruvan.com.

இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் விசேட விசாரணைப் பிரிவு
இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் புதிய விசேட விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை விரைவுபடுத்துதல், முறைப்பாடுகளுக்கு செயற்றிறனுடன் தீர்வு வழங்குதல் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல் என்பன புதிய விசேட விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதற்கான நோக்கங்கள் என தெரிவிக்கப்படுகிறது.

The post இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் விசேட விசாரணைப் பிரிவு appeared first on Oruvan.com.

ரணிலுக்கு ஆதரவான போராட்டம் – புலனாய்வு அமைப்புகளிடம் சிக்கிய அரசியல்வாதிகள்
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கூட்டத்தை ஏற்பாடு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை புலனாய்வு அமைப்புகள் தெளிவாக அடையாளம் கண்டுள்ளன.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (26) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் துறைக்கு, குறித்த அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை அனுப்ப புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அரசியல்வாதிகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் அடங்குவர்.

கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பேருந்துகளைப் பயன்படுத்தி இந்தக் குழுக்கள் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவர்களுக்காக பணம் செலவழித்தவர்களை அவர்கள் அடையாளம் கண்டு வருவதாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கூடியிருந்த இந்தக் குழுக்களுக்கு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பால் பாக்கெட்டுகள், தண்ணீர் போத்தல்கள் மற்றும் உணவுப் பொருட்களை கூட விநியோகித்தனர்.

புலனாய்வு அதிகாரிகள் இதையெல்லாம் கவனித்து தங்கள் அறிக்கைகளில் சேர்த்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்டத்தை அமல்படுத்த கோட்டை நீதவான் வழங்கிய உத்தரவின்படி குற்றப் புலனாய்வுத் துறையும் நேற்று (27) விசாரணைகளைத் தொடங்கியது.

குற்றப் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், புலனாய்வு அறிக்கைகள் மற்றும் விசாரணைத் தகவல்கள் மூலம் நீதிமன்றத்திற்கு அருகில் மக்களைக் கூட்டியவர்களைத் தெளிவாகக் கண்டறிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை தொடர்பாக புலனாய்வுப் பிரிவுகளால் எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படக் காட்சிகளையும், செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் முன்கூட்டியே நீதிமன்றத்திற்கு அருகில் மக்களைக் கூட்டி பல்வேறு அறிக்கைகளை ஏற்பாடு செய்த நபர்களையும் அடையாளம் காணும் பணியை குற்றப் புலனாய்வுத் துறை தொடங்கியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களிடமிருந்து தொடர்புடைய திருத்தப்படாத காட்சிகளைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஷானி அபேசேகரவின் நேரடி மேற்பார்வையின் கீழ் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட குழுவால் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 22ஆம் திகதி நீதிமன்ற அறையில் இருந்த, நிகழ்வுகளை காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர்களைக் கண்டறிய குற்றப் புலனாய்வுத் துறையின் மற்றொரு குழு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

இந்த விசாரணை ஒரு தொழில்நுட்ப நடவடிக்கையாக நடத்தப்படுவதாகவும், அதன் மூலம் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அன்று நீதிமன்ற அறையில் இருந்தவர்களில் பெரும்பாலோர் சட்டத்தரணிகளை தவிர எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என்பதால், அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அவர்களுடன் விசாரணைகள் நடத்தப்படும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

The post ரணிலுக்கு ஆதரவான போராட்டம் – புலனாய்வு அமைப்புகளிடம் சிக்கிய அரசியல்வாதிகள் appeared first on Oruvan.com.

கொழும்பில் சீன நாட்டவர் கடத்தப்பட்டு தாக்குதல்
கொழும்பில் தங்கி வியாபாரம் செய்து கொண்டிருந்த சீன நாட்டவர் ஒருவர் மற்றுமொரு சீன கும்பலால் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம்திகதி இரவு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வான்களில் வந்த எட்டு சீன நாட்டவர்கள் வணிக வளாகத்தில் தங்கியிருந்த சீன நாட்டவரை கடத்திச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட சீன நாட்டவரின் கண்கள் கட்டப்பட்டு, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வாகனத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தலில் ஈடுபட்ட சீன நாட்டவர்களைக் கொண்ட கும்பல், கடத்தியவரை தாக்கி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் வேறொரு கணக்கிற்கு மாற்றியதாக கூறப்படுகின்றது.

கடத்தப்பட்ட சீன நாட்டவர் பின்னர் நேற்று (23) மதியம் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாகவும் இவ்வாறு ஒரு தான் கடதப்பட்டு தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் கூறியுள்ளனர்.

The post கொழும்பில் சீன நாட்டவர் கடத்தப்பட்டு தாக்குதல் appeared first on Oruvan.com.

முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணை
முன்னாள் அமைச்சர்கள் மூவரின் சொத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் வழிநடத்தலின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மஹிந்தானந்த அளுத்கமகே, அனுர பிரியதர்ஷன யாப்பா, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு நேற்று திங்கட்கிழமை (18) அழைக்கப்பட்டிருந்த போதிலும் தனிப்பட்ட காரணங்களால் வருகை தர முடியாது என அவர் அறிவித்திருந்தார்.

The post முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணை appeared first on Oruvan.com.

கொட்டாஞ்சேனை மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் – விசாரணையில் முன்னேற்றம்?
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படும், மாணவி துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான், பசன் அமரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காணொளிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்லும் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணை பணியகத்தின் கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தக் காட்சிகள் பரிசோதனைக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அறிக்கைகள் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்ததன் பின்னர், விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான், பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

The post கொட்டாஞ்சேனை மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் – விசாரணையில் முன்னேற்றம்? appeared first on Oruvan.com.

முன்னாள் அமைச்சர் மனுஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு
வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதிமோசடி சட்டத்தின் கீழ் எதிர்வரும் 20 ஆம் திகதி விசாரணை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர், நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்துள்ளார்.

மனுஷ நாணாயக்கார தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்துள்ளாரா என்பது தொடர்பிர் விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டாளர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post முன்னாள் அமைச்சர் மனுஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு appeared first on Oruvan.com.

நிலந்த ஜெயவர்தன குறித்த விசாரணை அறிக்கை – CID யிடம் கோர சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜெயவர்தன தொடர்பான விசாரணை அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து கோருவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறையான கோரிக்கை எதிர்வரும் நாட்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசாரணை அறிக்கையை முழுமையாக மீளாய்வு செய்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நிலந்த ஜெயவர்தன குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு உடனடியாக அவரை பொலிஸ் சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நிலந்த ஜயவர்தன அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக செயற்பட்டிருந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளடக்கிய சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணையில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் நிலந்த ஜயவர்தன சேவையில் இருந்து நீக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post நிலந்த ஜெயவர்தன குறித்த விசாரணை அறிக்கை – CID யிடம் கோர சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை appeared first on Oruvan.com.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் – விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை அடுத்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த குறித்த மாணவரின் மரணம் தொடர்பில் விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடும் எனவும் அவர் கூறினார்.

சம்பவம் தொடர்பாக சுமார் 70 மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக குறித்த விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

The post சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் – விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு appeared first on Oruvan.com.