Gun shot Archives - Oruvan.com

நவகமுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு
நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான புதுப்பித்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி,  இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக  இந்த சம்பவதம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (1) இரவு மூன்று பேரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 20 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நவகமுவ பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வாடகை வீட்டில் தங்கியிருந்த மூன்று பேரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டின் குளியலறைக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பொரளை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அதுருகிரியவில் உள்ள பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவரின் உடலில் நான்கு துப்பாக்கி தோட்டாக்களும், மற்றொருவரின் உடலில் ஒரு தோட்டாவும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்த இடத்தில் ஒன்பது மில்லி மீட்டர் அளவிலான 15 தோட்டா உறைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (01) இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பாதிக்ப்பட்ட மூவரும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு குறித்த வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

எனினும், இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக நவகமுவ பொலிஸாரும், நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

The post நவகமுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

பேலியகொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
பேலியகொடை ஞானரத்ன மாவத்தையில் இன்று (19) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரே காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post பேலியகொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம் appeared first on Oruvan.com.

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு
களுபோவில பன்சல வீதியில் உள்ள ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள்  வீட்டை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிதி தகராறின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

கொஹுவல பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு appeared first on Oruvan.com.

துசித ஹல்லோலுவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு – விசாரணைகள் சிஐடி வசம்
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாரஹேன்பிட்டவில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு அருகில் நேற்று (17) இரவு துசித ஹல்லோலுவ காரில் பயணித்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் பயணித்த காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

அங்கு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துசித ஹல்லோலுவைத் தாக்கி, அவர் வைத்திருந்த கோப்பையும் திருடிச் சென்றனர். சம்பவம் நடந்தபோது துசித ஹல்லோலுவவின் சட்டத்தரணியும் காரில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

துசித ஹல்லோலுவ கடந்த 15ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post துசித ஹல்லோலுவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு – விசாரணைகள் சிஐடி வசம் appeared first on Oruvan.com.

கொழும்பு – கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு பற்றிய கூடுதல் தகவல்கள்
கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் நேற்று (17) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் இருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான மோதர நிபுனவின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸ் விசாரணைகளில், இந்த துப்பாக்கிச் சூடு மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான சேதாவத்த கசுனின் ஆதரவு பிரிவினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 22 மற்றும் 28 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையில், இந்த ஆண்டு இதுவரை 25 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 16 சம்பவங்கள் திட்டமிடப்பட்டவை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொழும்பு – கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு பற்றிய கூடுதல் தகவல்கள் appeared first on Oruvan.com.

கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு துப்பாக்கிதாரிகள் லொரியில் வந்து பாதிக்கப்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

The post கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு  – இருவர் படுகாயம் appeared first on Oruvan.com.

தொடங்கொட பகுதியில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு
தொடங்கொட, வில்பத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதாகவும், சிறப்பு அதிரடிப் படை வீரர்களும் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தொடங்கொட பகுதியில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு appeared first on Oruvan.com.

தெவினுவர பகுதியில் துப்பாக்கிச் சூடு – மயிரிழையில் உயிர் தப்பிய தொழிலதிபர்
தெவினுவர, தல்பாவில பகுதியில் உலர் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரை குறிவைத்து நேற்று (12) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

உலர்ந்த மீன்களை வாங்க விரும்புவதாகக் கூறி தொழிலதிபரை ஏமாற்றி துப்பாக்கிதாரிகள் கேட்டைத் திறந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேட்டை திறந்ததும் துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், தொழிலதிபர் ஒரு கீறல் கூட இல்லாமல் தப்பியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் துப்பாக்கியால் சுடும் காட்சிகளையும், சுடத் தவறியதையும், பின்னர் தொழிலதிபரை துரத்துவதையும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு காலி தோட்டாவை எடுத்துச் செல்வதையும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தெவினுவர பகுதியில் துப்பாக்கிச் சூடு – மயிரிழையில் உயிர் தப்பிய தொழிலதிபர் appeared first on Oruvan.com.

மீகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்த நபர் ஒருவர் இனந்தெரியாத இருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சகோதரரின் வீட்டில் இருந்து மீகொட நாகஹவத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர் காரை நிறுத்தியதாகவும், மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது உயிரிழந்தவரின் ஒன்றரை வயதுடைய மகளும் மனைவியும் காரில் இருந்துள்ளனர்.

உயிரிழந்த நபர் பத்தரமுல்லை செத்சிரிபாயவில் உள்ள சம்ருதி மானிய அலுவலகத்தில் அலுவலக உதவி அதிகாரியாக பணியாற்றியவர்.

இந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப்பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மீகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.