including Archives - Oruvan.com

பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 05 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிலும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி இந்தோனேசியாவில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 05 பேர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை பொலிஸார் பொறுப்பேற்று நேற்று (30) இலங்கைக்கு விமானம் ஊடாக அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில் appeared first on Oruvan.com.

குருநாகல், நாரம்மல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தைகள் உட்பட மூவர் பலி
குருநாகல், நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நாரம்மல – கிரிஉல்ல வீதியில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரொன்று வீதியை விட்டு விலகி வலது பக்கத்தின் எதிர் திசையில் பயணித்த பேருந்து ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் மஹவ, திவுல்லாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய காரின் சாரதியும், 09 மாதங்கள் மற்றும் 11 மாதங்களுடைய இரண்டு பெண்குழந்தைகளும் அடங்குவர்.

விபத்தில் காயமடைந்த பேருந்து சாரதி, நடத்துனர் மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வெல்லவ பொலிஸ் பிரிவின் வாரியப்பொல – கும்புக்கெடே வீதியில் உள்ள கபுஹேன பகுதியில் இடம்பெற்ற

மற்றொரு விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குருநாகல் கும்புக்கெடே நோக்கிச் சென்ற லொறியே வீதியில் சென்றவர் மீது மோதியுள்ளது.

The post குருநாகல், நாரம்மல பகுதியில் இடம்பெற்ற  விபத்தில் குழந்தைகள் உட்பட மூவர் பலி appeared first on Oruvan.com.

சூறாவளி, காட்டுத் தீ என கனடாவை புரட்டிப் போடும் இயற்கை சீற்றம்
கனடாவின் பல மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு வெப்பம், காற்றின் தரம் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பம் மற்றும் இடியுடன் கூடிய மழை தொடர்பில் 191 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை நிலவரப்படி காற்றின் தரத்திற்கான 342 எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்ததாக கனேடிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒன்டாரியோ, கியூபெக், ஆல்பர்ட்டா, நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர் ஆகிய பகுதிகளுக்கு வெப்பமான வாநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்

கியூபெக் மற்றும் ஒன்டாரியோவிலும் புயல் எச்சரிக்கைகள் அமுலில் காணப்படுகின்றன.

மணிக்கு 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதுடன் இன்று மாலைக்குள் சூறாவளி ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இன்று பிற்பகல் பலத்த இடியுடன் கூடிய மழை, காற்று மற்றும் சூறாவளி மிகவும் வலிமையாக இருக்கும் என்பதால் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும்

இயற்ககை அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post சூறாவளி, காட்டுத் தீ என கனடாவை புரட்டிப் போடும் இயற்கை சீற்றம் appeared first on Oruvan.com.