illegal Archives - Oruvan.com

சட்டவிரோதமான முறையில் பாகங்கள் இணைப்பு – 20 சொகுசு வாகனங்களுடன் மூவர் கைது
சட்டவிரோதமான முறையில் பாகங்களை இணைத்து தயாரிக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறான சட்டவிரோத வாகனங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த வாகனங்களை சட்டவிரோதமாக பொருத்துவதற்கு பொலிஸார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடவத்த , கம்பஹா மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடவத்த, மீகஹவத்த மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இருந்து இந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் சொகுசு கார்கள், ஜீப் ரக வாகனங்கள், வேன்கள், லொரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளடங்குகின்றன.

இது போன்ற மேலும் சுமார் 40 சட்டவிரோத வாகனங்கள் தொடர்பான தகவல்களும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கான அறிவித்தல்: தமது வாகனங்கள் திருடப்பட்டிருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ, அது குறித்த தகவல்களை வழங்க 011-2947780 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அந்தந்தப் பகுதி நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

The post சட்டவிரோதமான முறையில் பாகங்கள் இணைப்பு – 20 சொகுசு வாகனங்களுடன் மூவர் கைது appeared first on Oruvan.com.

மொனராகலையில் சுற்றிவளைக்கப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்
மொனராகலை, மரகல தோட்டம் ரிசர்வ் பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று

சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மதுபான உற்பத்தி நிலையம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பீப்பாய்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிற உபகரணங்களையும் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post மொனராகலையில் சுற்றிவளைக்கப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் appeared first on Oruvan.com.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 78 மீனவர்கள் கைது
கடந்த இரண்டு வாரங்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 78 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

திருகோணமலையைச் சுற்றியுள்ள கடலோர பகுதிகளிலும், காரைதீவு முதல் நிந்தவூர் வரையிலான கடல் பகுதியிலும், நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 35 டிங்கி படகுகளையும், பல நாள் மீன்பிடி படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

The post சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 78 மீனவர்கள் கைது appeared first on Oruvan.com.

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – பிரதான சந்தேகநபர் கைது
கெசல்கமு ஓயா வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் நேற்று (09) கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு உபயோகிக்கப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – பிரதான சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை – ஹட்டனில் ஒருவர் கைது
ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்தில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் நேற்று (06) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் பௌர்ணமி தினங்களில் அதிக விலைக்கு சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்து வருவதாக

ஹட்டன் ஊழல் தடுப்பு ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய வீட்டு வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 38 மதுபான போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் மற்றும் மதுபான போத்தல்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை – ஹட்டனில் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

ட்ரம்ப்பின் வரிகளை ரத்து செய்த அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் – ட்ரம்ப் அதிருப்தி
பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்கும் என அறிவித்த டொனால்ட் ட்ரம்ப், கனடா, மெக்ஸிகோ உட்பட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரிகளை விதித்தார்.

தனது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சீனா மீதான வரியை ட்ரம்ப் பல மடங்கு உயர்த்தினார். பின்னர், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரி வீதத்தைக் குறைத்தார்.

இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து அதனை 50 சதவீதமாக உயர்த்தினார்.

ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்கான இறக்குமதி பாதிக்கப்படும், உள்நாட்டில் பொருட்களின் விலை உயரும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அமெரிக்க மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ட்ரம்ப்பின் வரி விதிப்பு முடிவுகளுக்கு எதிராக கடந்த மே மாதம் நியூயார்க் வர்த்தக நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்க கூட்டாட்சி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில்,

“உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கு எதிராகவும் ட்ரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார்.

இதனை நியாயப்படுத்தவே, தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் பெரும்பாலான வரிவிதிப்பு சட்டவிரோதமானது. கூடுதல் வரி விதிப்பை நீக்க வேண்டும்.

வரிகள் விதிப்பு, அடிப்படையில் காங்கிரஸின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அது வரி விதிப்பில் ஜனாதிபதிக்கு சில அதிகாரங்களை வழங்கி உள்ளது. எனினும், வரம்பற்ற அதிகாரத்தை ஜனாதிபதிக்கு காங்கிரஸ் வழங்கவில்லை. அத்தகைய நோக்கத்தை காங்கிரஸ் கொண்டிருக்கவில்லை.” என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

நியூயோர்க் வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை, உறுதி செய்துள்ள கூட்டாட்சி மேன்முறையீட்டு நீதிமன்றம், அதேநேரத்தில், மேன்முறையீட்டுக்கு ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை கால அவகாசமும் அளித்துள்ளது.

இந்த தீர்ப்பு, ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்துமானால், கூடுதல் வரி விதிப்பின் மூலம் பெறப்பட்ட பணத்தை திருப்பி தர வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

இதனிடையே, நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்து வரி விதிப்புகளும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.

இந்த வரிகள் நீக்கப்பட்டால் அது நாட்டுக்கு ஒரு பேரழிவாக இருக்கும். இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுமானால் அது அமெரிக்காவை அழித்துவிடும்.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

The post ட்ரம்ப்பின் வரிகளை ரத்து செய்த அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் – ட்ரம்ப் அதிருப்தி appeared first on Oruvan.com.

பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை பிரான்ஸுக்கு அனுப்ப நடவடிக்கை
சிறிய படகுகளினூடாக பிரித்தானியாவுக்கு வருகைத்தரும் புலம்பெயர்ந்தோர் சில வாரங்களுக்குள் பிரான்ஸுக்குத் திருப்பியனுப்படுவார்கள் என பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் லண்டனில் நேற்று வியாழக்கிழமை இந்த ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார்கள்.

ஆரம்பத் திட்டம் குறைந்த எண்ணிக்கையிலான மக்களை மட்டுமே உள்ளடக்கியது என்றாலும், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வருகைத்தருவோரை பிரான்ஸுக்குத் திருப்பி அனுப்ப முடியும் என்பதற்கான முன்னுதாரணம் பெரிய திருப்புமுனையொன்றாக இருக்கும் என பிரித்தானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“ஒருவர் உள்ளே, ஒருவர் வெளியே” (one in, one out) என்ற இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிலர் பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள், என்றாலும் இங்கிலாந்தில் புகலிடம் கோருவதற்கு சட்டப்பூர்வமான உரிமைகோரல்கள் இருப்பதாகக் கருதப்படும் சம எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் வாரத்திற்கு 50 பேர் வரை திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

The post பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை பிரான்ஸுக்கு அனுப்ப நடவடிக்கை appeared first on Oruvan.com.

சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது
சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜா எல, வத்தளை, கந்தானை மற்றும் ராகம பகுதிகளை மையமாக கொண்டு வாகனங்களை சோதனையிடும் விசேட சுற்றிவளைப்பும் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கந்தானை, ஜாஎல, வத்தளை மற்றும் ராகம ஆகிய பகுதிகளை மையமாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்காலங்களில் இவ்வாறான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை நாடுமுழுவதும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும்,

குறித்த சோதனை நடவடிக்கைககளுக்காக தேவையான உதவிகளை வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற

அலுவல்கள் அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

The post சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது appeared first on Oruvan.com.

விஜித் விஜதமுனி சொய்சா பயன்படுத்திய ஜீப் வண்டி சட்டவிரோதமானது?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளராக கடமையாற்றிய விஜித் விஜதமுனி சொய்சா பயன்படுத்திய ஜீப் வண்டி சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஜீப் வண்டியானது, கடந்த டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வலானை குற்றத் தடுப்பு பிரிவினரால் ஹப்புத்தளை பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனைத் தொடர்நது இது தொடர்பில் பண்டாரவளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, இது தொரட்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விஜித் விஜதமுனி சொய்சா கடந்த 14ஆம் திகதி வலானை குற்றத் தடுப்பு பிரிவுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அதற்காக அவர் இரு சட்டத்தரணிகள் மூலம் ஆஜராகியுள்ளார்.

எவ்வாறாயினும், அதன்போது அவரிடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் திடீர் சுகயீனத்திற்கு ஆளாகியுள்ளார்.

இதன் காரணமாக, குறித்த வாகனம் தொடர்பில் காரணிகளை முன்வைப்பதற்காக அவருக்கு வேறொரு தினத்தில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post விஜித் விஜதமுனி சொய்சா பயன்படுத்திய ஜீப் வண்டி சட்டவிரோதமானது? appeared first on Oruvan.com.