Institute Archives - Oruvan.com

ஜனாதிபதி செயலாளர் மற்றும் உலகளாவிய மாற்றத்திற்கான டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகள் இடையே சந்திப்பு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலகளாவிய மாற்றத்திற்கான டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் முன்னுரிமைகளை இனங்கண்டு அதற்கு ஆதரவளிப்பதே, இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, அவற்றின் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது குறித்து, இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் உலகளாவிய மாற்றத்திற்கான இந்தக் களப்பயணத்தின் போது, ஒவ்வொரு அமைச்சுக்கும் சென்று வேலைத்திட்டங்களை உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன், வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இங்கு இணக்கம் காணப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, டோனி பிளேயர் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் ஆலோசனைப் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜலீல் ரஷீத், ஆசிய பசுபிக் பணிக்குழாமின் அரசதுறை இணைப்புத் தலைவர் எனா ஏடின், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பணிப்பாளர் (கமத்தொழில் தொழில்நுட்பம் ) பீ.எம்.வீ.எஸ் பஸ்நாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜானக கீகியனகே, இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர்/பிரதான நிறைவேற்று அதிகாரி மங்கள விஜேசிங்க மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post ஜனாதிபதி செயலாளர் மற்றும் உலகளாவிய மாற்றத்திற்கான டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகள் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷா நிறுவனத்தை நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

திரிபோஷா நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (04.01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

திரிபோஷா நிறுவனத்தை அபிவிருத்தி செய்து அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு முன்னைய அரசாங்கங்கள் முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாத காரணத்தினாலேயே அதன் பலன்களை மக்களால் பெறமுடியாமல் போனதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையை மாற்றி மீண்டும் நாட்டு மக்களின் போசாக்கு தேவைகளை வழங்கும் செயலூக்கமான நிறுவனமாக திரிபோஷாவை மாற்ற தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

திரிபோஷா நிறுவனத்தை கலைப்பதற்கு பதிலாக, நாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்காக இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டு, முறையான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அரசுக்குச் சொந்தமான மேம்பட்ட நிறுவனமாக தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

The post திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம் appeared first on Oruvan.com.