India vs Pakistan Archives - Oruvan.com

இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி!! டிக்கெட் விலை ஒரு லட்சமாக உயர்வு… விமான கட்டணங்களும் சடுதியாக உயர்வு
எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கிண்ண தொடர் போட்டிக்கான டிக்கெட் கறுப்புச் சந்தையில் ஒரு லட்சம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், டிக்கெட் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவிலான கிடைக்கும் தன்மை மற்றும் அதிக தேவை ஆகியவை இரண்டாம் நிலை சந்தை விலைகளை மதிப்புக்கு அப்பால் விலை அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பதிவு செய்த ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாகவும், இந்த வாரம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வலைத்தளத்தில் மிகக் குறைந்த டிக்கெட்டுகள் மட்டுமே கிடைக்கக்கூடும் என்றும் வதந்திகள் பரவியுள்ளன.

இதற்கிடையில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மும்பைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமானக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புவிசார் அரசியல் பதட்டங்களைக் காரணம் காட்டி இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் முன்னதாக முடிவு செய்திருந்தது.

எவ்வாறாயினும், நீண்ட நாள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அந்நாட்டு அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்தியாவுக்கு எதிராக விளையாட ஒப்புக்கொண்டது.

இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இரவு ஏழு மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகளம் மோதம் போட்டி இடம்பெறவுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் முடிவை பாகிஸ்தான் அறிவித்ததிலிருந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை இடையே தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் சபையும் பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் அமினுல் இஸ்லாமும் பாகிஸ்தானிடம் இந்தியாவுக்கு எதிராகப் போட்டியில் விளையாடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் முடிவை மறுபரிசீலனை செய்ததற்காக பாகிஸ்தானுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி!! டிக்கெட் விலை ஒரு லட்சமாக உயர்வு… விமான கட்டணங்களும் சடுதியாக உயர்வு appeared first on Oruvan.com.

இந்தியாவுடன் விளையாடுவதை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் – ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி திட்டமிட்ட அடிப்படையில் நடப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், போட்டி நடைபெறுவதை உறுதிப்படுத்தியதற்காக பாகிஸ்தான் பிரதமருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடகத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, இந்தியாத இணைந்து நடத்தும் 2026 இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்திருந்தது.

போட்டியை புறக்கணித்தால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை பாகிஸ்தான் அணிக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

எனினும், தனது முடிவில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் நேற்று இரவு சர்வதேச கிரிக்கெட் பேரவை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

தொடர்ந்து பாகிஸ்தான் கிரிகெட் சபை தலைவர் மொசின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

இறுதியில் இந்திய அணியுடன் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி வழங்கியது.

இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதி திட்டமிட்டப்படி இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இடம்பெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடயத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவை முன்னெடுத்த முயற்சிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராட்டு தெரிவித்துள்ளார்.

1996 உலகக் கோப்பையின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஏனைய அணிகள் கொழும்பில் விளையாடாத நேரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கைக்காக காட்டிய ஒற்றுமையை ஒருபோதும் மறக்கமாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, பாகிஸ்தான் பிரதமருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சரும் நன்றி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவுடன் விளையாடுவதை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் – ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு appeared first on Oruvan.com.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் – பாகிஸ்தான் பிரதமர் உறுதி
டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் மீளவும் அறிவித்துள்ளது.

அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஊடகங்களின்படி, “டி20 உலகக் கிண்ணம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் விளையாட மாட்டோம் என்ற தெளிவான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று ஷெரீப் தெரிவித்துள்ளார்.

மிகவும், கவனமாக ஆலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்த முடிவு மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுகளில் அரசியல் தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்திய ஷெரீப், ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர் இந்த விடயம் முழுமையாக மதிப்பிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எந்தவொரு குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்காமல், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாது என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இந்த லீக் போட்டியானது, எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், பாகிஸ்தான அரசாங்கத்தின் அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையில், குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்பது, போட்டியின் உணர்வையும் புனிதத்தையும் பலவீனப்படுத்தும்” என்று பதிவு செய்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் அரசின் இந்த முடிவானது கிரிக்கெட் விளையாட்டுக்கோ அல்லது பாகிஸ்தான் ரசிகர்களுக்கோ நல்ல செய்தி அல்ல. ஒரு குறிப்பிட்ட போட்டியில் மட்டும் பங்கேற்க மறுப்பது நியாயமில்லாதது.

இது உலக கிரிக்கெட்டையே பாதிப்புக்கு உள்ளாக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை, கடுமையான அபராதம் மற்றும் தடைகளை விதிக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நடைபெறாமல் போனால் சர்வதேச கிரிக்கெட் பேரவை சுமார் 300 மில்லியன் டொலருக்கு அதிகமான இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

The post இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் – பாகிஸ்தான் பிரதமர் உறுதி appeared first on Oruvan.com.

நடத்தை விதி மீறல் – நால்வருக்கு எதிராக கடும் நடவடிக்கை
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இடம்பெற்ற நடத்தை விதி மீறல்களின் முடிவுகளை சர்வதேச கிரிக்கெட்  பேரவை உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 14, 21 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆடவர் அணிகள் மோதிய போட்டிகளில் நடந்த சம்பவங்களைசர்வதேச கிரிக்கெட்  பேரவையின் நடுவர் குழாம் விசாரித்தது.

இதன்படி, செப்டம்பர் 14 ஆம் திகதி நடந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப் இருவருக்கும் ஐசிசி நடத்தை விதிகளின் உறுப்புரை 2.21ஐ மீறியமைக்காக தங்கள் போட்டி ஊதியத்தில் 30 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தலா இரண்டு தகுதியிழப்பு புள்ளிகளையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதே குற்றத்தில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அவருக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டது.

செப்டம்பர் 21ஆம் திகதி நடத்த போட்டியின் போது, அருவருப்பான சைகை பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் குற்றமற்றவர் என்று கண்டறியப்பட்டதால், அவருக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

செப்டம்பர் 28 ஆம் திகதி அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2.21வது உறுப்புரையை மீறிய குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனால் அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியுடன் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குறித்தப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப் மீண்டும் 2.21 ஆவது உறுப்புரையை மீறியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு போட்டி ஊதியத்தில் 30 வீதம் அபராதம் மற்றும் கூடுதலாக இரண்டு தகுதியிழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹாரிஸ் ரவுஃப் 24 மாத காலப்பகுதியில் மொத்தம் நான்கு தகுதியிழப்பு புள்ளிகளை பெற்றுள்ளார்.

இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒழுங்கு விதிகளின்படி, நவம்பர் 4 மற்றும் நவம்பர் 6 ஆகிய திகதிகளில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடும் இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post நடத்தை விதி மீறல் – நால்வருக்கு எதிராக கடும் நடவடிக்கை appeared first on Oruvan.com.

கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள் – வெற்றியை இராணுவத்திற்கு சமர்பிப்பு
2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்திருந்தது.

இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எவ்வாறாயினும், இந்த நட்பு போட்டிக்குப் பின்னர் சர்வதேச ஊடகங்கள் இப்போது இந்திய வீரர்களின் நடத்தையில் கவனம் செலுத்தியுள்ளன.

ஜென்டில்மேன் விளையாட்டாகக் கருதப்படும் கிரிக்கெட்டில், போட்டி முடிந்ததும் இரு அணிகளின் வீரர்களும் கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வது வழக்கமானும்.

எனினும், நேற்றைய போட்டிக்குப் பின்னர் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

போட்டி முடிந்த பின்னர், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே வழக்கம் போல் மைதானத்தின் நடுவில் கைகுலுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

அதே நேரத்தில் இந்திய வீரர்களும் பயிற்சி ஊழியர்களும் தங்கள் ஓய்வறைக்குச் சென்று கதவை மூடினர். இந்திய அணியின் இந்த நடத்தை சர்ச்சைக்குரிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில், போட்டிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவிடம் செய்தியாளர்களிடம் இது குறித்து கேள்வியெழுப்பினர்.

இந்தப் போட்டியின் வெற்றி, ஒபரேஷன் சிந்தூரில் இணைந்த அனைத்து ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தானும் தனது அணியும் இங்கு விளையாட மட்டுமே வந்ததாகவும், அந்தப் பணியை சிறப்பாக நிறைவேற்றியதாகவும் கூறினார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் அணியின் தலைவர் சல்மான் அலி ஆகா இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டதுடன், இந்திய அணியிடம் இருந்து இவ்வாறான நடவடிக்கையை தானும் தனது அணியும் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியினர் செயல்பட்ட விதத்தில் தாம் ஏமாற்றமடைந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள் – வெற்றியை இராணுவத்திற்கு சமர்பிப்பு appeared first on Oruvan.com.

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 244 ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இந்த வெற்றியுடன் நான்கு புள்ளிகளுடன் இந்திய அணி குழு ஏ இல் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி appeared first on Oruvan.com.

சம்பியன்ஸ் கிண்ண தொடர் – சாதனையுடன் அவுஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி
பாகிஸ்தானின் லாகூரில் நேற்று (22) நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண குழு பி போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 351 ஓட்டங்களை குவித்திருந்தது.

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக இது சாதனை புத்தகங்களில் இடம்பிடித்தது, ஆனால் அவுஸ்திரேலியா அணி சில மணி நேரங்களுக்குள் அந்த சாதனையை முறியடித்திருந்தது.

47.3 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டு இழந்து 356 ஓட்டங்களை குறித்து வெற்றியை பதிவுசெய்திருந்தது.

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்காக துரத்தி அடிக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையையும் அவுஸ்திரேலியா முறியடித்தது.

இங்கிலாந்தின் 351 என்ற ஓட்டக் குவிப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பை தொடக்க வீரர் பென் டக்கெட் வழங்கினார், அவர் 143 பந்துகளில் 165 ஓட்டங்களை குவித்திருந்தார். ஜோ ரூட் 68 ஓட்டங்களை குவித்திருந்தார்.

ஒரு கட்டத்தில், 352 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்தும்போது, ​​அவுஸ்திரேலியாவின் முதல் நான்கு விக்கெட்டுகள் 136 ஓட்டங்களுக்கு சரிந்தன.

இருப்பினும், களத்தில் சீராக செயல்பட்ட ஜோஷ் இங்கிலிஸ், 86 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 120 ஓட்டங்களையும், அலெக்ஸ் கேரி 69 ஓட்டங்களையும் எடுத்து, ஐந்தாவது விக்கெட்டுக்கு 146 ஓட்டங்களை பகிர்ந்துக்கொண்டனர்.

போட்டியின் இறுதி ஓவர்களில், க்ளென் மேக்ஸ்வெல் 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களை குவித்திருந்தார்.

சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான மற்றொரு முக்கியமான போட்டி இன்று (23) நடைபெறவுள்ளது, மேலும் இந்தப் போட்டி விளையாட்டில் மட்டுமல்ல, புவிசார் அரசியலிலும் எதிரிகளாக இருந்து வரும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானது.

2025 சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளை பாகிஸ்தான் நடத்த திட்டமிட்டிருந்தாலும், பாகிஸ்தானில் போட்டிகளை விளையாடுவதில்லை என்ற இந்தியாவின் கொள்கையின் காரணமாக போட்டி ஏற்பாட்டாளர்கள் போட்டியை துபாயில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

The post சம்பியன்ஸ் கிண்ண தொடர் – சாதனையுடன் அவுஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி appeared first on Oruvan.com.

ஐசிசி சம்பியன் கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு
ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்குப் பின்னர் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் நாளை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி தொடங்குகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை 19ஆம் திகதி முதல் மார்ச் ஒன்பதாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறுகின்றன.

ஏனைய அணிகள் விளையாடும் போட்டிகள் லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் நடைபெற உள்ளன.

2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி பயணித்த பேருந்து மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, எந்த சர்வதேச அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய விரும்பவில்லை.

எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

பாகிஸ்தானில் கிரிக்கெட்டை தொடர்ந்து பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக பாதுகாப்பு இருப்பதால், நாளை தொடங்கும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு கடுமையான பாதுகாப்பை வழங்க அந்நாட்டு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

இதன்படி, பாதுகாப்பு பணிகளில் 13,000க்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் மற்றும் மைதானங்களிலும், அணிகள் செல்லும் பாதையிலும் சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டிகள் நடைபெறும் அனைத்து நகரங்களிலும் உயர் பாதுகாப்பு கேமரா அமைப்புடன் பொருத்தவும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post ஐசிசி சம்பியன் கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு appeared first on Oruvan.com.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி! கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனைக்கு
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பெறும் வாய்ப்பைத் தவறவிட்ட ரசிகர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) கூடுதல் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது.

“ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண குழு நிலை இந்திய போட்டிகள் மற்றும் அரையிறுதி ஒன்றுக்கான கூடுதல் டிக்கெட்டுகள் இன்று விற்பனைக்கு வரும்” என்று ஐசிசி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“சம்பியன்ஸ் கிண்ண டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக உள்ளது, மேலும் இன்று (பெப்ரவரி 16) மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்போது ரசிகர்கள் வரையறுக்கப்பட்ட டிக்கெட்டுகளை வாங்க முடியும்.” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷ் மற்றும் இந்தியா இடையேயான தொடக்கப் போட்டி, பெப்ரவரி 23 அன்று பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதும் போட்டி மற்றும் மார்ச் 2 அன்று நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் இறுதி குழு நிலை போட்டிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்க முடியும்.

இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த பரபரப்பான போட்டியில், உலகின் முதல் எட்டு அணிகள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.

பெப்ரவரி 3 ஆம் திகதி விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதம் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் நீண்ட காலமாக மிகவும் விருவிருப்பாக இருந்து வருகின்றன, இந்தப் போட்டிகள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரை வென்ற பிறகு உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, சனிக்கிழமை துபாய் சென்றுள்ளதுடன் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு தயாராகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

The post இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி! கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனைக்கு appeared first on Oruvan.com.