imported Archives - Oruvan.com

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர் கைது
வவுனியாவில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பீடி இலைகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய செட்டிக்குளம் – மாங்குளம் பகுதியில் நேற்றிரவு (03) மேற்கொள்ளப்பட்ட

சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனமொன்றில் 25 கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகனை கொண்டு சென்ற இருவரை கைதுசெய்த பொலிஸார்

குறித்த சந்தேகநபர்களுக்கு உதவிய மேலும் இருவரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 21, 28, 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர் கைது appeared first on Oruvan.com.

பல ஆண்டுகளுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மீண்டும் சேவையில்
பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக (CHOGM) இறக்குமதி செய்யப்பட்ட 35 பேருந்துகளில் ஒன்பது பேருந்துகள், இன்று செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.

இதற்கமைய 375 இலட்சம் ரூபா செலவில் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று கட்டுபெத்த சூப்பர் சொகுசு சுற்றுலா சாலையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு, அவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும், உதிரி பாகங்கள் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவை மீண்டும் சேவையில் சேர்க்கப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

காலி, மாத்தறை மற்றும் கண்டி போன்ற இடங்களுக்கு நீண்ட தூர சேவைகளுக்கு அதிக தேவை உள்ள நிலையில் இந்த பேருந்துகள் ஆரம்பத்தில் குறுகிய தூர சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும், பின்னர் நீண்ட தூர வழித்தடங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

The post பல ஆண்டுகளுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மீண்டும் சேவையில் appeared first on Oruvan.com.

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னர், 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 1100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 1200 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

The post இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடிக்கு தீர்வாக நேற்று நள்ளிரவு நிலவரப்படி  167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 66,000 மெட்ரிக் தொன் பச்சையரிசி மற்றும் 101,000 மெட்ரிக் தொன் புழுங்கல் அரிசி ஆகியவை உள்ளடங்குகின்றன.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 8,000 மெட்ரிக் தொன் அரிசி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் சுங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளமையால் குறித்த அரிசியை விடுவிக்க, அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கான காலத்தை நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் நாட்டரிசி மற்றும் பச்சையரிசி தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில், இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post 167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி appeared first on Oruvan.com.

115,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி
இறக்குமதி அனுமதிப்பத்திரமின்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியதன் பின்னர் இன்று (8) மாலை வரையில் 115,000 மெட்றிக் தொன் அரிசி துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

குறித்த 115,000 மெட்றிக் தொன் இறக்குமதி அரிசித் தொகையில் 45,000 மெட்றிக் தொன் பச்சை அரிசி மற்றும் 70,000 மெட்றிக் தொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சுங்கத்திற்கு அனுப்பப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியானது விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் டிசம்பர் 4 ஆம் திகதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post 115,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி appeared first on Oruvan.com.

85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி
இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்ய அனுமதியளித்து இன்று (02) வரையில் 85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அரிசி துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

குறித்த இறக்குமதி செய்யப்பட்ட 85,000 மெட்றிக் தொன் அரிசியில் 33,000 மெட்றிக் தொன் பச்சை அரிசியும் 52,000 மெட்றிக் தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாகவும், மேலும் சுங்கத்திற்கு அனுப்பப்பட்ட இறக்குமதி அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அருக்கொட குறிப்பிட்டார்.

இந்த 85,000 மெட்றிக் தொன் அரிசியில் அரச நிறுவனமான அரச வர்த்தக பல்வேறு சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 780 மெற்றிக் தொன் அரிசியும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்.

நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் கடந்த 4ஆம் திகதி முதல் வழங்கியுள்ளது.

The post 85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி appeared first on Oruvan.com.

20 நாட்களுக்குள் 1 இலட்சத்து 54 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி
அரிசி இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் 20 நாட்களுக்குள் 1 இலட்சத்து 54 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அரிசி இறக்குமதியின் இரண்டாவது கட்டம் இம்மாதம் 24ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன்படி துறைமுகத்தில் இருந்து 75,000 மெட்றிக் தொன் அரிசியை சுங்கம் விடுவித்துள்ளது.

குறித்த அரிசித் தொகையில் 32,000 மெட்றிக் தொன் பச்சை அரிசியும், 43,000 மெட்றிக் டொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குகின்றன.

இதற்கு மேலதிகமாக, 12,000 மெட்றிக் தொன் அரிசி கப்பல் மூலம் வந்துள்ளதுடன், அந்த கையிருப்பும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

அரிசி இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த 24ஆம் திகதி வெளியிட்டார், இதனால் அரிசி இறக்குமதிக்கு அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட அரிசி இறக்குமதியின் கீழ், இம்மாதம் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 67,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

The post 20 நாட்களுக்குள் 1 இலட்சத்து 54 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி appeared first on Oruvan.com.

இதுவரை 9,500 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி
இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி இம்மாதம் 4 ஆம் திகதியிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் தனியார் துறைக்கு அனுமதி வழங்கியதை அடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் வரை தனியார் அரிசி இறக்குமதியாளர்கள் 9,500 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

9,500 மெற்றிக் தொன் அரிசியில் 3,300 மெற்றிக் தொன் பச்சை அரிசியும் 6,200 மெற்றிக் தொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாக அருக்கொட தெரிவித்துள்ளார்.

இறக்குமதி உரிமம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலம் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

The post இதுவரை 9,500 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி appeared first on Oruvan.com.

மனித பாவனைக்கு உதவாத 75,000 கிலோகிராம் இறக்குமதி
இரு தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 03 கொள்கலன்களில் காணப்பட்ட 75,000 கிலோகிராம் அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றது என உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் இனங்காணப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த அரிசித் தொகையை மீள ஒப்படைக்குமாறு இலங்கை சுங்க அதிகாரிகள் இரு இறக்குமதியாளர்களுக்கும் அறிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக கடந்த 4ஆம் திகதி அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதை அடுத்து சுமார் 3000 மெட்றிக் டொன் அரிசியை இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு கொள்கலன்களில் 50,000 கிலோகிரோம் அரிசி பாவனைக்கு உதவாதவை மற்றும் 25,000 கிலோ அரிசி இறக்குமதி விதிமுறைகளை மீறி தயாரிப்பு தகவல் லேபிள்கள் மாற்றியமைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதால் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

சுங்கத்திற்கு கொண்டு வரப்பட்ட 90 வீதத்திற்கும் அதிகமான அரிசி கையிருப்புகளை விடுவிப்பதற்கு சுங்கத்துறை தலையிட்டுள்ளதுடன், திருப்பி அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்ட 03 கொள்கலன்களில் உள்ள அரிசியை திருப்பி அனுப்பாவிட்டால், அவற்றை பறிமுதல் செய்யும் திறன் சுங்கத்திற்கு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

The post மனித பாவனைக்கு உதவாத 75,000 கிலோகிராம் இறக்குமதி appeared first on Oruvan.com.

இறக்குமதி அரிசிக்கான சுங்க வரி குறைக்கப்பட வேண்டும்
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான சுங்க வரி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டால், சில்லறை விற்பனைக்காக அரிசியை சிறந்ததொரு விலைக்கு வழங்க முடியும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு அரிசியை ஏறக்குறைய 220 ரூபாவிற்கு வழங்க முடியும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

அந்த அரிசி மொத்த விற்பனை சந்தைக்கு வரும்போது, கிலோவுக்கு 8 முதல் 10 வீதம் வரை செலவழிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 440 மெட்றிக் டொன் அரிசியை தனியார் இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசியை இறக்குமதி செய்ய தனியாருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது.

அதன்படி, இம்மாதம் 20ம் திகதி வரையில் இந்த அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.

The post இறக்குமதி அரிசிக்கான சுங்க வரி குறைக்கப்பட வேண்டும் appeared first on Oruvan.com.