Homagama Archives - Oruvan.com

ஹோமாகம பகுதியில் நாளை நீர் விநியோகத் தடை
நிலவும் வறட்சியான காரணமாக, ஹோமாகம வலய இலக்கம் 02 இற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (07) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஹோமாகம நகரம், வேகந்த, பின்கெத்த வீதி, வலவ்வ வீதி, கெமுனு மாவத்தை, அத்துருகிரிய வீதி, கலவில வத்தை, நியந்தகல, மாகம்மன, மஹகடுவான, தெனிய மற்றும் தியகம பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,நாளை முற்பகல் 08.00 மணி முதல் பிற்பகல் 08.00 மணி வரை இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

The post ஹோமாகம பகுதியில் நாளை நீர் விநியோகத் தடை appeared first on Oruvan.com.

திலினி பிரியமாலி கைது
கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் திலினி பிரியமாலி ஹோமாகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம நீதிமன்றத்தில் கடமையில் இருந்த நிதி அதிகாரியின் கடமையைத் தடுத்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஹோமாகம தலைமையக பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு ஹோமாகம நீதவான் முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை ஹோமாகம தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

The post திலினி பிரியமாலி கைது appeared first on Oruvan.com.

ஹோமாகமையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு
ஹோமாகம கிளை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம் மற்றும் கழுத்துக்கு அருகில் இரத்தக் கறைகள்

காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, பின்னர் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு இந்த இடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 35 வயது மதிக்கத்தக்கவர் என கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நுகேகொடை பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், ஹோமாகம தலைமையக பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஹோமாகமையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு appeared first on Oruvan.com.

எரிவாயு தீர்ந்துப் போனதால் ஏற்பட்ட விபரீதம் – தகன மேடையில் குழப்பம்
ஹோமாகம பிரதேச சபைக்குச் சொந்தமான மீகொட-முத்துஹேனவத்தை மயானபூமி முறையான பராமரிப்பு இல்லாததால், இறுதிக் கிரியைகளின் போது சடலங்கள் முறையாக எரிக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

இவ்வாறு கடந்த 18ஆம் திகதி தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட உடல் முறையாக எரிக்கப்படாமையால், உயிரிழந்தவரின் உறவினர்களுக்கும் தகனக்கூட ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், சடலத்தை கொண்டு வந்தவர்கள் பொலிஸாரின் அவசர தொலைபேசி எண் மூலம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர், மேலும் ஹோமாகம பிரதேச சபைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு அங்கு வந்து இந்த விஷயத்தை விசாரித்த போது, தகனக் கூடத்தில் இருந்த எரிவாயு தீர்ந்து போனதால் உடல் முறையாக தகனம் செய்யப்படவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீகொட பொலிஸார், பிரதேச சபை அதிகாரிகளுடன் சேர்ந்து, எரிவாயு சிலிண்டர்களைக் கொண்டு வந்து உடலை மீண்டும் தகனம் செய்ய நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மீகொடை தஹம் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு குழுவினர், குறித்த மயானத்திற்கு கொண்டு வரப்பட்ட மற்றொரு உடலையும் இதேபோன்று முறையாக எரிக்காத சம்பவத்தையும் எதிர்கொண்டிருந்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எரிவாயு தீர்ந்துப் போனதால் ஏற்பட்ட விபரீதம் – தகன மேடையில் குழப்பம் appeared first on Oruvan.com.

அரசாங்கம் பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றது – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மீறிவிட்டதாகவும், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹோமாகம தேர்தல் செயல்பாட்டு மையத்தை நிறுவுதல் மற்றும் பிரதேச சபை வேட்பாளர் அணியை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தற்போதைய அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மீறிவிட்டது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி சிறிசேன ஆட்சிக்கு வந்த பிறகு, பெற்றோலிய அமைச்சராகப் பதவியேற்ற 14 நாட்களுக்குள் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளைக் குறைத்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் எண்ணெய் மீதான வரிகளை நீக்குவதாக உறுதியளித்ததாகவும், ஆனால் இன்னும் அதை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தற்போதைய அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களை மூன்றில் ஒரு பங்கால் குறைப்பதாக உறுதியளித்ததாகவும், ஆனால் இலங்கை மின்சார சபை நட்டத்தில் இயங்குவதாக அமைச்சர் கூறுவதாகவும் ரணவக்க சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு இலங்கை மின்சார சபை 144 பில்லியனுக்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்க மாட்டோம் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது இன்னும் நீக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மத்திய வங்கி மோசடி சந்தேக நபரான அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் அவர் அழைத்து வரப்படவில்லை. அதேபோல், தேசபந்தும் கைது செய்யப்பட மாட்டார்.

ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை விமர்சித்து, அல் ஜசீரா சம்பவம் போன்றவற்றிலிருந்து விளம்பரம் பெறுவதற்குப் பதிலாக, அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சரியான சட்டங்களை இயற்ற வேண்டும், குற்றவாளிகளைக் குற்றம் சாட்டி தண்டிக்க வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

The post அரசாங்கம் பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றது – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.