Harthal Archives - Oruvan.com

P2P போராட்டத்தின் நாயகர்கள் நாமே!! யாழில் சுமந்திரன் தெரிவிப்பு
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்களே நாங்கள் தான் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, கடந்த காலங்களில் சுமந்திரன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதாக கேள்வியெழுப்பிய போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பலருக்கு ஞாபக மறதிகள் இருக்கலாம் அல்லது தமது அரசியலுக்காக ஞாபகம் இருந்தும் மறந்து போனது போல குற்றச்சாட்டுக்களை கூறலாம்.

நாம் கடந்த காலங்களிலும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடாத்தி இருந்தோம்.

வலி . வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி போராட்டங்களை முன்னெடுத்தோம். காணி சுவீகரிப்பு எதிராக சட்ட போராட்டங்களையும் முன்னெடுத்தோம். தற்போதும் அந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான தங்காலை வரையில் பேரணி சென்றோம்.

பேரணிக்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனத்தை காலி முகத்திடலில் வைத்து பொலிஸார் கடத்தி சென்றனர். அதனை போராடி மீட்டே எமது பேரணியை முன்னெடுத்தோம்.

P2P என அழைக்கப்பட்ட பொதுவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தை முன்னின்று பொலிகண்டி வரையில் கொண்டுவந்து சேர்த்தது நாமே.

அன்றைக்கு சுமந்திரனும், சாணக்கியனும் இல்லை என்றால் போராட்டம் பொத்துவிலுடன் முடிக்கப்பட்டு இருக்கும் என அன்றே பலர் ஊடக சந்திப்புக்களில் கூட கூறியிருந்தார்கள்.

நாங்கள் தான் பொலிஸ் தடைகளை உடைத்து பொலிகண்டி வரை பேரெழுச்சியாக பேரணி சென்றடைய முன்நின்றோம். அதற்காக பொலிஸ் விசாரணைகளை கூட எதிர்கொண்டோம்.

இந்த ஹர்த்தால் கூட ஒரு அடையாள போராட்டமே. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் முற்றாக அகற்றப்படும் வரையில் நாம் தொடர் போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்போம் என மேலும் தெரிவித்தார்.

The post P2P போராட்டத்தின் நாயகர்கள் நாமே!! யாழில் சுமந்திரன் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

வடக்கு – கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை
வடக்கு – கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும, ஜனாதிபதி சடடத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (18) வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுளளன. பூட்டப்பட்டுள்ள ஒரு சில கடைகளை சிலர் அச்சுறுத்தி திறக்க வைப்பதையும் காணலாம்.

சுயமாகவே மக்கள் கடைகளைப பூட்டி தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்ற போது அதனை மாற்றியமைக்கும் முகமாக சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் கடைகள் அனைத்தும் வவுனியா பசார் வீதியில் மூடப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் ஆதரவு கிடைத்துள்ளது.

வவுனியா போன்று யாழ்ப்பாண வார்த்தக சங்கமும் செயற்பட்டதால் நகரில் பல கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

எமது கோரிக்கையை ஏற்று வியாபார நிலையங்களை மூடி ஆதரவு தந்தவர்களுக்கு நன்றிகள். பலத்த அழுத்தத்திற்கு மத்தியிலும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

போராட்டங்கள் பல விதம். அந்தந்த காலத்திற்கு தேவையான போராட்டத்தை நாம் தெரிவு செய்து நடத்துவோம். உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பருந்தித்துறை நகரசபைத் தலைவர், பருத்தித்துறை நகரில் இருக்கும் இராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும் எனவும் அதற்கு எதிரான போராட்டம் 29 ஆம் திகதி நடத்துவதாக அறிவித்துள்ளார்.

எங்களது பூரண ஆதரவை அதற்கு நாம் வழங்குவோம். மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்பது தான் கோரிக்கையாகவுள்ளது.

அனைத்துக் கட்சிகளும் இந்த விடயத்தில் இணைந்து செயற்படுவதாக தான் நான் அறிகிறேன். ஒரு சில அரசியல் கட்சி கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மலையக தமிழ் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

தமிழ் மக்களின் பகுதியில் இராணுவ முகாம் நிறுவப்பட்டு இருப்பதனால் தான் முத்தையன்கட்டு சம்பவம் இடம்பெற்றது.

கிளிநொச்சி நகரத்தில் உள்ள இராணுத்தை அகற்ற அந்தப் பகுதியிலும் பல போராட்டங்கள நடத்துவோம். மற்றவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுப்போம்.

வர்த்தக சங்க தலைவர் கேட்கும் போராட்ட முறைகளுக்கு பதில சொல்ல வேண்டிய அவசியமில்லை.

மக்களுடைய அரசியல் தலைவர்கள் நாங்கள் தான். வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி தான் எல்லா மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே நாம் அதற்கேற்ப செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.

The post வடக்கு – கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை appeared first on Oruvan.com.

ஹர்த்தால் வெற்றியே – சுமந்திரன் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பில் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது.

அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தது. அவர்கள் ஆதரவு வழங்காதது மன வருத்தமே.

வடக்கு கிழக்கு முழுவதும் மக்களை ஒன்றிணைந்து போராட்டம் நடாத்த கூடிய கட்சியாக தமிழரசு கட்சியே உள்ளது. அந்த வகையில் நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம். அது வெற்றியை தந்துள்ளது.

எமது ஹர்த்தால் அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி, அமைச்சர் பிமல் உள்ளிட்டவர்கள் எம்மை தொடர்பு கொண்டு பேசி இருந்தனர். முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார்கள். இதுவே வெற்றி.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் அவர்கள் மக்களுடன் மக்களாக இருக்க முடியாது.

தெற்கில் இராணுவ முகாம்கள் உள்ளன. அங்கு அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் முடங்கி காணப்படுவார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் அந்த நிலைமை இல்லை. அவர்கள் மக்களோடு மக்களாக, மக்களின் இயல்வு வாழ்வில் தலையீடு செய்கின்றனர்.

பாடசாலைகள், தனியார் காணிகள், ஏன் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றுக்கு சொந்தமான காணியை கூட கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ளனர். அதனால் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும்.

இந்த ஹர்த்தால் ஒரு அடையாள போராட்டமே. இனிவரும் காலங்களில் இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்.

வடக்கு – கிழக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் தமிழரசு கட்சியின் கட்டுப்பாட்டிலையே உள்ளன.

அதனால், அந்த அந்த பிரதேசங்களில் மக்களை ஒன்றிணைந்து, அந்த பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம்.

பருத்தித்துறை நீதிமன்றுக்கு சொந்தமான காணியில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற கோரி, பருத்தித்துறை நகர சபை நகர பிதாவின் அழைப்பில் போராட்டம் நடைபெறவுள்ளது.

அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றாலும் அந்த போராட்டத்திற்கு தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும்.

வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் சி.வி.கே. சிவஞானம் கருத்து தெரிவிக்கையில்,

முத்துஐயன்கட்டு இளைஞன் கொலையானதும், இளைஞன் தொடர்பாகவும் சில விமர்சனங்கள் உள்ளன அவை எமக்கும் தெரியும். ஆனால் இதனை இராணுவ மயமாக்கலுக்கு எதிரான சுட்டியாக கொண்டே நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம்.

இங்கு நோக்கம் இராணுவ மயமாக்கலை எதிர்ப்பது. எனவே நோக்கம் சரியாக இருப்பின் ஹர்த்தலுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அதற்கு யார் அழைப்பு விடுத்தார்கள். யார் செய்கிறார்கள் என ஆராயாமல் ஆதரவு வழங்க வேண்டும்.

இங்கே ஒற்றுமை ஒற்றுமை என கூறி திரிபவர்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நாம் நோக்கம் சரியாக இருந்தால் அதற்காக ஆதரவு கொடுப்பவர்கள்.

அவ்வாறு ஆதரவு கொடுத்து சென்றாலும் எங்களை துரத்துவதில் குறியாகவே உள்ளனர். அது தெரிந்தும் நோக்கம் சரியாக உள்ள போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

The post ஹர்த்தால் வெற்றியே – சுமந்திரன் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

கதவடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி – தமிழரசு கட்சி அறிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK)அழைப்பு விடுத்திருந்த கதவடைப்பு போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அளித்த உறுதிமொழிகளைத் தொடர்ந்து, இன்று (18) நண்பகலுடன் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பான விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து மதியத்துடன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் செயல்களை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் கண்டித்துள்ளார்.

கடை உரிமையாளர்களை தங்கள் வணிக நிறுவனங்களை திறந்து வைத்திருக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் சட்ட விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய அச்சுறுத்தல்கள் மக்களின் ஜனநாயக உரிமையான போராட்டத்தை மீறுவதாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் 32 வயதுடைய ஒருவரின் சமீபத்திய மரணத்திற்கு நீதி கோரியும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடையடைப்பு போராட்டம் ஒன்றுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழரசுக் கட்சி உட்பட பல அரசியல் குழுக்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் வழமைப் போல் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

சில வர்த்தக சங்கங்கள் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், பல வர்த்தக சங்கங்கள் அதை ஆதரிக்க மறுப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post கதவடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி – தமிழரசு கட்சி அறிவிப்பு appeared first on Oruvan.com.

மன்னாரில் கடையடைப்பு – மக்களின் இயல்பு நிலை வழமைபோல்
வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றைய தினம் (18) மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார், பஜார் பகுதியில் சில உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை தவிர பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றைய தினம் (18) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், வர்த்தக நிலையங்கள் மாத்திரம் மூடப்பட்டுள்ள போதும் மக்களின் இயல்பு நிலை வழமை போல் காணப்படுகிறது.

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக இன்றைய தினம்(18) வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.

இதையடுத்து கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றைய தினம் (17) ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

எவ்வாறாயினும் மன்னாரில் பஜார் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்று வருவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை எவ்வித பாதிப்பும் இன்றி வழமை போல் காணப்படுகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

The post மன்னாரில் கடையடைப்பு – மக்களின் இயல்பு நிலை வழமைபோல் appeared first on Oruvan.com.

வவுனியாவில் தோல்வியடைந்த ஹர்த்தால் – பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்புநிலையில் உள்ளதுடன் சில செயற்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது.

வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரச்சன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை ஹர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றையதினம் காலை முதல் வவுனியாவில் பொதுமக்கள் இயல்பு வாழ்கையில் ஈடுபட்டுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.

நகரத்தில் அநேக வர்த்தகநிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன், சில பூட்டப்பட்டும் இருந்தன.

பாடசாலைகளில் கல்விசெயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றுவருவதுடன் மாணவர்களின் வரவு குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வங்கிகள் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமைபோல உள்ளது.

இதேவேளை ஹர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதுடன், அவர்களது மொத்த வியாபார சந்தைக்கடைத்தொகுதி முழுமையாக மூடப்பட்டிருந்தது.

இதேவேளை பழையபேருந்து நிலையம் மற்றும் பசார் வீதியில் உள்ள இஸ்லாமிய வியாபாரநிலையங்களில் குறிபிட்ட அளவிலான வர்த்தக நிலையங்கள் மட்டும் திறந்திருந்த மையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதேவேளை புறநகரப்பகுதிகளான குருமன்காடு, செட்டிகுளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளில் அனேகமான வர்த்தகநிலையங்கள் திறந்திருந்ததுடன், சிலவர்த்தக நிலையங்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து பூட்டி இருந்தமையினை அவதானிக்க முடிந்தது.

போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இயங்கியிருந்தது.

The post வவுனியாவில் தோல்வியடைந்த ஹர்த்தால் – பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு appeared first on Oruvan.com.

தமிழ் இளைஞரின் மரணத்திற்கு எதிரான கடையடைப்பு போராட்டம் பயனற்றது – பொது பாதுகாப்பு அமைச்சர்
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டம் தேவையற்ற ஒன்று என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முல்லைத்தீவு பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு கிழக்கில் கடையடைப்பு போராட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடையடைப்பு போராட்டத்திற்கு எந்த காரணமும் இல்லை. “கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், அதை நடத்த எந்த காரணமும் இல்லை.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற உத்தரவுகளின்படி அடுத்த நடவடிக்கைளை நாங்கள் எடுப்போம்.

இந்நிலையில், கடையடைப்பு போராட்டம் நடத்துவது பயனற்ற செயல்.”

மேலும், இதேபோன்ற சம்பவங்கள் மற்ற மாகாணங்களிலும் நடப்பதாகவும், ஆனால் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இவ்வாறு கடையடைப்பு போராட்டங்களை நடத்துவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“இந்த சம்பவங்களை நாம் இனம் அல்லது மதத்தின் பார்வையில் பார்க்கக்கூடாது. ஒரு குற்றம் நடக்கும்போது, பொறுப்பான எவருக்கும் எதிராக, அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இதை நாங்கள் நடைமுறையில் நிரூபித்துள்ளோம்.” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முல்லைத்தீவு – முத்து ஐயன்கட்டு பகுதியில் இராணுவத்தின் தாக்குதலில் 32 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் வடக்கு கிழக்கு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இராணுவ முகாமுக்கு அருகில் அமைந்துள்ள முத்து ஐயன்கட்டு குளத்தில் குறித்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post தமிழ் இளைஞரின் மரணத்திற்கு எதிரான கடையடைப்பு போராட்டம் பயனற்றது – பொது பாதுகாப்பு அமைச்சர் appeared first on Oruvan.com.