Ilankai Tamil Arasu Kachchi Archives - Oruvan.com

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கின்றது – தமிழரசு கட்சி கண்டனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு கடும் ஏமாற்றம் அளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

தமிழரசு கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதில் எமது ஆழ்ந்த ஏமாற்றத்தை பதிவு செய்கிறோம்.

அரசாங்கம் பதவியேற்றபோது பல வாக்குறுதிகளை வழங்கியது. எனினும், ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட எடுக்கப்படவில்லை.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தல் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம் எனக் கூறினாலும், எளிதில் செய்யக்கூடியவை கூட முயற்சிகள்கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.

பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக எந்த புதிய சட்டமும் கொண்டு வரமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருந்து.

எனினும், தற்போது அமைச்சர் புதிய பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார் என்பது வருத்தத்திற்குரியது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்ட நீக்கம் செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டில் தற்காலிகமான தடை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், உறுதிமொழிகளும் இருந்தும், அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோன்று, நிகழ்நிலைக் காப்புச் சட்டம் சட்டத்தை நீக்கம் செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

வெளிநாட்டு நடவடிக்கைகள் தேசிய செயல்முறைகளில் பிளவுகளையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என அமைச்சர் கூறியுள்ளமையும், இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் மிகவும் கண்டனத்துக்குரியது.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகள் ஆன போதும், எந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை.

இந்த சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறுவழியில்லை. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் 240 எலும்புக்கூடுகள் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள.

இவை சட்டத்துக்கு புறம்பான கொலைகளாக இருப்பினும் இங்கு கிடைக்கப்பட்ட சான்றுகள் தொடர்பாக அமைச்சர் எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த உயிரிழப்புகளை அடையாளம் காண உள்ளூர் நிபுணத்துவம் இல்லாதது நிதர்சனமான உண்மை.

இருந்தும், அரசாங்கம் சர்வதேச உதவியை இன்னமும் கோரவில்லை, மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமலாக்கப்படுதல் போன்ற பல விடயங்களிலும் இதே நிலை தொடர்கிறது.

அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தியதற்கும், தமிழ் சமூகத்தின் அவாவான சமத்துவம், நீதி, மாண்பு, சமாதானம் ஆகியவற்றுக்காக ஆதரவு வழங்கியதற்கும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியா, மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும், அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அழைத்துள்ளது.

மாறாக, இலங்கை அரசாங்கம் தன் எழுத்திலான பதிலில், எல்லை நிர்ணயிப்பு செயல்முறை முடிந்த பிறகு மட்டுமே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற நிலை எடுத்துள்ளது.

இது பல ஆண்டுகள் தேர்தலை தள்ளிவைக்கும் எண்ணப்பாட்டை காட்டுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மீறி, அவர்களின் வாக்குரிமையை தொடர்ந்து உதாசீனப்படுதலை காட்டி நிற்கிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் முன்வைத்த தனி நபர் சட்டமூலத்திற்கு அரசாங்கம் உடனடியாக ஒப்புதல் வழங்கி, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது

The post இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கின்றது – தமிழரசு கட்சி கண்டனம் appeared first on Oruvan.com.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் ஆட்சி அமைத்தது தமிழரசு கட்சி
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவானார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வலிகாமம் மேற்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

26 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 10 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்களையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன தலா 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சை குழு ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.

தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சண்முகநாதன் ஜெயந்தன் 15 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தர்மலிங்கம் சுப்பிரமணியம் நந்தகுமார் 7 வாக்குகளையும் பெற்றனர்.

உப தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கந்தையா இலங்கேஸ்வரன் தெரிவானார்.

The post வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் ஆட்சி அமைத்தது தமிழரசு கட்சி appeared first on Oruvan.com.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி வசமானது பருத்தித்துறை பிரதேச சபை
பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார்.

பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பருத்தித்துறை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

20 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஒன்பது ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா நான்கு ஆசனங்களையும் சுயேட்சை குழு இரண்டு ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட உதயகுமார் யுகதீஸ் தவிசாளராகவும் பிரதி தவிசாளராக முன்மொழியப்பட்ட கனகரத்தினம் ஶ்ரீகாந்தருபனும் ஏகமனதாக தெரிவானார்.

The post இலங்கை தமிழ் அரசுக் கட்சி வசமானது பருத்தித்துறை பிரதேச சபை appeared first on Oruvan.com.

தமிழரசு கட்சிக்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவருமான சண்முகம் குகதாசன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த கூட்டத்தின் பின்னராக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்

திருகோணமலை மாநகரசபை, பட்டணமும் சூழலும் பிரதேச சபை, மூதூர், குச்சவெளி தம்பலகாமம் ஆகிய உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க கட்சிகளுக்கிடையிலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த சபைகளில் தவிசாளர் பதவிகளை இரு கட்சிகளும் புரிந்துணர்வின் அடிப்படையில் வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழரசு கட்சிக்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து appeared first on Oruvan.com.

அலுவலக திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்த சிறிதரன் எம்.பி
தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகத் திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியேறிச் சென்றிருந்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெற்றது.

அதில் கட்சியின் முக்கிய உறுப்பினரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறிதரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த பின் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகமும், நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தொடர்பாடல் அலுவலகமும் குருமன்காடு, காளி கோவில் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத், இ.சாணக்கியன், கொழும்பு கிளைத் தலைவர் சட்டத்தரணி இரட்னவடிவேல் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள், மாவட்ட கிளையினர் என பலர் கலந்து கொண்டனர்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறித்த அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாது மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் வெளியேறிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அலுவலக திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்த சிறிதரன் எம்.பி appeared first on Oruvan.com.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.

தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம்.எ,சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்,சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

The post தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம் appeared first on Oruvan.com.

குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி – உறுதிப்படுத்தினார் சுமந்திரன்
வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருகின்றது. இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கொழும்பு மாநகர சபையில் ஆசனங்க ளைக் கைப்பற்றுவது தொடர்பில் கட்டம் கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளது.

இது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் கொழும்புக் கிளைத் தலைவர் சட்டத்தரணி சி.இரத்தின வடிவேல் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய முதற்கட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கட்சியின் செயற்பாட்டாளர்களிடமி ருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்தத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புப வர்கள் தமது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், வட்டாரம், அரசியல் செயற்பாடுகளில் கொண்டிருக்கும் அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விண்ணப் பத்தை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் செயலாளர், இலங்கைத் தமிழரசுக்கட்சி, இலக்கம் 40, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியின் ஊடாக கட்சியின் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாகவும், கொழும்புவாழ் தமிழ் மக்களால் நீண்டகால மாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும் கட்சியினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

The post குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி – உறுதிப்படுத்தினார் சுமந்திரன் appeared first on Oruvan.com.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – சாணக்கியன் எம்.பி ஆதங்கம்
பொறுப்பு கூறல் என்ற விடயத்தில் புதிய அரசாங்கத்தின் முன்மொழிவுகள் எதனையும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் முன்வைக்கவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.

“வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பொறுப்புக் கூறல் விடயத்தில் மிகவும் கரிசனையுடன் இருக்கின்றனர். கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் கடந்த கால அரசாங்கங்களை போன்று புதிய அரசாங்கமும் அதேவேளையைத் தான் செய்யப் போகின்றது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

ஜெனிவா அமர்வில் காணாமல் போனோர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசியிருந்தாலும், அவை அனைத்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட பொறிமுறையாகும்.

வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியல் அமைப்பு பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள். ஆனால் புதிய அரசியல் அமைப்பு பற்றி இன்று வரை ஒருவார்த்தைக் கூட பேசவில்லை.

புதிய அரசியல் அமைப்பில் அதிகார பகிர்வு தொடர்பில் என்ன கூறப் போகின்றீர்கள் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். பொறுப்பு கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் பொறுப்பு கூறல் என்பது மிக பிரதானமான விடயம். இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு சாதகமான பதிலையும் வெளிவிவகார அமைச்சர் சொல்லவில்லை.

இதற்கான பதிலடியை எதிர்வரும் தேர்தலில் மக்கள் உங்களுக்கு தருவார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – சாணக்கியன் எம்.பி ஆதங்கம் appeared first on Oruvan.com.

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களம் மாற்றம் பெறவேண்டியது அவசியம் – சிவஞானம்
காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும்.

அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளுடன் அவரவர் கட்சிகளின் கொள்கைகள் மாறுபடாது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வடக்கு கிழக்கில் உள்ள ஊள்ளூர் அதிகர சபைகளை வெற்றிகொள்வதற்கான சாதக நிலைகளை உருவாக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (18.02.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக் கூறும்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தற்போது கடந்த காலங்களைப் போலல்லாது அரசியல் தளம் மாற்றமடைந்துள்ளது. இது தமிழ் தரப்பினரின் அரசியல் களத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதேவேளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தமிழ் அரசியல் புலம் சார்ந்த கட்சிகள் கைப்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் கொள்கைகள் பாதைகள் வேறு வேறாக இருந்தாலும் தங்களின் நிலைப்பாடுகளில் இருந்துகொண்டு ஒன்றிணைவது அவசியமாகும்.

இதில் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்து போராளிக் கட்சிகளும் அடங்குவதாக இருக்க வேண்டும் என்பதுடன் அது தொடர்பில் கருத்தாடல்களை கட்சிகளின் தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேநேரம் தற்போது அனைவரும் ஒரு புதுத் தளத்துக்கு வருவதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுள்ள. அது நிறைவுற்ற பின்னரே தேர்தலில் தற்போதைய களச் சூழலுக்கேற்ப எவ்வாறு ஒரே நிலைப்பாட்டுடன் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க முடியும்.

அது மட்டுமல்லாது கூட்டாக போட்டியிடுவதா இரண்டு அல்லது மூன்று தரப்பாக வாக்குகள் சிதறாதவணம் போட்டியிடுவதா என்பது பற்றியும் அடைவை எட்ட முடியும்.

அத்துடன் தமிழ் தரப்பின் போட்டியாளர்கள் எந்த ஒரு கட்சியும் மற்றைய தரப்பின் மீது காழ்ப்புணர்சியுடனோ அல்லது சேறுபூசல்களையோ முன்னெடுக்காது ஒரே குறிக்கோளுடன் வெற்றி இலக்கை அடையும் பொறிமுறையை உள்ளடக்கி வகையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கான கள நிலையை உருவாக்க வேண்டும்

அந்தவகையில் அவரவரும் தத்தமது சுயத்தோடு நின்று பேசி, ஒருமித்த கருத்தோடு வெற்றிவாய்ப்பு களச்சூழல் யாருக்கு பொருத்தமாக இருக்குமோ அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுப்பதும் அவசியமாகும் எனவும் தெரிவித்தார்.

இதே நேரம் தமிழரசுக் கட்சியில் தற்போது பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவாகியுள்ள நிலையில் கட்சியின் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படுமா என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு அவ்வாறான எதுவும் இனி இடம்பெற வாய்ப்பிருக்காது என்றும் சிறீதரனை கூட கட்சியிலிருந்து வெளியேற்ற இடமளிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

The post காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களம் மாற்றம் பெறவேண்டியது அவசியம் – சிவஞானம் appeared first on Oruvan.com.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளராக சுமந்திரன் நியமனம்
இலங்கை தமிழ் அரசு (ITAK) கட்சியின் பதில் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் முடிவின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நியமனம் செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழ் அரசு கட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளராக சுமந்திரன் நியமனம் appeared first on Oruvan.com.