hamas Archives - Oruvan.com

பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுப்படுத்தும் ஹமாஸ் – உளவுத்துறை தகவல்
ஹமாஸ் அமைப்பு பிரித்தானியா, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமது செல்வாக்கை பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ஐஆர்ஜிசி எனப்படும் ஈரானின் நிழல் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் லெபனான் பினாமி படைகளான ஹெஸ்பொல்லா ஆகியவை ஹமாஸூக்கு உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை அறிக்கை ஒன்றை கோடிட்டு பிரித்தானியா ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய இராஜதந்திர பணிகள், இஸ்ரேலிய தொடர்புகளைக் கொண்ட வணிகங்கள் அல்லது போரால் பாதிக்கப்பட்ட யூத அரசுடன் தொடர்புடைய மத தளங்களை குறிவைத்து இந்த விரிவாக்க பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து வைப்பதுடன், இந்தக் குழு ட்ரோன் போர் முறையிலும் தீவிரமாக விரிவடையத் தொடங்கியுள்ளது.

இந்தக் குழு லெபனான் மற்றும் ஈரானில் இருந்து ஆதரவைப் பெறுவதாகவும், கிழக்கு ஐரோப்பிய குற்ற வலையமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டு, கொடிய ஆயுதங்களை வாங்க உதவுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அதன் சொந்த தளமான காசாவில் அழிக்கப்பட்டிருந்தாலும், 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி முன்னெடுக்கப்பட்டதெற்கு இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஐரோப்பிய விரிவாக்கத்தைத் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

ஹமாஸ் பல “ஆண்டுகளாக” ஐரோப்பா முழுவதும் முக்கியமாக இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள், ஹமாஸ் இயக்கும் சர்வதேச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் எதிர்வரும் காலங்களில் அதிகமாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

The post பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுப்படுத்தும் ஹமாஸ் – உளவுத்துறை தகவல் appeared first on Oruvan.com.

ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்
காசா பகுதியில் பணயக்கைதிகளின் நிலைமை குறித்து ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றில், இந்த போர் முடிவுக்கு வருவதை அனைவரும் விரும்புவதாக டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இஸ்ரேல் தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, தனது நிபந்தனைகளை ஹமாஸும் ஏற்க வேண்டும் என்றும், ஏற்றுக்கொள்ளாததன் விளைவுகள் குறித்து ஹமாஸுக்கு முன்பே எச்சரித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த எச்சரிக்கை தனது கடைசி எச்சரிக்கை என்றும், எதிர்காலத்தில் இனி எந்த எச்சரிக்கைகளையும் வெளியிட மாட்டேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த திடீர் தாக்குதலில் நூற்றுக்கணக்காணவர்கள் கொல்லப்பட்டனர்.

இதனைதை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் பதில் தாக்குதலை தொடுத்தது. சுமார் 21 மாதங்களாக நீடித்துள்ள போரில் காசா பகுதியில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகளை இலக்காக வைத்தே தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மக்கள் அடர்த்தியான பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் செயல்படுகின்றனர் எனவும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப் appeared first on Oruvan.com.

காசா நகரைக் கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
காசா நகரத்தை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் எடுக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை இரவு வரை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் நெதன்யாகு காசாவை முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பதற்கான தனது விருப்பத்தை தெளிவுபடுத்திய பின்னர் அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த அனுமதி இஸ்ரேலின் உயர்மட்ட ஜெனரலின் தயக்கங்களை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸால் பிடிக்கப்பட்ட மீதமுள்ள 20 அல்லது அதற்கு மேற்பட்ட உயிருள்ள பணயக்கைதிகளை ஆபத்தில் ஆழ்த்தும் என்றும், சுமார் இரண்டு ஆண்டுகால பிராந்தியப் போர்களுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவத்தை மேலும் கஷ்டப்படுத்தும் என்றும் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இல்லாத காசா பிரதேசத்தை முழுவதுமாகவோ அல்லது பகுதிகளையோ கைப்பற்றுவதற்கான திட்டங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சரவை விவாதிக்கும் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் முன்னதாக கூறியிருந்தார்.

முறையான முடிவு வரும் வரை பெயர் வெளியிட விரும்பாத நிலையில் பேசிய அந்த அதிகாரி, ஹமாஸ் மீது அழுத்தத்தை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்தும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

கூட்டத்திற்கு முன்னதாக ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேல் “முழு காசாவையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளுமா” என்று கேட்டதற்கு,”எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஹமாஸை அங்கிருந்து அகற்றி, மக்கள் காசாவிலிருந்து விடுபட உதவும் வகையில் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று நெதன்யாகு கூறினார்: ”

இதேவேளை, இஸ்ரேல் ஏற்கனவே காசாவின் 75% பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது மற்றும் அதன் எல்லைகளை பெருமளவில் மூடிவிட்டுள்ளது.

முழு கட்டுப்பாட்டையும் எடுக்க, மீதமுள்ள பகுதிகளில் தரைவழி நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ‘பணயக்கைதிகளையும் வீரர்களையும் ஆபத்தில் ஆழ்த்தும்’

காசாவை முழுமையாகக் கைப்பற்றும் திட்டம், ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளின் குடும்பங்கள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) உயர் அதிகாரி உட்பட பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது.

The post காசா நகரைக் கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் appeared first on Oruvan.com.

ஆயுதங்களை கைவிடப்போவதில்லை – ஹமாஸ் அறிவிப்பு
சுதந்திர பாலஸ்தீன தேசமொன்று உருவாகும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

2007 முதல் காசாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவேண்டும் என வேண்டுகோள்கள் எழுந்துள்ளன.

இதற்கு பதிலளித்துள்ள ஹமாஸ் ஜெரூசலேமை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படா விட்டால் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளது.

இதேவேளை ஹமாஸ் தன்னிடமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதியை காண்பிக்கும் வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளது.

எவியதார் டேவிட் என்ற பணயக்கைதியின் வீடியோவையே ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது,மிகவும் மெலிந்த நிலையில் காணப்படும் அவர் ஒரு குழியை வெட்டுகின்றார் , இந்த குழி எனக்கானது என அவர் தெரிவிக்கின்றார்.

பணயக்கைதிகளும் பட்டினிகிடக்கின்றார்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

The post ஆயுதங்களை கைவிடப்போவதில்லை – ஹமாஸ் அறிவிப்பு appeared first on Oruvan.com.

அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் இணக்கம்
இஸ்ரேலின் பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஒப்பந்தத்தை செயற்படுத்துவது குறித்து  பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தினால் முன்மொழியப்பட்ட காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காசாவில் ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு, மத்தியஸ்தர்களின் அண்மைய திட்டம் தொடர்பாக பலஸ்தீன பிரிவுகளுடன் தமது இயக்கம் கலந்துரையாடல்களை

நிறைவுசெய்துள்ளதாக ஹமாஸ் தனது உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே சுமார் 21 மாதங்களாக இடம்பெற்று வரும் மோதலில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கான இறுதி முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார்.

இந்த ஒப்பந்ததிற்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்ததாக கூறிய ட்ரம்ப் ஹமாஸும் இணங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் இணக்கம் appeared first on Oruvan.com.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதென நம்புவதாக அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

காங்கோ-ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நெருங்கிவிட்டதை தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் கருத்து தெரிவித்த ட்ரம்ப்,

“இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன்.

தொடர்புடைய சிலரிடம் நான் கலந்துரையாடியுள்ளேன்.அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்றார்.

எவ்வாறாயினும் போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் குறித்து ட்ரம்ப் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேல் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் பணயக்கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.

The post இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப் appeared first on Oruvan.com.

காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 78 பலஸ்தீனியர்கள் பலி
காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் இன்று ஞாயிற்றுக்கிழமை 78 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் காசாவின் அல்-மவாசியின் பாதுகாப்பான மண்டலத்திலுள்ள 36 பேர் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கத்தாரில் ஹமாஸுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்துள்ள போதிலும் காசா மீது புதிய தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

பாக்தாத்தில் உள்ள அரபுத் தலைவர்கள் காசா மீதான இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், முற்றுகையிடப்பட்ட பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க உலகளாவிய நடவடிக்கைக்கும் அழைப்பு விடுக்கின்றனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60,000 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 120,673 ஆக அதிகரித்துள்ளது.

The post காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 78 பலஸ்தீனியர்கள் பலி appeared first on Oruvan.com.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 23 பேர் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் இன்று அதிகாலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் மூத்த ஹமாஸ் அதிகாரி சலா அல்-பர்தாவில் மற்றும் அவரது மனைவியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காசா பகுதி முழுவதும் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதேவேளை, ஏமன் மீது அமெரிக்கா மீண்டும் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

The post காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 23 பேர் பலி appeared first on Oruvan.com.

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஐ கடந்தது
காசா மீதான இஸ்ரேலின் அண்மைய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 இற்கும் மேல் அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இன்மையால் தாக்குதல் மேற்கொள்ள உத்தரவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

சுமார் ஒருவருடத்திற்கும் மேலாக இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் நீடித்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர். முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த முதலாம் திகதியுடன் நிறைவடைந்தது.

எனினும், முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அதனடிப்படையில் இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் இஸ்ரேல் விருப்பம் தெரிவித்து அதனை வலியுறுத்தி வருகிறது.

இது நடைபெறாத நிலையில் காசாவுக்கான நிவாரண பொருட்களை நிறுத்தியுள்ளதுடன் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

The post காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஐ கடந்தது appeared first on Oruvan.com.

ஹமாஸ் மேலும் நான்கு உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது
ஹமாஸ் மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. பதிலுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை ஹமாஸிடம் ஒப்படைத்துள்ளது.

ஐந்து வாரங்களாக நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் காசாவில் மீண்டும் போர் வெடிக்கும் என்ற அச்சம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

பிணைக் கைதிகளின் உடல்கள் தெற்கு காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. நள்ளிரவில் உடல்கள் கெரம் ஷாலோமிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் இஸ்ரேல் பணயக்கைதிகளை ஒப்படைத்தது. இஸ்ரேல் கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. இந்த வழியில் இஸ்ரேல் 600 கைதிகளை விடுவித்தது.

இதனிடையே, புதன்கிழமை இரவு ஹமாஸால் ஒப்படைக்கப்பட்ட நான்கு உடல்களும் டிஎன்ஏ பரிசோதனைக்காக டெல் அவிவில் உள்ள தடயவியல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

முன்னதாக, கைதிகளை விடுவிப்பதில் இஸ்ரேல் தாமதப்படுத்தியது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளை எழுப்பியது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கைதிகளை விடுவிக்க மறுப்பதன் மூலம் இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியது. கைதிகளை விடுவிக்காமல் இரண்டாம் கட்ட போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்றும் அவர்கள் கூறினர்.

இந்தக் கட்டத்தில்தான் மத்தியஸ்தர்கள் முன்முயற்சி எடுத்து இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சமாதானத்தை ஏற்படுத்தினர்.

The post ஹமாஸ் மேலும் நான்கு உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது appeared first on Oruvan.com.