Horana Archives - Oruvan.com

ஹொரணையில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு
ஹொரணை-மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (04) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரகஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற லொறி ஒன்றுடன் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

அதிவேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, மறுபுறம் சென்ற லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட

போது வழியிலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post ஹொரணையில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு appeared first on Oruvan.com.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று (25) காலை ஹொரணையில் உள்ள தக்ஷிலா ஜூனியர் கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மழை மற்றும் காலையில் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பயிற்சி அமர்வுக்காக ரத்மலானை விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட பெல்-412 ஹெலிகாப்டர் இன்று காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இருப்பினும், பாதகமான வானிலை கடந்துவிட்டதால் ஹெலிகாப்டர் மீண்டும் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம் appeared first on Oruvan.com.

ஹொரணையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 11 பேர் கைது
ஹொரணை அமரனகொல்ல பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 11 பேரை ஹொரணை பொலிஸார் கைது செய்தனர்.

இந்தக் குழு சமூக ஊடகங்கள் மூலம் தங்களை ஒருங்கிணைத்து, மோட்டார் சைக்கிள்களை அதிவேகத்தில் செலுத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய , மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஹதபாங்கொட, இங்கிரிய, அங்குருவாதொட்ட, பண்டாரகம மற்றும் மொரகஹஹேன பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்களில் மூவருக்கு சாரதி உரிமங்கள் கூட இல்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

The post ஹொரணையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 11 பேர் கைது appeared first on Oruvan.com.

பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் படுகாயம்
ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும்  லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், லொறி உதவியாளர் உட்பட பல பாடசாலை மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து ஹொரணை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், லொறி இங்கிரிய நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் படுகாயம் appeared first on Oruvan.com.