Important Archives - Oruvan.com

அடையாள அட்டை பெற்றுக்கொள்வோருக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவை, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும் இன்று (08) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தச் சேவை திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் முன்னெடுக்கப்படும் என அதன் பதில் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், திணைக்களத்தின் கணினி கட்டமைப்பைச் சீர்செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களின் சாதாரண சேவைகள் மற்றும் முன்வரிசைச் சேவைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கணினி கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின்னர், அனைத்துச் சேவைகளும் வழமை போன்று தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

The post அடையாள அட்டை பெற்றுக்கொள்வோருக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு appeared first on Oruvan.com.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக கோரப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழியாகவும் சமர்ப்பிக்க முடியும்.

தனியார் விண்ணப்பதாரர்கள் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள், தங்கள் பாதுகாவலர் (தாய் அல்லது தந்தை) இன் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

The post க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு appeared first on Oruvan.com.

அமெரிக்காவுடனான நல்லுறவுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் – ஜெய்சங்கர் கருத்து
அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் எப்போதும் வலுவான உறவை கொண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“ ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்தல் தொடர்பாக, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் “இருண்ட சீனாவிடம் இந்தியாவை இழந்துவிட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து, வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் பேசிய ட்ரம்ப், “நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன், அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் என்ன செய்கிறார் என்பது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் ஒரு சிறப்பான உறவைக் கொண்டுள்ளன. எனவே கவலைப்பட ஒன்றுமில்லை.” என்று கூறினார்.

ட்ரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த பிரதமர் மோடி, “அதிபர் ட்ரம்பின் உணர்வுகளையும், எங்கள் உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டையும் ஆழமாகப் பாராட்டுகிறேன், முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் தொலைநோக்கு பார்வையுடைய நல்லுறவை கொண்டுள்ளன.” என தெரிவித்திருந்தார்.

The post அமெரிக்காவுடனான நல்லுறவுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் –  ஜெய்சங்கர் கருத்து appeared first on Oruvan.com.

கட்டுநாயக்க விமான நிலையம் வருபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
கட்டுநாயக்க – பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையான காலப்பகுதியினுள், பயணிகளுடன் வருபவர்கள், விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், வேலைபளுமிக்க நேரங்களில், பயணிகளுக்கு தாமதமின்றி சேவையை வழங்குவதற்கும், நெரிசலை முகாமை செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் மற்றும் விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின் வசதி கருதி இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post கட்டுநாயக்க விமான நிலையம் வருபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு appeared first on Oruvan.com.