India News Archives - Oruvan.com

இந்தியாவின் பி.எஸ்.எல்.வி சி – 62 ரொக்கெட் திட்டம் தோல்வி
இந்தியாவால் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி – 62 ரொக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட், இந்திய நேராப்படி 10.17 க்கு இன்று விண்ணில் ஏவப்பட்டது.

ரொக்கெட் ஏவப்பட்ட முதல் இரண்டு நிலைகள் வெற்றிகரமாக அமைந்தாலும், மூன்றாவது நிலை தொடங்கிய பிறகு, கட்டுப்பாட்டு மையத்துக்கு வரும் சமிஞ்சையில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

“பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தின் 3 ஆவது நிலையின் முடிவில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரொக்கெட் இறுதி நேரத்தில் தனது பாதையிலிருந்து விலகிச் சென்றதால், அதில் இருந்த 16 செயற்கைக்கோள்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post இந்தியாவின் பி.எஸ்.எல்.வி சி – 62 ரொக்கெட் திட்டம் தோல்வி appeared first on Oruvan.com.

டெல்லி கார் குண்டுவெடிப்பு – பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு
டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்புஅதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்துள்ளனர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

சாலையில் வெடித்து சிதறிய காரை, காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த வைத்தியர் உமர் முகமது நபி செலுத்தியதாகவும், இந்த சம்பவத்தில் அவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உமர் முகமது நபி  ஹரியானாவின் அல் பலா மருத்துவக் கல்லூரியில் வைத்தியராக பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடரிபில் குறித்த மருத்துவ கல்லூரியின் மேலும் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், “டெல்லி குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை படை தீவிரவாதியாக செயல்பட்ட உமர் முகமது நபி உட்பட கைதான அனைத்து மருத்துவர்களும் அந்த அமைப்பின் தீவிர உறுப்பினர்களாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

The post டெல்லி கார் குண்டுவெடிப்பு – பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு appeared first on Oruvan.com.

உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை திருடிய வைத்தியசாலை ஊழியர்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் உடலில் இருந்து தங்க நகைகளை வைத்தியசாலை ஊழியர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை அந்த நபர் திருடுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

உத்தரப்பிரதேசத்தின் ஹிரன்வாடா கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான இளம் பெண் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரின் உடல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் உடலைப் பரிசோதித்து, பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்தப் பரிசோதனையின் போது, ​​அந்தப் பெண்ணின் உடலில் இருந்து காதணிகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிஸார் காதணிகளைத் திருடிவிட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இது குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, வைத்தியசாலை ஊழியர் ஒருவர் காதணிகளில் ஒன்றை பொலிஸாரிடம் கொடுத்து, தரையில் அதைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.

எவ்வாறாயினும், பொலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குறித்த வைத்தியசாலை ஊழியரே காதணிகளைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் நகைகளைத் திருடும் சிசிடிவி காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தன.

அந்தப் பெண்ணின் கணவரின் முறைப்பாட்டின் அடிப்படையில், வைத்தியசாலையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் வைத்தியர் கிஷோர் அஹுஜா, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

यूपी : शामली के जिला अस्पताल में वार्ड बॉय ने महिला की लाश से कुंडल चुरा लिए। रोड एक्सीडेंट में महिला की मौत हुई थी। CCTV देखिए।@riyaz_shanu pic.twitter.com/9ioH5JDUXe

— Sachin Gupta (@SachinGuptaUP) April 20, 2025

The post உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை திருடிய வைத்தியசாலை ஊழியர் appeared first on Oruvan.com.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 45 அமைப்புகளுக்கு தடை – திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது
தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட 67 அமைப்புகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 45 பயங்கரவாத அமைப்புகளாகவும், 22 சட்டவிரோத அமைப்புகளாகவும் வகைப்படுத்தப்பட்டு திருத்தி அமைக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள், பாபர் கால்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் கமாண்டோ படை, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி, ஹர்கத் உல் முஹாஜூதின், அல் உம்ர் முஹாஜூதின், ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, சிமி, தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ் தேசிய மீட்புப் படை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் போர் உள்பட 45 அமைப்புகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, மக்கள் விடுதலை இராணுவம், தேசிய பெண்கள் முன்னணி, தேசிய மனித உரிமைகள் அமைப்பு கூட்டமைப்பு, அகில இந்திய இமாம்கள் கவுன்சில் உள்பட 22 அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்புகள் இந்தியாவில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். இந்த அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவி செய்வது கடும் குற்றமாகும்.

அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 45 அமைப்புகளுக்கு தடை – திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது appeared first on Oruvan.com.

2050ஆம் ஆண்டு உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும்
2050ஆம் ஆண்டுக்குள், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர், அங்கு 231 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

தற்போது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 204 மில்லியனாக உள்ளது. 2050ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை இந்தோனேசியாவில் இருக்கும் முஸ்லிம்களை விட அதிமாகிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2025 நிலவரப்படி, உலக மக்கள் தொகை 8.09 பில்லியன் ஆகும். உலகில் ஒவ்வொரு வினாடிக்கும் 4 பிறப்புகளும், 2 இறப்புகளும் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2050ஆம் ஆண்டு உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும் appeared first on Oruvan.com.