high Archives - Oruvan.com

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
வரலாற்றில் முதன் முறையாக உலக சந்தையில் தங்கத்தின் விலை 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.

இதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை 8,000 ரூபா அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 22 கரட் பவுண் தங்கத்தின் விலை 290,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இது கடந்த வௌ்ளிக்கிழமை 283,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே, கடந்த வாரம் 306,000 ரூபாவாக இருந்த 24 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 314,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.

The post வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை appeared first on Oruvan.com.

வரலாற்று உச்சம் தொட்ட கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.

இதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) காலை 22,000 புள்ளிகளை கடந்துள்ளது.

இன்று காலை சுமார் 09.35 அளவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இந்த தனித்துவமான மைல்கல்லை எட்டியது.

இதன்போது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 22,017.56 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post வரலாற்று உச்சம் தொட்ட கொழும்பு பங்குச்சந்தை appeared first on Oruvan.com.

புதிய உச்சத்தை எட்டியது கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதன்படி, இன்றைய வர்த்தக நாள் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 119.83 புள்ளிகள் உயர்ந்து 21,085.09 இல் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தக நாளின் மொத்த புரள்வு 6.5 பில்லியன் ரூபாயாகப் பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

The post புதிய உச்சத்தை எட்டியது கொழும்பு பங்குச் சந்தை appeared first on Oruvan.com.

தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்
தமிழகத்தின் சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திங்கள் கிழமை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை 10,000 ஐ அண்மித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண வைபவங்கள், நவராத்திரி, தீபாவளி எனப் பண்டிகை காலம் என்பதாலும் சர்வதேச வர்த்தக நிலவரத்தாலும் தங்கம் விலை குறையும் சாத்தியம் இல்லையென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது.

அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சென்னையில் இன்று 22 கரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 85 ரூபா உயர்ந்து ஒரு கிராம்9,705 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பவுனுக்கு 680 ரூபா உயர்வடைந்து ஆபரணத் தங்கம் ஒரு பவுன் 77,640 ரூபாவுக்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 02 ரூபா உயர்வடைந்து 136 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன்

கட்டி வெள்ளி ஒரு கிலோ கிராம் 1,36,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் appeared first on Oruvan.com.

தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் இடையே சந்திப்பு
இலங்கைக்கான தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் எட்வின் ஷால்க், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்துள்ளார்.

​​இலங்கை தென்னாப்பிரிக்காவுடன் 1994 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது என்றும், வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட

துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சபாநாயகர் இதன்போது வலியுறுத்தினார்.

தென்னாப்பிரிக்காவின் நல்லிணக்க பொறிமுறையானது அமைதியின் முக்கியத்துவம் குறித்து உலகிற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். மேலும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் தென்னாப்பிரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை உயர்ஸ்தானிகர் விளக்கினார், இவை நல்லிணக்க வழிமுறைகளை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டவை என்றும், அதே நேரத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்ற மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை-தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை மீண்டும் நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார்.

மேலும், தென்னாப்பிரிக்க உயர் ஸ்தானிகருக்கும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கும் இடையிலான சுமுகமான கலந்துரையாடலின் போது, ​​பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவும் பங்கேற்றார்.

The post தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

ஆண்டின் முதல் காலாண்டில் 07 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

இதன் மூலம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 722,276 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவிலிருந்து 39,212 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

மேலும் ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

The post ஆண்டின் முதல் காலாண்டில் 07  இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை appeared first on Oruvan.com.

மஹிந்தவை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

கொழும்பில் உள்ள விஜேராம இல்லத்தில் இன்று புதன்கிழமை காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மரியாதை நிமித்தம் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இதன்போது கலந்து கொண்டார்.

The post மஹிந்தவை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் appeared first on Oruvan.com.

அதிக விலைக்கு அரிசி விற்றால் முறைப்பாடு செய்யலாம்
அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (09) வௌியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச விலையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலின் படி, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

புதிய அரிசி விலை அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அதற்கு மேலதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“எனவே, வர்த்தக சமூகம், உற்பத்தியாளர்கள் ,மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களிடம் நாங்கள் அறிவித்த விலைக்கு ஏற்ப அரிசியை கொள்வனவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முறைகேடாக அல்லது அதிகப்படியாக அரிசி விற்பனை நடந்தால், நுகர்வோர் ஆணையத்தின் 1977 என்ற எண்ணுக்கு அழைத்து முறைப்பாடு செய்யலாம்.

மேலும் நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யலாம்.” எனக் கூறியுள்ளார்.

The post அதிக விலைக்கு அரிசி விற்றால் முறைப்பாடு செய்யலாம் appeared first on Oruvan.com.