Hamas-Israel Archives - Oruvan.com

பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு
லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் சுட்டிக்காட்டியுள்ளது.

இன் எல் ஹிலாவேயில் உள்ள மசூதிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை ட்ரோன் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர நகரமான சிடோனின் புறநகரில் இந்த தாக்குதல் நடந்ததாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேல், அகதிகள் முகாமில் ஹமாஸ் உறுப்பினர்கள் பயிற்சி பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.

வடக்கு எல்லைக்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லெபனானில் ஹமாஸ் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை ஹமாஸ் முற்றிலும் மறுத்துள்ளது.

லெபனானில் உள்ள அகதிகள் முகாம்களில் பயிற்சி வசதிகள் இல்லை என்று ஹமாஸ் பதிலளித்துள்ளது.

எவ்வாறாயினும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு லெபனான் ஏற்கனவே தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 69,483 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 170,706 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரை நிறுத்த இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அமைதிக்கான முதல் கட்ட திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒப்பந்தத்தின்படி அனைத்துப் பிணைக் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.

அதேபோல் இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து மீட்டுக்கொள்ளும். அமைதிக்கான முதல் அடியை வலிமையாக எடுத்து வைத்துள்ளோம்,” என்று டிரம்ப் சுட்டிக்காட்டியள்ளார்.

“அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். இஸ்ரேல், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு இது ஒரு சிறப்பான நாள். அமைதிப் பேச்சுக்குத் துணையாக இருந்த கத்தார், எகிப்து, துருக்கிக்கு நன்றி,” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்துள்ள நிலையில், அமைதிக்காக 20 அம்சத் திட்டத்தை கடந்த வாரம் டிரம்ப் வெளியிட்டார்.

இதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்த இருதரப்பினருக்கும் இடையிலான போர் அண்டைய நாடுகளுக்கும் பரவிய நிலையில் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாள்களாக எகிப்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர்களுக்கு இடையே மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தப் பின்னணியிலேயே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தரப்பும் உறுதி செய்துள்ளது.

எனினும், இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து முழுமையாக மீட்டுக்கொள்வதை அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என ஹமாஸ் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் உயிரிழந்ததுடன், 251 பேர் பணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காஸாமீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் 67,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு appeared first on Oruvan.com.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் – அமெரிக்கா 21 அம்ச திட்டத்தை அறிவித்தது
இஸ்​ரேல்​-ஹ​மாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்தை அமெரிக்கா அறி​வித்​துள்​ளது.

பாலஸ்​தீனத்திலுள்ள காசா முனையை நிர்​வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்​குழு​வினர் கடந்த 2023ஆம் ஆண்டு ஆண்டு ஒக்​டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் மீமு தீவிர​வாத தாக்​குதல் நடத்​தினர்.

இந்த தாக்​குதலில் 1,139 இஸ்​ரேலியர்​கள் கொல்​லப்​பட்​டதுடன், இஸ்​ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதி​களாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்​திச் சென்​றது.

இதையடுத்​து, ஹமாஸ் ஆயுதக்​குழு மீது போர் அறி​வித்த இஸ்​ரேல், காசா முனை​யில் அதிரடி தாக்​குதல் நடத்தி வரு​கிறது. காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் போரில் சுமார் 65,000க்​கும் அதி​க​மான பாலஸ்​தீனர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் காசா​வில் போரை நிறுத்​து​வதற்​கான ஒப்​பந்​தத்தை இறுதி செய்​யும் முயற்​சி​யில் அமெரிக்கா ஈடு​பட்டு உள்​ளது.

ஹமாஸிட​மிருந்து பிணைக் கைதி​களை மீட்டு போரை முடிவுக்​குக் கொண்டு வரு​வோம் என்று வெள்ளை மாளி​கை​யில் செய்​தி​யாளர்​களிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்​ளிக்​கிழமை தெரி​வித்​தார்.

மேலும், ஹமாஸ் பிணைக் கைதி​களை விடுவிக்க 48 மணி நேரம் கெடு​வை​வும் அமெரிக்கா விதித்​துள்​ளது. அத்துடன், இஸ்​ரேல், பாலஸ்​தீனம் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்​தை​யும் அமெரிக்கா தற்​போது அறி​வித்​துள்​ளது.

இரு தரப்​பும் இந்​தத் திட்​டத்தை ஒப்​புக்​கொண்​டால், உடனடி​யாக மோதல்​கள் நிறுத்​தப்​படும். இஸ்​ரேல் தனது நடவடிக்​கைகளை நிறுத்​தி, காசா​விலிருந்து படிப்​படி​யாக வெளி​யேறத் தொடங்​கும்.

பாலஸ்​தீனர்​களை கொண்ட ஒரு குழு​வைக் கொண்டு காசா​வில் இடைக்​கால நிர்​வாகம் அமைக்​கப்​படும். அந்த அமைப்பே காசா​வில் அன்றாட நிர்​வாகத்​தைக் கவனிக்​கும்.

அமெரிக்​கா​வின் தலை​மை​யில் அரபு மற்​றும் ஐரோப்​பிய நாடு​களைக் கொண்ட ஒரு புதிய சர்​வ​தேச குழு இதைக் கண்​காணிக்​கும்.

பாலஸ்​தீனிய ஆணை​யம் தனது சீர்​திருத்​தத் திட்​டத்தை முடிக்​கும் வரை காசா​வின் மறுசீரமைப்​புக்கு நிதி திரட்​டு​வது இக்​குழு​வின் பணியாகும்.

இந்​தத் திட்​டத்​துக்கு இஸ்​ரேல் சம்​மதம் தெரி​வித்த 48 மணி நேரத்​துக்​குள், உயிருடன் உள்ள மற்​றும் இறந்த அனைத்​துப் பிணைக் கைதி​களும் இஸ்​ரேல் வசம் ஒப்​படைக்​கப்​படு​வார்​கள்.

போர் உடனடி​யாக நிறுத்​தப்​படும் போன்ற அம்​சங்​கள் இந்தப்பட்டியலில் இடம்​பெற்​றுள்​ளன. இதேவேளை, பாலஸ்​தீனத்தை தனி நாடாக அங்​கீகரிக்க பிரித்தானியா உள்​ளிட்ட நாடு​கள் முடிவு செய்​துள்​ளமை குறிப்பிடத்தக்கது.

The post இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் – அமெரிக்கா 21 அம்ச திட்டத்தை அறிவித்தது appeared first on Oruvan.com.

காசா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்
காசா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைக்காக சுமார் 60,000 பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த சில நாட்களாக குறித்தப் விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 நாள் போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் பாதி பேரை விடுவிப்பதற்கான முன்மொழிவுக்கு ஹமாஸின் பதிலை இஸ்ரேல் ஆய்வு செய்து வரும் நிலையில் இந்த உறுதிப்படுத்தல் வந்துள்ளது.

பாலஸ்தீன பிரதேசத்தின் மையப்பகுதியில் உள்ள காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான புதிய தாக்குதலுக்கான திட்டங்களை இஸ்ரேல் அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் புதிய உத்வேகத்தைப் பெற்றன.

அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர்நிறுத்தத் திட்டம் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை எகிப்து மற்றும் கத்தார் முன்வைத்துள்ளன.

ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 200 பாலஸ்தீனியர்களையும், குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறார்களையும் விடுவிப்பது, அதற்கு ஈடாக காசாவில் இருந்து உயிருடன் உள்ள பத்து பணயக்கைதிகளையும் இறந்த 18 பணயக்கைதிகளையும் விடுவிப்பது ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும் என்றார்.

இரண்டு எகிப்திய பாதுகாப்பு வட்டாரங்கள் இந்த விவரங்களை உறுதிப்படுத்தின, மேலும் நூற்றுக்கணக்கான காசா கைதிகளை விடுவிக்க ஹமாஸ் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் மொத்தம் 50 பணயக்கைதிகள் இருப்பதாகவும், அவர்களில் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமைச்சரவை நிறுவிய கொள்கைகளின்படி, 50 பணயக்கைதிகளையும் விடுவிக்க இஸ்ரேல் கோருகிறது.

ஹமாஸின் இறுதி தீர்க்கமான கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம், எந்த பணயக்கைதியையும் விட்டுவிட மாட்டோம்” என்று இஸ்ரேலிய அரசியல் வட்டாரம் நேற்று தெரிவித்தது.

போர் நிறுத்த முன்மொழிவு குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரைவில் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டதாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹமாஸ் தலைமையிலான போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து 1,200 பேரைக் கொன்று 251 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தபோது போர் தொடங்கியது.

இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து 62,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலிய தாக்குதல் காசாவை ஒரு மனிதாபிமான நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளதுடன், அதன் மக்களில் பெரும்பாலோரை இடம்பெயர செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post காசா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் appeared first on Oruvan.com.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு
தெற்கு காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேலின் ஆறு நாள் இராணுவ நடவடிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில், போராளிக்குழு அதிகாரிகள் இந்த தகவலை அறிவித்துள்ளனர்.

கான் யூனிஸ் மீதான வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனக் குழுவின் அரசியல் அலுவலக உறுப்பினரான பர்தவீல் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆதரவு ஊடகங்கள் தெரிவித்தன.

இஸ்ரேலிய அதிகாரிகள் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஹமாஸ் தலைமையின் ஊடக ஆலோசகர் தாஹர் அல்-நோனோ, தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில் பர்தவீலின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

17 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போரில் இரண்டு மாதங்களாக அமைதி நிலவிய பின்னர், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை கைவிட்ட பிறகு, செவ்வாயன்று ஹமாஸுக்கு எதிராக முழுமையான வான் மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், காசா மக்கள் மீண்டும் தங்கள் உயிருக்காக தப்பி ஓடி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வடக்கு, மத்திய மற்றும் தெற்கு காசா பகுதி முழுவதும் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.

இஸ்ரேலிய விமானங்கள் அந்தப் பகுதிகளில் பல இலக்குகளைத் தாக்கியதால், செவ்வாய்க்கிழமை தொடங்கிய தாக்குதலின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று சாட்சிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இதுவரை ரஃபா மற்றும் கான் யூனிஸ் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 18 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

ஹமாஸ் மேலும் நான்கு உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது
ஹமாஸ் மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. பதிலுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை ஹமாஸிடம் ஒப்படைத்துள்ளது.

ஐந்து வாரங்களாக நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் காசாவில் மீண்டும் போர் வெடிக்கும் என்ற அச்சம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

பிணைக் கைதிகளின் உடல்கள் தெற்கு காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. நள்ளிரவில் உடல்கள் கெரம் ஷாலோமிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் இஸ்ரேல் பணயக்கைதிகளை ஒப்படைத்தது. இஸ்ரேல் கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. இந்த வழியில் இஸ்ரேல் 600 கைதிகளை விடுவித்தது.

இதனிடையே, புதன்கிழமை இரவு ஹமாஸால் ஒப்படைக்கப்பட்ட நான்கு உடல்களும் டிஎன்ஏ பரிசோதனைக்காக டெல் அவிவில் உள்ள தடயவியல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

முன்னதாக, கைதிகளை விடுவிப்பதில் இஸ்ரேல் தாமதப்படுத்தியது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளை எழுப்பியது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கைதிகளை விடுவிக்க மறுப்பதன் மூலம் இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியது. கைதிகளை விடுவிக்காமல் இரண்டாம் கட்ட போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்றும் அவர்கள் கூறினர்.

இந்தக் கட்டத்தில்தான் மத்தியஸ்தர்கள் முன்முயற்சி எடுத்து இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சமாதானத்தை ஏற்படுத்தினர்.

The post ஹமாஸ் மேலும் நான்கு உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது appeared first on Oruvan.com.