India - Pakistan Archives - Oruvan.com

ஆசியக் கிண்ணம் 2025!! கை கொடுக்க மறுத்தது முதல் காசை தூக்கி எறிந்தது வரை – விளையாட்டில் நடந்த அரசியல்
ஆசியக் கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றியை தனதாக்கியுள்ளது.

துபாயில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்திருந்தது.

இந்த தொடரில் இந்திய அணி எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையாது சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

அதேநேரத்தில் இந்த தொடரில் இந்திய அணியை மூன்று முறை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி மூன்று முறையும் தோல்வியை சந்தித்துள்ளது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியினர் 19 சதம் ஒரு ஓவர்களின் சலக விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 தசம் நான்கு ஓவர்களின் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ஓட்டங்களை குவித்து வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

எவ்வாயினும், போட்டி முடிந்த பின்னர் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்படும் சம்பியன் கிண்ணத்தை ஏற்க இந்திய அணி மறுத்துள்ளது.

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கிண்ணத்தை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர்.

இதனால் கிண்ணம் இன்றியே இந்திய அணி தனது வெற்றியை கொண்டாடியிருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் பெற்றியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு, இந்திய அணி வீரர்களை மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான மோஹ்சின் நக்வி கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் 1 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்த இந்திய அணி வீரர்கள், மோஹ்சின் நக்வி கையில் இருந்து ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்துவிட்டனர்.

மாறாக அவர்கள், கோப்பையை கையில் கொண்டு வந்தது போல் சைகை காட்டி தங்களது வெற்றியை கொண்டாடினர். இதில் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் அமைச்சர் மோஹ்சின் நக்வி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

மேலும், இந்திய அணி வீரர்கள் ஆசியக் கோப்பையை பெற்றுக்கொள்ளததால் அந்த கிண்ணத்தை ஆசியக் கிண்ண நிர்வாகம் கையோடு தூக்கிச் சென்றது.

பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து இந்திய அணி வீரர்கள் கிண்ணத்தை வாங்க மறுத்ததால் கிண்ணத்தை நிர்வாகம் கையோடு தூக்கிச் சென்ற விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் இரண்டாம் இடம்பிடித்த பாகிஸ்தான் அணிக்கு வழங்கப்பட்ட பணப் பரிசை அதாவது காசோலையை தூக்கி எறிந்திருந்தார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பாரிய அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தை இந்த தொடர் முழுவதும் காணமுடிந்தது.

இருநாட்டு வீரர்களும் தங்களின் கோபங்களை பகிரங்கமாக வெளிபப்படுத்தியிருந்தனர்.

லீக் தொடரில் இரு அணிகளும் மோதிய போது, போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்திய அணி வீரர்கள் கை கொடுக்க மறுத்தனர். இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

பின்னர் இடம்பெற்ற இரண்டு போட்டிகளின் போது நாணய சுழற்சியின் போதும் இந்திய அணி தலைவர் பாக் அணி தலைவருக்கு கை கொடுக்க மறுத்திருந்தார்.

இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தமை அனுமதித்த போட்டி நடுவர் ஆன்டி பைக்ராப்டை நீக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் பாகிஸ்தான் முறைப்பாடும் செய்திருந்தது.

மேலும் போட்டிகளில் போது இந்திய ரசிகர்களை சீண்டும் வகயைில் ஜெட் விமானம் தலையில் மோதியது போல் பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவுப் சைகை காட்டியிருந்தார்.

இதை சர்வதேச கிரிக்கெட் பேரவை கண்டித்து அபராதமும் வித்திருந்தது.

மேலும், போட்டியின் போது அரைச்சதம் அடித்த பின்னர் பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான, தனது துடுப்பாட்ட மட்டையை விமானம் போன்று பாவித்து சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இதையும் சர்தேச கிரிக்கெட் பேரவை கடுமையாக எச்சரித்திருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை இந்திய பாதுகாப்பு படையினருக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் பேசியிருந்தார்.

போட்டியின் போது அரசியல் பேசியமைக்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இப்பயாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்த தொடர் முழுவதும் தங்களின் கோப்தை வெளிப்படையாக காட்டியிருந்தனர்.

The post ஆசியக் கிண்ணம் 2025!! கை கொடுக்க மறுத்தது முதல் காசை தூக்கி எறிந்தது வரை  – விளையாட்டில் நடந்த அரசியல் appeared first on Oruvan.com.

ஒபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தான் விமானப் படைக்கு பெரும் சேதம்
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் முழுவதும் பல இராணுவ தளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒபரேஷன் சிந்தூருடன் இணைந்த இந்திய தாக்குதல்கள் பாகிஸ்தான் விமானப்படையின் உள்கட்டமைப்பில் சுமார் 20 வீதம் அழித்ததாகவும், அந்நாட்டின் பல போர் விமானங்களை சேதப்படுத்தியதாகவும் ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

அதன்படி, பாகிஸ்தான் விமானப்படையின் F-16 மற்றும் JF-17 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சர்கோதா மற்றும் போலாரி உள்ளிட்ட வெடிமருந்து கிடங்குகள் மற்றும் விமான தளங்கள் போன்ற முக்கியமான இடங்கள் இந்திய தாக்குதல்களில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்து மாகாணத்தின் ஜாம்ஷோரோ மாவட்டத்தில் உள்ள போலாரி விமானப்படை தளத்தின் மீதான தாக்குதல் கடுமையானது எனவும், பாகிஸ்தான் விமானப்படை ஸ்க்வாட்ரான் தலைவர் உஸ்மான் யூசுப் மற்றும் நான்கு விமானப்படை வீரர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் பாகிஸ்தான் விமானப்படையின் பல விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சிந்தூர் நடவடிக்கையின் கீழ், இந்தியப் படைகள் பரந்த அளவிலான பாகிஸ்தான் இராணுவத் தளங்களைத் தாக்கின.

இதன்படி, ரஃபிகி, முரிட், ஸ்கர்டு, போலாரி, சுக்கூர், சியால்கோட், பஸ்ரூர், நூர் கான், சுனியன், சர்கோதா மற்றும் ஜகோபாபாத் ஆகிய விமானத் தளங்கள் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு முன்னரும், பின்னரும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் ஜகோபாபாத்தில் உள்ள ஷாபாஸ் விமானப்படை தளத்தில் குறிப்பிடத்தக்க அழிவை வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

The post ஒபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தான் விமானப் படைக்கு பெரும் சேதம் appeared first on Oruvan.com.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்களுக்கு தடை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்தியப் பாடல்களை ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டன.

பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (பிபிஏ) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவை அந்நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லாஹ் தரார் வரவேற்றுள்ளார். இந்த முடிவானது தேசபக்தி எனவும் அவர் விபரித்துள்ளார்.

இதுபோன்ற சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் அடிப்படை மதிப்புகளை ஆதரிப்பதிலும் அனைவரும் ஒற்றுமையாக நிற்கிறார்கள் என்பதற்கு இந்திய பாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது சான்றாகும் என்று அவர் கூறினார்.

பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்த ‘அபிர் குலால்’ திரைப்படம் இந்தியாவில் வெளியிடப்படாது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

பாகிஸ்தானுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் படத்தைத் திரையிடத் தயாராக இல்லை என்றும், பல அமைப்புகள் படத்தைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

பின்னர், பாகிஸ்தானின் மூத்த விநியோகஸ்தரான சதீஷ் ஆனந்த், அபிர் குலால் பாகிஸ்தானிலும் வெளியிடப்படாது என்பதை உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, ‘அபிர் குலால்’ படத்தின் இரண்டு பாடல்களான குதயா இஷ்க் மற்றும் அங்ரேஜி ரங்ராசியா ஆகியவை யூடியூப் இந்தியாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

The post பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்களுக்கு தடை appeared first on Oruvan.com.

இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான் மிரட்டல்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டால், அது முழு அளவிலான போரை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிஃப் அப்பாசி எச்சரித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்கள் இரத்து செய்யப்பட்டு, உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.

இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் தனது வான்வெளி மற்றும் வாகா எல்லையை இந்திய விமான நிறுவனங்களுக்கு மூடி, இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தியது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அமைச்சரின் ஆத்திரமூட்டும் கருத்துக்கள் வெளிவந்தன.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்படவில்லை, அவை நாட்டின் பல பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்றும், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நமது நீர் தடைபட்டால், இந்தியா முழு வீச்சில் போருக்குத் தயாராகும்.” நம்மிடம் ஏராளமான போர்முனைகளும் ஏவுகணைகளும் உள்ளன, அவை வெறும் காட்சிக்காக அல்ல. நாட்டில் நாம் அணு ஆயுதங்களை எங்கு வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது.

கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பாகிஸ்தானின் ஆயுதக் கிடங்குகள் இந்தியாவை மட்டுமே குறிவைக்கின்றன,’ என்று பாகிஸ்தான் அமைச்சர் எச்சரித்தார்.

இதற்கிடையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இராஜதந்திர உறவுகள் மோசமடைந்து வருவதால், முக்கியமான சூழ்நிலைகளைச் சமாளிக்க இராணுவம் தயாராக உள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி காஷ்மீருக்குச் சென்று நிலைமையை மதிப்பாய்வு செய்துள்ளார்.

இந்திய விமானப்படை போர் விமானங்களைப் பயன்படுத்தி ஒரு வான்வழிப் பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தது. ‘அக்ரம்’ என்று பெயரிடப்பட்ட வருடாந்திர விமானப் பயிற்சியில் ரஃபேல் மற்றும் சுகோய்-30 போர் விமானங்கள் பங்கேற்றன.

சிக்கலான சூழ்நிலைகளில் தரைவழித் தாக்குதல் மற்றும் மின்னணுப் போரில் இராணுவத்தின் திறன்களை இந்த வான் பயிற்சி சோதித்துப் பார்த்தது மற்றும் நிரூபித்தது.

மீடியோர், ரேம்பேஜ் மற்றும் ரோக்ஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல்களும் வான் பயிற்சியின் ஒரு பகுதியாக இருந்தன. கூடுதலாக, இந்திய கடற்படை அரேபிய கடலில் ஒரு முக்கியமான ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியது.

கடற்படையின் புதிய வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சூரத்திலிருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

தரையில் இருந்து வான்வழி நோக்கி ஏவக்கூடிய நடுத்தர தூர தரையிலிருந்து வான்வழி ஏவுகணை (MRSAM) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை 70 கிலோமீட்டர் தொலைவில் எதிரி விமானங்கள் அல்லது ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்டது.

The post இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான் மிரட்டல் appeared first on Oruvan.com.

இந்தியாவை தாக்குவதற்கான அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான்
இந்தியாவை தாக்குவதற்கான அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாசி தெரிவித்துள்ளார்.

சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால் போருக்கு தயாராக வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எம்மிடம் உள்ள இராணுவ ஆயுதங்களும், ஏவுகணைகளும் பார்வைக்கு வைப்பதற்கு அல்ல.

நாட்டின் எந்தெந்த பகுதிகளில் நாம் அணு ஆயுதங்கள் மறைத்து வைத்துள்ளோம் என்று யாருக்கும் தெரியாது.

எம்மிடம் உள்ள அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் அனைத்தும் இந்தியாவை நோக்கி மட்டுமே உள்ளன.

இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 12 பேர் காயமடநை்தனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டதுடன் விரைவில் பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதல் கொடுப்பதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது என்றும் அறிவித்திருந்தது.

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது. இந்த தீர்மானத்திற்கு பாகிஸ்தான் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

The post இந்தியாவை தாக்குவதற்கான அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான் appeared first on Oruvan.com.