inclement Archives - Oruvan.com

சீரற்ற வானிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 05 மாவட்டங்களின் 10 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தில் பதுளை, எல்ல, ஹாலி எல, பசறை, மொனராகலை மாவட்டத்தில் பிபில, படல்குபுர, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல, மற்றும் மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, ரத்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக மின்னல் தாக்குதலுக்கு இலக்கான ஹாலி எலவின் உடுகம பகுதியில் இரண்டு பசுக்கள் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

The post சீரற்ற வானிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை appeared first on Oruvan.com.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்திலும் மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

The post நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை appeared first on Oruvan.com.

கடலில் சிக்கிய மீனவர்களை பாதுகாப்பாக மீட்ட கடற்படை
சீரற்ற வானிலை காரணமாக மீன்பிடி படகொன்று காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடலில் சிக்கிய இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படை வெற்றிகரமாக ஒருங்கிணைந்த கடல் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மீட்டது.

இந்தியாவின் மீன்பிடி படகொன்று எந்தவொரு தொடர்பும் இன்றி காணாமற் போயுள்ளதாக மும்பையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் இலங்கையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.

இதற்கமைய, கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சிலாபத்திற்கு அப்பால் மேற்கு கடலில் இந்திய மீனவர்களின் மீன்பிடி படகு செயலிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் 04 இந்திய மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்தோடு, இவர்கள் இந்தியாவின் மினிகோய் தீவைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் நால்வரும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

The post கடலில் சிக்கிய மீனவர்களை பாதுகாப்பாக மீட்ட கடற்படை appeared first on Oruvan.com.