intelligence Archives - Oruvan.com

காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு கனடா நிதியுதவி – உளவு அமைப்பு வெளியிட்ட தகவல்
கனடாவில் உள்ள பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு ஆகிய 02 காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு கனடாவிலிருந்து நிதியுதவி சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

2025 ஆம் ஆண்டு கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி இடர்பாடுகள் என்ற பெயரில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

கனடாவின் ஒட்டாவா உளவு அமைப்பு இந்தத் தகவலை அரசுக்கு அனுப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடாவில் ஹமாஸ், காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களான பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு அமைப்பு போன்ற தீவிரவாத அமைப்புகள் நிதி உதவி பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

The post காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு கனடா நிதியுதவி – உளவு அமைப்பு வெளியிட்ட தகவல் appeared first on Oruvan.com.

பாகிஸ்தான் பயங்கரவாதி தங்கியிருக்கும் இடத்தை கண்டுப்பிடித்த இந்திய உளவுத்துறை
இந்தியாவில் இடம்பெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய, பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இருக்கும் இடத்தை இந்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது.

ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான இவர் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளில் முக்கியமானவர் என தெரிவிக்கப்படுகிறது.

மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் அவர் தங்கள் நாட்டில் இல்லையென பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் (Gilgit-Baltistan) பகுதியில் அவர் தங்கியுள்ளதாக உளவுத் துறை தகவல்கள்

தெரிவிக்கின்றன.

மசூத் அசார் தங்கியிருக்கும் பகுதியில் பள்ளிவாசல்கள், மதரசாக்கள், அரச விடுதி, மற்றும் விருந்தினர் மாளிகைகளும் காணப்படுவதாக தகவல்கள்

வெளியாகியுள்ளன.

இந்த இடம் ஜம்மு-காஷ்மீரில் இருந்து சுமார் 350 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

The post பாகிஸ்தான் பயங்கரவாதி தங்கியிருக்கும் இடத்தை கண்டுப்பிடித்த இந்திய உளவுத்துறை appeared first on Oruvan.com.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கம்
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு கல்வி அமைச்சில் இன்று (28)  நடைபெற்றது.

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஆரம்ப அணுகுமுறையாக அதிகாரிகளை தெளிவுபடுத்துவதும் மற்றும் தயார்படுத்துவதும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.

நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் ஊடாக கல்வித் துறையின் தரத்தை காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்த முடியும் என்று கூறினார்.

இங்கு ஆரம்ப உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தில் கல்வி அமைச்சின் பங்கு, கல்வி அமைச்சில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் அதற்காக திட்டமிடப்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் தொடர்பில் உரையாற்றினார்.

ஜனாதிபதி அலுவலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு,கல்வி அமைச்சு மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) ஆகியவை இணைந்து இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க மற்றும் சமிச அபேசிங்க ஆகியோர் வளவாளர்களாக இணைந்தனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக

கலுவெவ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கம் appeared first on Oruvan.com.

அமெரிக்க உளவுத்துறை தலைவரை சந்தித்த மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை சந்தித்தார்.

வோஷிங்டனில் இன்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய – அமெரிக்க நட்புறவு குறித்து ஆலோசித்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுடனான நட்புறவைப் பேணுவதில் துளசி எப்போதுமே உறுதியாக இருப்பவர். அவர் ட்ரம்ப் அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்காக வாழ்த்தும் தெரிவித்தேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்.

The post அமெரிக்க உளவுத்துறை தலைவரை சந்தித்த மோடி appeared first on Oruvan.com.