Gunawardena Archives - Oruvan.com

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
369 இலட்சம் ரூபா மேலதிக வருமான வரி செலுத்தாமைக்கான காரணங்கள் இருப்பின் நீதிமன்றில் எழுத்துமூலம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகர மஹராச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி  நீதிமன்றில் எழுத்துமூலம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சஜின் வாஸ் குணவர்தனவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில்  தனிநபர் வருமான வரியை செலுத்தாமைக்காக  சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

The post சஜின் வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு appeared first on Oruvan.com.

வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை உறுதி
தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (20)  அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்காக குறித்த வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஐவரும் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த தண்டனைக்கு எதிராக பிரதிவாதிகள் முன்வைத்த மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே பிரதிவாதிகளுக்கு அறிவித்தார்.

இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வினால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக பிரதிவாதிகளுக்கு நீதியரசர் ஆதித்ய பட்டபெந்திகே தெரிவித்தார்.

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றும் திகதியை உயர் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

குற்றவாளிகள் ஜனாதிபதியின் மன்னிப்பை எதிர்பார்க்கும் பட்சத்தில் தண்டனையை நிறைவேற்றும் திகதி அவர்களுக்கு மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அதற்கமைய தண்டனையை நிறைவேற்றும் திகதி தொடர்பில் உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் மட்டுமே தீர்மானம் எடுக்க முடியும் எனவும் இது தொடர்பில் தனக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  ஆதித்ய பட்டபெந்திகே தெரிவித்தார்.

The post வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை உறுதி appeared first on Oruvan.com.