health Archives - Oruvan.com

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 03 இருமல் மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தடை
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

ராஜஸ்தானிலும் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வந்த கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையில் கோல்ட்ரிப் இருமல் மருந்தில் டை எதிலீன் கிளைக்கால் என்ற இரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதன்பின்னர் பல்வேறு நிறுவனங்களின் மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

இதன்போது மத்திய பிரதேசத்தில் மேலும் 02 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழப்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 03 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்பான கோல்ட்ரிப், ரெஸ்பிப்ரெஷ் டி.ஆர், ரீலைப் ஆகிய 03 இருமல் மருந்துகள் பாதிக்கப்பட்ட மருந்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்துகள் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துவதாகவும், கடுமையான, உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தக்கூடியவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மருந்துகள் வேறு நாட்டில் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே முறைப்பாடளிக்குமாறு

உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.

முன்னதாக கலப்பட மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா

தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 03 இருமல் மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தடை appeared first on Oruvan.com.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் நாட்டை வந்தடைந்தார்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) இன்று (12) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் 8 ஆவது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சர்வதேச சுகாதார உச்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக பங்கேற்பதற்காக அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இவர் இன்று முற்பகல் 9.40 அளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 660 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதன்போது அவரை சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வரவேற்றார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு நாளை (13) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற உள்ளது.

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்களும் இந்த மாநாட்டிற்காக இலங்கைக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் நாட்டை வந்தடைந்தார் appeared first on Oruvan.com.

நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
கடந்த அரசாங்கத்தில் முறையான விலைமனுக்கோரல் முறைக்கு வெளியே மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதால், நாட்டில் தற்போது சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் இல்லாததன் விளைவாகவே சில மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு விலைமனுக்கோரப்பட்டிருந்தால், மருந்துகள் சரியாக கிடைத்திருக்கும். அடுத்த ஆண்டுக்கு விலைமனுக்கோரப்பட்டுள்ளது.

தற்போதைய மருந்து பற்றாக்குறையை சமாளிக்க, பிராந்திய கொள்முதல்களுக்காக வைத்தியசாலைகளுக்கு 3,500 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளோம்.

மேலும் அவ்வப்போது சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மருந்துகளை நன்கொடையாகப் பெறுகிறோம்.

சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலையை அடைந்துவிட்டோம், எனவே இந்தப் பிரச்சினையை நாம் எதிர்கொள்ள முடியும்.” என கூறியுள்ளார்.

The post நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை
நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தாவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேகநபரை தலா 50 லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணையில் செல்ல அனுமதித்த பிரதான நீதவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

The post சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை appeared first on Oruvan.com.

ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இணக்கம்
ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ்.ஜகாரியன் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு வருகைத்தர விருப்பம் தெரிவித்துள்ள ரஷ்ய சுகாதார அமைச்சரை கௌரவத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்க தாம் தயாராகவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இணக்கம் appeared first on Oruvan.com.

சிக்கன்குன்யா நோய் பரவல் – கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்
நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு சிக்குன்குன்யா கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

45 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், குறிப்பாக நாள்பட்ட மூட்டுவலி, நீரிழிவு மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளதாக பேராசிரியர் அர்ஜுனா டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார கண்காணிப்பு செயன்முறையின் கீழ் 27 நோய்கள் கண்காணிக்கப்படுவதாகவும்,வாராந்திர கண்காணிப்புடன் இந்த போக்கு குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சரியான வழிகாட்டுதலின் கீழ், தேவைப்படுகையில் இரண்டு பெரசிட்டமோல் மாத்திரைகளை மாத்திரம் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

The post சிக்கன்குன்யா நோய் பரவல் – கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் appeared first on Oruvan.com.

நெறிமுறை ஆட்சேர்ப்புகளை பின்பற்ற வேண்டும் – ஜெனீவாவில் சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் பரந்த கொள்கை தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, உள்ளூர் அதிகாரிகள் நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பை வலுப்படுத்த போராடி வருவதால், நாடுகள் அதிக பொறுப்பான மற்றும் நெறிமுறை ஆட்சேர்ப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெறும் உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

பொருளாதார உறுதியற்ற தன்மை, நோய் பரவல்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் இடபெயர்வு போன்ற அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உலகளாவிய ஒத்துழைப்பு, நிலையான சுகாதார நிதி மற்றும் மீள்தன்மை கொண்ட அமைப்புகளின் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த அரை நூற்றாண்டில் நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம், மேலும் அண்மைய பொருளாதார கொந்தளிப்பிலிருந்து பொதுமக்கள் மற்றும் உலகளாவிய நல்லெண்ணத்தின் பலத்தால் நாங்கள் மீண்டு வருகிறோம்

எங்கள் கொள்கை உலகளாவிய ஆரோக்கியத்திற்கான இலக்குகளுடன் ஒத்துப்போகின்றன. இலங்கையின் வெளிநோயாளர் பிரிவு வருகைகள் அதன் மக்கள்தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகும்

இது ஆரம்ப சுகாதார நிறுவனங்களைத் தவிர்ப்பதைத் தடுக்க வேண்டிய அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது நாட்டின் சுகாதார வழங்கலில் ஒரு முக்கிய பிரச்சினை.

சுகாதார நிபுணர்களின் பெருமளவிலான இடபெயர்வு முக்கிய பிரச்சினையாக உள்ளது. 2022 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கிடையில், இலங்கையின் 726 ஆலோசகர்கள், 1,116 வைத்திய அதிகாரிகள் மற்றும் சுமார் 2,800 செவிலியர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் சென்றுள்ளனர்”

இந்த நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பதில் இலங்கை குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளைச் சந்தித்துள்ளது. இலக்கு நாடுகள் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்” என அமைச்சர் மேலும் கூறினார்.

மேலும் பொறுப்பான மற்றும் நெறிமுறை ஆட்சேர்ப்பு நடைமுறைகளையும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

The post நெறிமுறை ஆட்சேர்ப்புகளை பின்பற்ற வேண்டும் – ஜெனீவாவில் சுகாதார அமைச்சர் வலியுறுத்தல் appeared first on Oruvan.com.

சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் – இரத்தினபுரி போதனா வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிப்பு
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்வடைந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக வைத்திசாவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல், இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 1,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் 14,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.

அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இருந்தே பதிவாகியிருந்தனர்.

The post சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் – இரத்தினபுரி போதனா வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிப்பு appeared first on Oruvan.com.

கடந்த வருடம் 180,000 நாய் கடி சம்பவங்கள் பதிவு
கடந்த வருடம் 184,926 பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

நாய் கடிக்கு சிகிச்சையளிப்பதற்காக அரசாங்கம் 850 முதல் 1,000 மில்லியன் ரூபா வரை செலவிட்டுள்ளது.

கடந்த வருடம் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளன” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

The post கடந்த வருடம் 180,000 நாய் கடி சம்பவங்கள் பதிவு appeared first on Oruvan.com.

அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் கொத்தமல்லி இலை
பொதுவாக சமையல் செய்யும்போது அதில் கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்துக்கொண்டால் சுவையுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கொத்தமல்லியில் விட்டமின் சி, கே,ஏ, பொட்டாசியம் ஆகியவை அதிகம்.

பச்சை கொத்தமல்லியானது உணவில் நறுமணத்தை அதிகரிப்பதோடு பித்தத்தை தணிக்கவும் நஞ்சை முறிக்கவும் உதவும்.

மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.

கொத்தமல்லி இலைகளை உட்கொள்வதன் மூலம் நம் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கட்டுக்குள் இருக்கும். இதனால் வேகமாக உடல் எடை குறையும்.

மேலும் கொத்தமல்லி இலைகள் ஒரு படி மேலே சென்று புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொத்தமல்லி இலைகளை சாப்பிட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.

கொத்தமல்லி இலைகளில் காணப்படும் சாறு உடலிலுள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும்.

சளி பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெறவும் இந்த கொத்தமல்லி இலைகள் உதவும்.

கொத்தமல்லி இழல சாறு கலந்து குடித்து வந்தால் வாய்ப் புண் மற்றும் வயிற்றுப் புண் பிரச்சினை குணமாகும்.

The post அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் கொத்தமல்லி இலை appeared first on Oruvan.com.