in Archives - Oruvan.com

வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை இல்லை
வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என பிரதி விவசாயப் பணிப்பாளர் மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

உளுந்து அறுவடை தொடர்பில் இன்று (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“2024-2025  ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பெரும் போகத்தில் 5650 ஹெக்டேயர் அளவில் வவுனியா மாவட்டத்தில் உளுந்து செய்கை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது உளுந்து அறுவடையை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்போது உரிய விலை கிடைக்கவில்லை என்பது குறையாகவுள்ளது.

உண்மையில் அறுவடைக் காலத்தில்  விற்பனைக்கு கொண்டு செல்லும் போது விலை குறைவாக தான் இருக்கும். உளுந்தை கவனமாக வண்டு மற்றும் பூச்சி தாக்கம் இல்லாது பாதுகாக்க வேண்டும்.

விலை  அதிகரிக்கும் காலங்களில் அதனை விற்பனை செய்ய வேண்டும். காற்று புகாவண்ணம் 300 கேச் தடிப்புள்ள பொலித்தீனில் பொதி செய்து வைத்திருக்க முடியும் அல்லது 5 லீட்டர் குடிநீர் போத்தலில் கூட உளுந்தைப் போட்டு பாதுகாப்பாக மூடி வைக்க முடியும்.

அரசாங்கம் உளுந்திற்கான விலை தொடர்பில் அவதானம் செலுத்தி வருகிறது“ என தெரிவித்தார்.

The post வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை இல்லை appeared first on Oruvan.com.

இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் ஒதுக்கீட்டுச் சட்டமூலம்
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதன்படி, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 18 முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறுவதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 25 ஆம் திகதி பிற்பகல் நடைபெறும்.

பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை  குழுநிலை விவாதம் எனப்படும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி பிற்பகல் நடைபெறும்.

இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு புதிய வேட்புமனுக்களை கோரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் சமர்ப்பிக்கப்படவுள்ள  சட்டமூலம் சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றிய பின்னர்,  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோரும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும்.

The post இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் appeared first on Oruvan.com.

மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை விழுந்ததில் இருவர் உயிரிழப்பு
மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது மரக்கிளை விழுந்ததில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதுடைய தெவுந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

ஜனவரி 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 12 சிறைக்கைதிகள் படுகாயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மாத்தறை சிறைச்சாலையில் இருந்த 55 கைதிகள் நேற்று (02) இரவு அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

மரக்கிளை விழுந்து ஏற்பட்ட சேதத்தினால் மாத்தறை சிறைச்சாலையில் போதிய இடவசதி இல்லாததால் இவ்வாறு கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

The post மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை விழுந்ததில் இருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

பட்டாசு விற்பனையில் 50 வீத வீழ்ச்சி
கடந்த நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் பட்டாசு விற்பனையானது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்ணான்டோ தெரிவித்தார்.

மற்ற ஆண்டுகளில் நத்தார் மற்றும் புத்தாண்டு நாட்களில் பட்டாசு உற்பத்தி அதிகளவில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் பட்டாசு விற்பனை சரிந்ததால், உற்பத்திச் செலவை ஈடுகட்ட, பட்டாசுக்களை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய, உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த தேர்தல் காலத்தில் இருந்து பட்டாசு உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக தினேஷ் பெர்னாண்டோ வெளிப்படுத்தினார்.

The post பட்டாசு விற்பனையில் 50 வீத வீழ்ச்சி appeared first on Oruvan.com.

எதிர்வரும் ஜனவரியில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு
சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் டிசம்பர் மாதத்தின் பின்னர் கொடுப்பனவு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யான மற்றும் அடிப்படையற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நாட்களில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அதிகாரமளிக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிராந்திய செயலக மட்டத்தில் தகவல் புதுப்பித்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனூடாக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் தகவல்களின்படி, நாட்டில் தற்போது 47,244 சிறுநீரக நோயாளிகள் இருப்பதாகவும், எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம், எனவே இந்த தகவலை புதுப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக தற்போது சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு பெறும் எவருக்கும் கொடுப்பனவு எவ்விதத்திலும் குறைக்கப்பட மாட்டாது என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எதிர்வரும் ஜனவரியில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு appeared first on Oruvan.com.