incidents Archives - Oruvan.com

இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது
இந்த வருடத்தின் முதல் 07 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இதே காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்பிரகாரம் 72 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்ட நிலையில் அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிகளவில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் பொலிஸ் திணைக்களத்தில் பதிவானதுடன், இதுவரை 17 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களில் கடமையாற்றியவர்களும் அவர்களில் அடங்குவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த காலங்களில் இலஞ்ச வழக்குகள் தொடர்பாக 27 நபர்களை நீதிமன்றங்கள் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது appeared first on Oruvan.com.

30 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் பதிவு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ,சப்ரகமுவ மற்றும் ஒலுவில் பல்கலைக்கழகங்களில் அதிகளவான பகிடிவதைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க, 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும்.

இவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் இரகசியமாக பரிசீலிக்கப்படும் என்பதுடன், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 30 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் பதிவு appeared first on Oruvan.com.

கடந்த 07 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு
கடந்த 07 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் நேற்று (08) வரை நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 62 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக 260 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 229 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

பாதாள உலக குழுவை ஒடுக்குவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைப் பார்க்கும்போது குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாக இல்லை என்றும், எந்தவொரு சூழ்நிலையிலும் மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

The post கடந்த 07 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு appeared first on Oruvan.com.

ஜனவரி மாதம் முதல் பத்தொன்பது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு
இலங்கையில் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை பத்தொன்பது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த வருடம் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவை .

மீதமுள்ள ஏழு சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகளால் ஏற்பட்டவை.

விசாரணைகளின் விளைவாக 68 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ஆறு, டி -56 துப்பாக்கிகள், இரண்டு த்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குற்றங்கள் தொடர்பாகப் பயன்படுத்தப்பட்ட எட்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கார்கள், ஒரு வேன் மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க மேலும் தெரிவித்தார்.

The post ஜனவரி மாதம் முதல் பத்தொன்பது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு appeared first on Oruvan.com.

பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி
நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

அண்மைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும் என்றும், அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஸ்திரமின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறப்படுவது தொடர்பான தகவல்களை அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

The post பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி appeared first on Oruvan.com.

அரச வங்கி ஒன்றில் 107 மோசடி சம்பவங்கள் பதிவு!
அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கி ஒன்றில் இடம்பெற்றுள்ள 107 மோசடி சம்பவங்கள் காரணமாக அந்த வங்கியில் 81,715,811 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த வங்கியின் அட்டை மையத்தில் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள பல வங்கிக் கிகைகளில் ஏற்பட்டுள்ள மோசடி சம்பவங்கள் காரணமாக ஏற்பட்ட நட்டங்களால் இவ்வாண்டு மே மாதம் 31ஆம் திகதியாகும் போது இந்த நட்ட மிகுதி காணப்படுவதாக கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தன்னியக்க வங்கி இயந்திரங்களில் (ஏடிஎம்) மோசடியான முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளுதல், அடகு நகைகளை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளுதல், தன்னியக்க வங்கி இயந்திரங்களில் (ஏடிஎம்) பணத்தை ஏற்றும் போது மோசடி செய்தல், வங்கி ஊழியர்கள் மற்றும் பிற வெளி தரப்பினரால் சேமிப்ப கணக்குகளில் இருந்து பணம் பெற்று, க்ளைம் வவுச்சர்கள் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை மோசடி செய்தல், நிலையான வைப்புத்தொகையில் பணம் எடுத்தல், ஈ வணிக பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை ஏமாற்றுதல் போன்றவற்றின் மூலம் இந்த பண மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி 8,096,767 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளன. மொத்த மோசடிகளில் 30 வங்கியின் ஊழியர்களால் செய்யப்பட்டவை மற்றும் மோசடி செய்யப்பட்ட மொத்தத் தொகை 89.88 மில்லியன் ரூபாய் எனவும் 60 வீதம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

The post அரச வங்கி ஒன்றில் 107 மோசடி சம்பவங்கள் பதிவு! appeared first on Oruvan.com.