Grandpass Archives - Oruvan.com

கொழும்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு
கொழும்பில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிராண்ட்பாஸ் மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் இருந்து இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முதல் சடலம் நேற்று மாலை (29) கிராண்ட்பாஸ், இங்குருகடே சந்திப்பில் கண்டெடுக்கப்பட்டது.

இறந்தவரின் அடையாளம் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர், ஆனால் உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் சுமார் 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர் என்றும், கருப்பு ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக பரிசோதனைக்காக சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இரண்டாவது சடலம் நேற்று மாலை தெஹிவளை, சிறிவர்தன வீதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டது.

இறந்தவர் தெஹிவளையைச் சேர்ந்த 23 வயதுடைய ஆண் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொழும்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு appeared first on Oruvan.com.

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 24 வயதான பெண் ஒருவர் கைது
கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் தெரு பகுதியில் கடந்த 17 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், இருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டிருநு்தது.

இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காகவும், உடந்தையாக இருந்ததற்காகவும் ஒரு சந்தேக நபர் ராஜகிரிய பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காக சந்தேக நபரின் மனைவி நேற்று (20) கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர் கொட்டவில, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 24 வயதான பெண் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

கொழும்பு – கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு பற்றிய கூடுதல் தகவல்கள்
கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் நேற்று (17) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் இருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான மோதர நிபுனவின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸ் விசாரணைகளில், இந்த துப்பாக்கிச் சூடு மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான சேதாவத்த கசுனின் ஆதரவு பிரிவினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 22 மற்றும் 28 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையில், இந்த ஆண்டு இதுவரை 25 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 16 சம்பவங்கள் திட்டமிடப்பட்டவை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொழும்பு – கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு பற்றிய கூடுதல் தகவல்கள் appeared first on Oruvan.com.

கிராண்ட்பாஸ் இரட்டைக்கொலை – நால்வர் கைது
கொழும்பு கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பகுதியில் நேற்று (15) இருவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் சேதவத்தை, நவலோகபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட இருவர் உட்பட ஐந்து பேர், நேற்று (15) அதிகாலை களனிதிஸ்ஸ கிராமப் பகுதியில் இரண்டு பேரைத் தாக்க முச்சக்கர வண்டியில் வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்தக் குழு வந்தபோது, ​​மற்றையக் குழுவைச் சேர்ந்தவர்கள் ரயில் பாதையில் அவர்களைத் துரத்திச் சென்று கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலையைச் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சேதவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

The post கிராண்ட்பாஸ் இரட்டைக்கொலை – நால்வர் கைது appeared first on Oruvan.com.