Harini Archives - Oruvan.com

பிலிப்பைன்ஸை சென்றடைந்த பிரதமர்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அழைப்புக்கமைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அவர் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த நிகழ்வுகளில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிலாவில் உள்ள நினோய் அகினோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை, பிலிப்பைன்ஸுக்கான இலங்கை தூதுவர் டாக்டர் சானக தல்பஹேவா (Chanaka Talpahewa), பிலிப்பைன்ஸ் அரச அதிகாரிகள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

இந்த விஜயத்தின் போது, ​​மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் பிரதமர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

மகளிர் தின கொண்டாட்டத்துடன் இணைந்து, பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடன் பிரதமர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

The post பிலிப்பைன்ஸை சென்றடைந்த பிரதமர் appeared first on Oruvan.com.

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணமானார்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார்

பிரதமர் இன்று (16) அதிகாலை 12.40க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-191 மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி வரை பிரதமர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடனும் கலந்துரையாட உள்ளார்.

The post பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணமானார் appeared first on Oruvan.com.

ஹரிணி அமரசூரிய – சீன மக்கள் குடியரசின் பிரதமர் இடையே சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சீன மக்கள் குடியரசின் அரச பேரவையின் பிரதமர் லி கியாங் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், இலங்கையின்

கடன் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தித் துறைகளுக்கு உதவுதல் போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வித் துறையில் ஸ்மார்ட் வகுப்பறைகள், புலமைப்பரிசில்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான விசேட பட்டப் படிப்பு

கற்கைகள் மற்றும் பாடசாலை சீருடை துணிகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் விவசாயம், சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் இதன் போது கலந்துரையாடல்

இடம்பெற்றுள்ளது.

The post ஹரிணி அமரசூரிய – சீன மக்கள் குடியரசின் பிரதமர் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு – பிரதமர் கவலை
பாடசாலை குழந்தைகள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிலையில், பாடசாலை குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர அனுமதிக்கப்படக்கூடாது எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அதிபர்களுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2,231 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

The post சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு – பிரதமர் கவலை appeared first on Oruvan.com.

22 பேரை பலியெடுத்த கொத்மலை பேருந்து விபத்து – காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்
நுவரெலியா – கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை 11.05.2025.ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலன் விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார்.

பிரதமருடன் அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார்.

சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர்,

இது போன்ற வாகன விபத்துக்களினால் ஒவ்வொரு வருடமும் உயிர்ழப்புகள் ஏற்படுகின்றமை பாரிய பிரச்சினையாக மாரியுள்ளது என்பது எமக்கு தெரியும். இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

பின் தங்கிய பிரதேசமாக இருந்தாலும் வைத்திய சேவையினை வழங்குகின்றமை தொடர்பில் அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும். இதேவேளை மீட்பு பிரிவினருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.

முடியுமான அளவு மனிதாபிமானத்தோடு செயற்பட்டு உதவிகளை வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் நன்றி. விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிறைவேற்ற கூடிய அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தார்

The post 22 பேரை பலியெடுத்த கொத்மலை பேருந்து விபத்து – காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் appeared first on Oruvan.com.

பிரதமர் ஹரிணி தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் – எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு
இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பேரணிக்காக ஒரு கோவில் வளாகத்தைப் பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்துமாறு தேசிய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரன், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

“யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கோவில் வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பேரணி நடத்துவது குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டபோது, ​​தேர்தல் ஆணைய அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்றனர்.

ஆனால் பிரதமரின் பாதுகாப்புப் பணியாளர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை, அவர்கள் திரும்பிச் சென்றனர். நாட்டில் தேர்தல் நடவடிக்கைகளை நிர்வகிக்கவும் மேற்பார்வையிடவும் தேசிய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

தேசிய தேர்தல் ஆணையத்திற்கு முதுகெலும்பு இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரங்களுடன் இருப்பதால், உடனடியாக இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று சுமந்திரன் சவால் விடுத்தார்.

“சட்டங்களின்படி, தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ் திணைக்களம் தேர்தல் ஆணையத்தின் கீழ் வருகிறது. சட்டமும் அரசியலமைப்பும் இதைக் கூறுகின்றன.

தேர்தல் ஆணையம் ஒரு சுயாதீன ஆணையமாக இருந்தாலும், இந்த அதிகாரங்களில் எதையும் பயன்படுத்துவதில்லை. எனவே, இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெறுகின்றன,” என்று அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்திற்கு இந்தப் பிரச்சினைகளை விசாரிக்கவோ அல்லது தீர்க்கவோ முதுகெலும்பு இல்லை என்று கூறிய சுமந்திரன், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதாகக் கூறும் அரசாங்கம், ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் இவற்றை வெளிப்படையாக மீறுவதாகவும் கூறியுள்ளார்.

The post பிரதமர் ஹரிணி தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் – எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது – பிரதமர்
முன்னைய அரசாங்கங்களில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்குள் சென்றன. அதனால்தான் கிராமங்கள் முறையாக அபிவிருத்தியடையவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட நட்டாங்கண்டல் பொதுச் சந்தை வளாகத்திற்கு அருகிலும், மல்லாவி பகுதியில் உள்ள துணுக்காய் பிரதேச சபைக்கு சொந்தமான பொது நூலக வளாகத்திலும் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாகவே எமது நாட்டில் 76 ஆண்டுகளாக இருந்த பாரம்பரிய அரசியல் முறைமையை மாற்றியமைத்து 2024 ஆம் ஆண்டில் எங்களுக்கு ஒரு வரலாற்று வெற்றியை அளித்தீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அந்த நம்பிக்கையை பாதுகாப்போம் .

நான் இங்கு வந்தபோது, உங்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதையும், சத்திர சிகிச்சை கூடம் இல்லை என்பதையும், சத்திர சிகிச்சை கூடம் உள்ள வைத்தியசாலைக்கு சுமார் 50 கிலோ மீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதையும் அறிந்தேன்.

அவ்வாறே, பிரதேச பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் உயர்தரத்தில் கற்பிக்க ஆசிரியர்கள் இன்மையால், பிள்ளைகள் 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு பாடசாலையில் விஞ்ஞான துறையை கற்பதற்கு 50 கிலோ மீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றும் கேள்விப்பட்டேன்.

பொதுப் போக்குவரத்து, பிள்ளைகளுக்கான கல்வி வசதிகள், மின்சாரம் போன்ற சரியான வசதிகள் இன்மையால் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த சூழ்நிலைகளை மாற்ற விரும்புவதால் தான் நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தீர்கள்.

முன்னைய அரசியல் முறைமையின் கீழ், கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி கிராமத்தை வந்தடையும்போது, 75% தனிநபர்களின் சட்டைப் பைகளுக்குச் சென்றது, மீதமுள்ளவையே கிராமத்திற்கு வந்துசேர்ந்தன. அந்த முறைமையின் காரணமாக தான்,  இந்தப் பகுதிகள் இதுவரை அபிவிருத்தியடையவில்லை.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால், மோசடி அல்லது ஊழல் இல்லாமல் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அந்தப் பணத்தை முறையாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு குழுவை பிரதேச தலைமைத்துவத்திற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், தேசிய மக்கள் சக்தியில் உள்ள தனது குழு அந்த நோக்கத்திற்கு மிகவும் பொருத்தமான குழுவென நம்பிக்கையுடன் கூற முடியும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

The post கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது – பிரதமர் appeared first on Oruvan.com.

கிரிப்டோ நாணயங்கள் குறித்து போலி விளம்பரங்கள் – பொது மக்களுக்கு பிரமர் அலுவலம் அவசர எச்சரிக்கை
முகப்புத்தகம் (Facebook), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி ‘கிரிப்டோ’ நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் இந்த மோசடி விளம்பரங்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கையின் பிற முக்கிய பிரமுகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த மோசடி விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்களின் முக்கிய நோக்கம், பொதுமக்களை தவறாக வழிநடத்துவதும், பிரபலங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் நல்லெண்ணத்தை சேதப்படுத்துவதன் மூலம் அவர்கள் மீதான நம்பிக்கையை அழிப்பதும் ஆகும்.

லிதுவேனியாவிலிருந்து இயங்கும் இந்த மோசடி கணக்குகளால் மேற்கொள்ளப்படும் மோசடி விளம்பரங்கள், இந்த நாட்டில் உள்ள பேஸ்புக் பயனர்களை தீவிரமாக குறிவைத்து வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே, அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்களால் அங்கீகரிக்கப்பட்டதாக பொய்யாகக் கூறும் கிரிப்டோ நாணய முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒன்லைன் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post கிரிப்டோ நாணயங்கள் குறித்து போலி விளம்பரங்கள் – பொது மக்களுக்கு பிரமர் அலுவலம் அவசர எச்சரிக்கை appeared first on Oruvan.com.

‘தேசிய மகளிர் வாரம்’ அறிவிக்கப்பட்டது
எதிர்வரும் மார்ச் எட்டாம் திகதி வரும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ‘தேசிய மகளிர் வாரம்’ ஒன்றை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு மகளிர் தினத்திற்கான தேசிய கருப்பொருள் ‘வலிமையான அவள்: நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பாதை’ ஆகும்.

மார்ச் 2 முதல் மார்ச் 8 வரை, பெண்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை ஆதரிப்பதற்காக, அவர்களின் சுகாதாரம், விழிப்புணர்வு, பாதுகாப்பு, அதிகாரமளித்தல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்ட நாடு தழுவிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கும் அவர்களின் தயாரிப்புகளுக்கு சந்தையை வழங்குவதற்கும், ‘லிய சக்தி’ மகளிர் கண்காட்சி மார்ச் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெறும்.

நிகழ்வின் வெற்றியை உறுதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மகளிர் தின கொண்டாட்டம், பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள ‘சுஹுருபாய’ கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ‘தேசிய மகளிர் வாரம்’ அறிவிக்கப்பட்டது appeared first on Oruvan.com.

சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை – வெட்டுப்புள்ளிகளை வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை
வினாத்தாள்களை தயாரிப்பதற்கு வளவாளர் தொகுதியொன்றையும் வினாத்தாள் வங்கியொன்றையும் நிறுவுவதற்கான பரிந்துரைகள் கிடைத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் நேற்று வியாழக்கிழமை இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டிருந்த மூன்று வினாக்களை ஒத்த மூன்று வினாக்கள், பரீட்சைக்கு முந்திய தினம் குருநாகல் பிரதேசத்தில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரினால் தனது மேலதிக வகுப்பு சமூக ஊடகக் குழுவில் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபாரிசு செய்வதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்த மூன்று தீர்வு நடவடிக்கைகளில் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம், சம்பவத்துடன் தொடர்புடைய மனுவின் பதின்மூன்றாவது பிரதிவாதிக்கு, மூன்று மில்லியன் ரூபாவும் ஆறாவது மற்றும் ஒன்பதாவது பிரதிவாதிகள் என குறிப்பிடப்பட்டவர்களால் 2 மில்லியன் ரூபாவும் அரசாங்கக் கட்டணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ள விடயங்களின் அடிப்படையில், வினாத்தாள் தயாரிப்புக் குழுவின் உறுப்பினர்கள் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசியக் கிளையினூடாக மட்டுமே உரிய வினாக்களைத் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளுதல், அந்தச் செயற்பாடுகள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கிளையிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்படாமல் இருப்பதை உறுதி செய்தல், இரகசியக் கிளைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் கடுமையாகப் பரிசோதித்தல், வினா தயாரிப்பு குழக்களுக்கு புதிய உறுப்பினர்களை ஆட்சேர்ப்புச் செய்தல் மற்றும் பயிற்சியளித்தல் மூலம் ஒரு வளவாளர் தொகுதியையும் வினாத்தாள் வங்கியொன்றையும் நிறுவுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளில் ஒருவரான தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பணிப்பாளரை வினாத்தாள் தயாரிக்கும் குழுவிலிருந்து உடனடியாக நீக்கி, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு விசாரணை முடிவை தெரிவிப்பதற்கும், சம்பளம் இன்றி பணியை விட்டு இடைநிறுத்துவதற்கும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் தெரியவந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஆசிரியரும் அவரது மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் ஒழுக்காற்று அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டு, அந்த ஆசிரியரின் முழு சேவைக் காலத்திற்கும் நடைமுறைக்கு வரும் வகையில் பரீட்சைக் கடமைக்குத் தடை விதிக்கவும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அவரது ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிரிஉல்ல வலய அலுவலகத்தினால் இது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தி, ஏற்கனவே அவரை பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், புலமைப்பரிசில் வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கு நிகரான வினாக்களை தனது வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்ட குருநாகல் மலியதேவ மாதிரிப் பாடசாலையின் ஆசிரியர் மற்றும் தனியார் வகுப்புகளை நடத்தும் ஒருவருக்கு ஐந்து வருட பரீட்சை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக திணைக்களத்தின் இரகசியக் கிளைகளில் தற்போது பின்பற்றப்படும் பாதுகாப்புச் செயற்பாடுகளை மேலும் பலப்படுத்துதல். இரகசிய கிளைகளை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க கூடிய வகையில் உள்ளக பாதுகாப்பு கேமரா முறைமைகளை இற்றைப்டுத்துதல், வினாத் தாள்களை தயாரிக்கும் குழுக்கள் மூலம் வினாத்தாள்களைத் தயாரிப்பதற்குப் பதிலாக, பகுதியளவு தன்னியக்க முறைமையை உருவாக்குவதன் மூலம் மனிதத் தலையீட்டைக் குறைக்கக்கூடிய அளவுக்கு அந்த முறைமைகளை விருத்திசெய்தலும் மோசடிகளைத் தடுப்பதற்கும், பரீட்சை கண்காணிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், கண்காணிப்பு அளவை அதிகரிப்பதற்கும், பரீட்சைக் கூடங்களில் கையடக்கத் தொலைபேசியை கண்காணிப்பாளருக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கு மட்டுப்படுத்தல், பரீட்சை நிலையங்களுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள வழக்கமான ஊழியர்களுக்கு மேலதிகமாக, வெளி மேற்பார்வையாளர்களை முழுநேரமாக பரீட்சை நிலையங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் தரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால், பரீட்சைக்கு தோற்றிய எந்த ஒரு பரீட்சார்த்திக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பரீட்சைக்கு முன் கலந்துரையாடப்பட்ட மூன்று கேள்விகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகள் வழங்கி வினாத்தாள்களை மதிப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ததால் பரீட்சை மதிப்பீடு பணி இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், 2024.12.31 ஆந் திகதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அறிவித்த பின்னர், வினாத்தாள் மதிப்பீட்டு பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது என்றும் அதற்கான வெட்டுப்புள்ளிகளை மிக விரைவில் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

The post சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை – வெட்டுப்புள்ளிகளை வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை appeared first on Oruvan.com.