Harin Fernando Archives - Oruvan.com

பேரிடரால் உயிரிழந்த கால்நடைகள்!! கோழி இறைச்சி குறித்து ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை
அண்மையில் ஏற்பட்ட பேரிடரின் போது உயிரிழந்த கால்நடைகளின் இறைச்சி மற்றும் முட்டைகள் சந்தைக்கு வந்தால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், பொது சுகாதார நெருக்கடியைத் தடுக்க அரசாங்கம் திட்டம் ஒன்றை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“பேரழிவின் காரணமாக சுமார் 400,000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக,” பெர்னாண்டோ செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நோய் பரவல்கள் குறித்து கவலைகளை எழுப்பிய அவர், அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியான தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, நன்கொடைகளைக் கையாள்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், பெறப்பட்ட நிதி மற்றும் சேத மதிப்பீடுகள் குறித்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பேரிடரின் தாக்கம் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை வெளியிடுமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

The post பேரிடரால் உயிரிழந்த கால்நடைகள்!! கோழி இறைச்சி குறித்து ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை appeared first on Oruvan.com.

மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியில் வெற்றியை தொடர்ந்து மேலும் மூன்று இடங்களில் பேரணிகளை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.

அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த பேரணி இரத்தினபுரி, அதைத் தொடர்ந்து மாத்தறை மற்றும் குருநாகல் போன்ற பகுதிகளில் நடைபெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ச ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தப் பேரணி மிகப்பெரிய வெற்றியாகக் கருதுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (22) ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி தெரிவித்திருந்தார்.

“நாங்கள் ஒன்றாக வேலை செய்யப் போகிறோம் என்பதை நேற்று காட்டினோம். யாரும் பின்தங்கப் போவதில்லை. இந்த நாட்டில் மீண்டும் பட்டத்து இளவரசர்கள் பிறக்க மாட்டார்கள்,” என்று பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் ஒன்றிணைவதற்கு வழிவகுத்தால், தனது அரசியல் வாழ்க்கையை தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காட்டப்பட்ட ஒன்றுபட்ட முயற்சி எனவும், கட்சியின் தலைமையை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கும் முயற்சி அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்ட சக்தியாக இருப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதற்கான முயற்சி என்று ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றுபடுவது கட்டாயமாகும். நான் பிரச்சனையாக இருந்தால், நான் ஒதுங்கிக் கொள்கிறேன்” என்று ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

The post மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம் appeared first on Oruvan.com.

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது? – அமைச்சர் ஹரின் விளக்கம்
அநியாயம் நடக்கும் போது எதையும் கண்டும் காணாதவர் போலவும், கேட்காதவர் போலவும் இருக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த 29ஆம் திகதி நடந்த வருட இறுதி வருடாந்த விருந்தில் கலந்துகொண்ட போது என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தாம் வழமை போன்று பாடசாலை நண்பர்களைச் சந்திக்கச் செல்வதாகவும், விருந்துக்கான அழைப்பிதழ்கள் தமக்குக் கிடைத்ததாகவும் அதனால் அந்த இடத்திற்குச் சென்றதாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் சகாக்களுடன் சந்தோசமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, ​​யாரோ ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து சென்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த நபரிடம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் அதனை செய்ய விடாமல் சக ஊழியர்கள் தடுத்ததாகவும் அங்கு சொத்துக்களுக்கு தாம் சேதம் விளைவிக்கவில்லை எனவும் அவர் சம்பவம் தொடர்பில் தெரிவித்தார்.

முன்னதாக, முன்னாள் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள CH & FC கிளப்பில் வன்முறையாக நடந்து கொள்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தார்.

வாக்குவாதத்தின் போது பதிவு செய்யப்பட்ட காணொளியில், கச்சேரியில் ஒருவரை எதிர்கொள்ள பெர்னாண்டோ முயற்சிக்கும் போது அவர் தடுத்து நிறுத்தப்படுவதைக் காட்டுகிறது.

மேலும், வாக்குவாதத்தின் போது பெர்னாண்டோ தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் கேட்கிறது. பின்னர் பெர்னாண்டோ அழைத்துச் செல்லப்படும்போது பலர் அவரை கேலி செய்வது கேட்கப்படுகிறது.

அதனையடுத்து, முன்னாள் அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், அவரை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது? – அமைச்சர் ஹரின் விளக்கம் appeared first on Oruvan.com.