huge Archives - Oruvan.com

டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணி
இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிப்பதற்கு முன்னதாக, டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர்.

பணயக்கைதிகள் “வீட்டுக்கு வருகிறார்கள் என இந்த பேரணியின் போது உரையாற்றிய அமெரிக்க சிறப்பு தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளார்.

காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை சாத்தியமாக்கியதற்காக டொனால்ட் டிரம்பையும் அவர் பாராட்டினார்.

போர் நிறுத்த அறிவிப்பிற்கு பின்னர் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 500,000 பேர் வடக்கு காசாவிற்குத் திரும்பியதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் இறுதி முடிவுகளுக்காக திங்களன்று உச்சிமாநாட்மொன்றை நடத்துவதாக எகிப்து அறிவித்துள்ளது.

ஷார்ம் எல்-ஷேக்கில் நடைபெறும் உச்சிமாநாட்டில் ட்ரம்ப் உட்பட 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் திங்களன்று எகிப்துக்கு

செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்துக்குச் செல்வதற்கு முன்பு திங்களன்று ட்ரம்ப் இஸ்ரேலுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணி appeared first on Oruvan.com.

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி – எலான் மஸ்க் ஆதரவு
பிரித்தானியாவின் லண்டனில் புலம்பெயர்வோருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.

தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் 26 பொலிஸார் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து 25 பேரை பொலிஸார்கைது செய்தனர்.

லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில்,

“வாக்காளர்களை இறக்குமதி செய்கிறார்கள். தங்கள் நாட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் ஏனைய நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள்.

இது வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தி. இதை நிறுத்தவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

The post குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி – எலான் மஸ்க் ஆதரவு appeared first on Oruvan.com.

யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்ட பேரணி
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி நோக்கி பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து இந்தப் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழின அழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்தும் சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரி வட கிழக்கில் இன்றைய தினம் போராட்ட பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்ட பேரணி appeared first on Oruvan.com.

அரசாங்கத்திடமிருந்து பாரிய இழப்பீட்டுத் தொகையை பெற்ற எம்.பிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அரகலய போராட்ட காலத்தில் தமது சொத்து சேதமடைந்ததாக கூறி அரசாங்கத்திடமிருந்து பாரியளவான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலங்களில் இழப்பீடுகளை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்துள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், குறித்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து நாடாளுமன்றத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனரா என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும்” என்றார்.

The post அரசாங்கத்திடமிருந்து பாரிய இழப்பீட்டுத் தொகையை பெற்ற எம்.பிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை appeared first on Oruvan.com.