gunshoot Archives - Oruvan.com

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது
அம்பலாங்கொடையில் உள்ள  வணிக நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு தங்குமிடத்தை சோதனையிட்டபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

காலியில் அம்பலாங்கொடை நகரத்தில் திங்கட்கிழமை (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 47 வயதான ஸ்ரீரன் கோசல டி சில்வா  என்பவர் உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட போது கைத்துப்பாக்கி இயங்காமையினால் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இதனால் துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பியோடிய நிலையில் இலக்கு வைக்கப்பட்ட நபர் துப்பாக்கிதாரியை துரத்திச் சென்றுள்ளார்.

இருப்பினும், மிகக் குறுகிய நேரத்தில் வேறொரு துப்பாக்கியுடன் மீண்டும் வந்த துப்பாக்கிதாரி, கோசல டி சில்வா நோக்கிச் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றிருந்த நிலையில், மோட்டார் சைக்களில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது appeared first on Oruvan.com.

நுகேகொடை துப்பாக்கிச் சூடு – கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு
நுகேகொடை – கொஹூவல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து கொழும்பு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 25 வயதுடைய ஒருவர் காயமடைந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பு நகரம் முழுவதும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக நம்பப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பொது மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, அம்பலாங்கொட பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

The post நுகேகொடை  துப்பாக்கிச் சூடு – கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு appeared first on Oruvan.com.

கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது – போதை மாத்திரைகள், வாள் மீட்பு
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸார் காரினை மடக்கி சோதனை செய்த போது, காரினுள் இருந்து 5000 போதை மாத்திரைகள் மற்றும் வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

அதேவேளை காரின் இலக்க தகடு போலியானது எனவும், குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றுடன் சேர்ந்து இயங்கும் நபர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது, துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு , பின்னர் கார் ஒன்றில் ஏறி, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் மீது காரினை ஏற்றி தப்பி சென்று இருந்தார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், பெண்ணொருவருடன் பிரதான சந்தேநபர்கள் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும், கொழும்புக்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவரை கைது செய்யுமாறு கொழும்பில் இருந்து, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருப்பது தொடர்பிலான தகவல், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து வீதியில் காரை மடக்கி சந்தேக நபரை கைது செய்தனர்.

அதன் போது காரினுள் 5000 போதை மாத்திரைகள் மற்றும் வாள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தவேளை, குறித்த நபர் உடுவில் பகுதியை சேர்ந்தவர் எனவும், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் சிலவற்றுடன் தொடர்புடையவர் எனவும் , வன்முறை கும்பல் ஒன்றுடன் சேர்ந்து இயங்குபவர் என தெரிய வந்துள்ளது.

அத்துடன் காரின் இலக்க தகடும் போலியானது என்பதனையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அதேவேளை, போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டில் யாழ் , நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்திய பின்னர் , கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு , நீதிமன்ற அனுமதியுடன் சந்தேக நபரை கொழும்பு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது – போதை மாத்திரைகள், வாள் மீட்பு appeared first on Oruvan.com.

கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்களிடம் மீட்கப்பட்ட இலட்ச ரூபாய் பெறுமதியான நாய்
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை காருடன் மூவரும் கைது செய்யப்படும் போது, காரினுள் அவர்களின் ஆடைகள் எதுவும் இல்லாத நிலையில், சந்தேகநபர்களுக்கு சொந்தமான இலட்ச ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு இன வளர்ப்பு நாய் ஒன்றும் காரினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அதனையும் கொழும்புக்கு அழைத்து செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது, பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் மிக அருகில் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு, பின்னர் கார் ஒன்றில் ஏறி, துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விழுந்தவர் மீது காரினை ஏற்றி தப்பி சென்று இருந்தார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்தன.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காரினை கொழும்பு ஆமர் வீதியில் கைவிட்டு விட்டு , பிறிதொரு காரில் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் காரினை வாடகைக்கு பெற்று வடக்கு நோக்கி தப்பி சென்றதை அறிந்த பொலிஸார், காரினை வாடகைக்கு கொடுத்த நிறுவனத்தினை கண்டறிந்து , அவர்களிடம் இருந்து கார் தொடர்பிலான தகவல்களை பெற்று இருந்தனர்.

அதன் அடிப்படையில் காரில் பொருத்தப்பட்டிருந்த தடங்காட்டியின் (GPS) உதவியுடன் காரினை கண்காணித்த வேளை கார், மானிப்பாய் பகுதியில் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொழும்பினை சேர்ந்த பொலிஸ் குழு அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடுப்பு பிரிவினர், காரினை மானிப்பாய் பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் கண்டுபிடித்தனர்.

அதனை அடுத்து காரினை மீட்ட பொலிஸார் காரில் பயணித்த மூவரையும், வாகன திருத்தக உரிமையாளரையும் கைது செய்ததுடன் அவர்களால் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட அவர்களின் வளர்ப்பு நாயினையும் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்று இருந்தனர்.

வாகன திருத்தக உரிமையாளரிடம் முன்னெடுத்த விசாரணையில் காரில் குளிரூட்டி (AC) வேலை செய்யவில்லை என அதனை திருத்தம் செய்யவே காரினை கொண்டு வந்தார்கள் என தெரிவித்துள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , காரினை திருத்தவே திருத்தகம் போனார்கள் என்பதனை பொலிஸார் உறுதிப்படுத்தியதை அடுத்து திருத்தக உரிமையாளரை விடுவித்தனர்.

அதேவேளை காரில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட மூவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தாம் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்ததாகவே கூறியுள்ளனர்.

காரில் மீட்கப்பட்ட நாய் வளர்ப்பு நாய் எனவும் , கைது செய்யப்பட்ட பெண் , கைது செய்யப்பட்ட ஆணொருவரின் காதலி எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பொலிஸ் விசேட குழு , கைது செய்யப்பட்ட மூவரையும் பொறுப்பெடுத்துக் கொண்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் , அவர்கள் பயணித்த கார் மற்றும் அவர்களின் வளர்ப்பு நாய் என்பவற்றையும் கொழும்புக்கு  அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை கொழும்பில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் , யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தப்பி செல்வது அதிகரித்துள்ள நிலையில் , யாழ்ப்பாண கரையோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்களை பாதுகாப்பு தரப்பினர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்களிடம் மீட்கப்பட்ட இலட்ச ரூபாய் பெறுமதியான நாய் appeared first on Oruvan.com.

மீகொட துப்பாக்கிச் சூட்டில் அரசியல்வாதி பலி – பின்னணியில் உள்ள காரணம்
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவின் கொலை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

“பஸ் லலித்” எனப்படும் ஹன்வெல்லே லலித் கன்னங்கர இந்தக் கொலையைத் திட்டமிட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் இந்த நபர் துபாயில் இருந்து இந்தக் கொலையைத் திட்டமிட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட சாந்த முதுங்கொடுவ என்பவர் “பனா” என்ற புனைப்பெயரால் அறியப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.

“ஹோமாகம ஹந்தயா” எனப்படும் மற்றொரு போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“பஸ் லலித்” எனப்படும் லலித் கன்னங்கரவுக்கும் ஹோமாகம ஹந்தயாவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ நேற்று மதியம் மீகொடவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு குழு அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை நடந்த சிறிது நேரத்திலேயே தலங்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும், கார் ஓட்டுநரையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட 46 வயதான சாந்த முதுங்கொடுவ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சர்வ ஜன பலய உள்ளிட்ட பல கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மீகொட துப்பாக்கிச் சூட்டில் அரசியல்வாதி பலி – பின்னணியில் உள்ள காரணம் appeared first on Oruvan.com.

தோல்வியில் முடிந்தது துப்பாக்கிச் சூடு
ஹிக்கடுவையில் உள்ள தொடந்துவ மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் ஒருவரை சுடுவதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

நிதி தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், துப்பாக்கி இரண்டு முறை தவறாகப் பயன்படுத்தப்பட்டு தோல்வியடைந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றதாகவும், ஒரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post தோல்வியில் முடிந்தது துப்பாக்கிச் சூடு appeared first on Oruvan.com.

டிக்டொக் வீடியோ போட்ட மகள்…சுட்டுக்கொன்ற தந்தை
அமெரிக்க வாழ் பாகிஸ்தானிய குடும்பத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி டிக் டொக் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இது சிறுமியின் தந்தைக்கு பிடிக்காததால் டிக் டொக் வீடியோ போடுவதை நிறுத்தும்படி பல முறை எச்சரித்துள்ளார்.

ஆனால், சிறுமி அதனை காதில் வாங்காமல் தொடர்ந்தும் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி பாகிஸ்தானின் குவெட்டாவிலுள்ள சொந்த ஊருக்கு சிறுமியின் குடும்பம் சென்றுள்ளது.

அப்போது வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் உடலில் திடீரென துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார். எங்கிருந்தோ வந்த குண்டு மகளை காயப்படுத்தி அவள் இறந்ததாக சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணையில் சிறுமியின் தந்தையும் அவரது மைத்துனரும் சேர்ந்து சிறுமியை கொலை செய்தமை தெரிய வந்துள்ளது.

இதனால் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். டிக்டொக் வீடியோ போட்டதால் தந்தையே மகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post டிக்டொக் வீடியோ போட்ட மகள்…சுட்டுக்கொன்ற தந்தை appeared first on Oruvan.com.