GovPay Archives - Oruvan.com

GovPay வசதி இப்பொழுது நுவரெலியா மற்றும் ஹெட்டனில்
நுவரெலியா மற்றும் ஹட்டன் பிரிவுகளில் போக்குவரத்து அபராதங்களை GovPay ஆன்லைன் கட்டண முறையைப் பயன்படுத்தி செலுத்தும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஆச்சார்யா மண்டபத்தில் மாவட்ட டி.ஐ.ஜி பிரியந்த சந்திரசிறி மற்றும் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு மாவட்ட டி.ஐ.ஜி சேனாதீர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

The post GovPay வசதி இப்பொழுது நுவரெலியா மற்றும் ஹெட்டனில் appeared first on Oruvan.com.

நுவரெலியா மற்றும் ஹட்டனிலும் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி
நுவரெலியா மற்றும் ஹட்டன் பொலிஸ் பிரிவுகளில் உள்ள வாகன சாரதிகள், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay ஆகியவற்றால் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட Gov Pay மூலம் போக்குவரத்து அபராதங்களை நிகழ்நிலையில் செலுத்தலாம்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இதற்கான உத்தியோகப்பூர்வ தொடக்க விழா நேற்று இடம்பெற்றிருந்தது.

நுவரெலியா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பிரியந்த சந்திரசிறி மற்றும் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் W. P. J. சேனாதீர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

தகவல் ,தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் LankaPay இன் பிரதிநிதிகள் நிகழ்நிலை கட்டண முறையை செயல்படுத்துவது குறித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப அறிவுறுத்தல்களை வழங்கினர்.

தகவல் ,தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் உதாரி விதானகே, தொழில்நுட்ப அதிகாரி இனுகா மாயகடுவ மற்றும் LankaPay திட்ட முகாமையாளர் அமில ஏகநாயக்க ஆகியோர் கணினி பயன்பாடு மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகள் குறித்த அமர்வுகளுக்கு தலைமை தாங்கினர்.

இதன்போது, ​​டிஜிட்டல் கட்டண செயன்முறையை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு கையடக்கத்தொலைபேசிகள் அடையாளமாக வழங்கப்பட்டன.

Gov Pay அமைப்பு, வாகன சாரதிகள் நிகழ்நிலையில் அபராதம் செலுத்தவும், சாரதி உரிமங்களை மீட்டெடுக்கவும் அனுமதிக்கிறது.

The post நுவரெலியா மற்றும் ஹட்டனிலும் GovPay  மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி appeared first on Oruvan.com.

GovPay டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 2 பில்லியனைத் தாண்டியது
இலங்கையின் அரச டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் தளமான GovPay, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2 பில்லியன் ரூபா மொத்த கொடுக்கல் வாங்கல் பெறுமதியைத் தாண்டியுள்ளது.

இதில் இறுதி ஒரு பில்லியன் ரூபாவானது வெறும் 45 நாட்கள் போன்ற குறுகிய காலப்பகுதிக்குள் எட்டப்பட்டமை ஒரு விசேட அம்சமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

2025 பெப்ரவரி 07ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 69,000 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது 215 அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான 3,372 அரச சேவைகளுக்காக இத்தளத்தின் ஊடாகக் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

அதேபோன்று, 2025 ஏப்ரல் 10ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி போக்குவரத்து அபராதக் கொடுப்பனவு முறைமை ஊடாக 50,000 க்கும் மேற்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மூலம் 66 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

தற்போது மேல், தென், வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அதிவேக நெடுஞ்சாலைகளிலும் நடைமுறையிலுள்ள இந்த போக்குவரத்து அபராதக் கொடுப்பனவு சேவையானது, 2026 ஜனவரி மாதத்தில் மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

வட மாகாணத்தின் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களும், தென் மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகங்களும் ஏற்கனவே இந்த முறைமையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களையும் டிஜிட்டல் மயமாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், இலங்கை பொலிஸ் திணைக்களம், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம், மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை அணுசக்தி சபை ஆகியன 2025 ஆம் ஆண்டில் அதிக பங்களிப்பை வழங்கிய நிறுவனங்களாகும் என அமைச்சு அறிவித்துள்ளது.

மேலதிகமாக, 2025 நவம்பர் மாதம் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின் போது ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அனர்த்த நிவாரண நிதியத்திற்காக’ (Rebuild Sri Lanka Disaster Relief Fund) சுமார் 14 மில்லியன் ரூபாவைத் திரட்டுவதற்கும் இந்த GovPay தளம் பங்களிப்பு வழங்கியுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) மற்றும் லங்காபே (LankaPay) ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டம், 2030 ஆம் ஆண்டளவில் 15 பில்லியன் அமெரிக்க டொலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

The post GovPay டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 2 பில்லியனைத் தாண்டியது appeared first on Oruvan.com.

GovPay ஊடாக ரூ.568 மில்லியனுக்கும் அதிகமான நிதிப் பரிவர்த்தனைகள்
இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் வசதியான இணையவழ தளமான ‘GovPay’ மூலம், குடிமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள், கல்வி கட்டணங்கள் மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் டிஜிட்டல் மூலம் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று வரையில் 37,715 பரிவர்த்தனைகள் ஊடாக ரூ. 568,666,330 பெறுமதியான அரசாங்க நிதிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பணியில் 184 அரச நிறுவனங்கள் இணைந்துள்ளன.

GovPay ஆனது, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் செயற்படும் நாட்டின் தேசிய கொடுப்பனவு வலையமைப்பான LankaPay ஆல் இயக்கப்படும் ஒரு திட்டமாகும்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் முன்முயற்சியின் கீழ், இந்தப் புதிய தளம், அரசாங்கத்தின் நிதிப் பரிவர்த்தனைகளில் மேம்பட்ட கட்டுப்பாடு, துல்லியம், பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் வருவாய் சேகரிப்பு செயல்முறைகளை நவீனப்படுத்துகிறது.

இதன் மூலம், அரச நிறுவனங்களுடனான நிதிப் பரிவர்த்தனைகளை முறைப்படுத்துவதன் மூலம் மின்-ஆளுகையை மேம்படுத்துவதற்கான இலங்கையின் டிஜிட்டல் மாற்ற முயற்சிகளில் இந்தப் திட்டம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.

GovPay, ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க தலைமையில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டம் பல கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

The post GovPay ஊடாக ரூ.568 மில்லியனுக்கும் அதிகமான நிதிப் பரிவர்த்தனைகள் appeared first on Oruvan.com.

வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்
அரசாங்க டிஜிட்டல் கட்டணத் தளமான (GovPay) மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்று 28.10.2025 கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (DIG) திலக் சி ஏ தனபால, வன்னிப்பிரிவுக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ இந்திக்க ஹப்புகொட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் ஜே.ஏ சந்திரசேன, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.எச் மாரப்பன, வவுனியா பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் [SSP) டபிள்யூ.ஏ சோமரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஊடகங்களிடம் கூறியவை வருமாறு,

‘ டிஜிட்டல் மயமாக்கலை நாடு முழுவதும் அமுல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்டணங்கள் மட்டுமின்றி அபராதத்தையும் (GovPay) மூலம் செலுத்துவதன் மூலம் கால வீணடிப்பு குறைக்கப்படுகின்றது. பொலிஸாரின் சேவையையும் இது இலகுப்படுத்தும். மக்களுக்கும் நேர வீணடிப்பு ஏற்படாது.

(GovPay) மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் நடைமுறை மேல் மற்றும் தென்மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாவதாக தற்போது வடக்கு மாகாணத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குரிய உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பொலிஸாரின் தவறான நடவடிக்கையால் ஒட்டுமொத்த பொலிஸ் துறைக்கும் களங்கம் ஏற்படும் நிலை காணப்பட்டது.

நவீன முறைமை என்பது வெளிப்படை தன்மையானது. எனவே, பொலிஸார் மீதான விமர்சனங்களுக்கும் இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இன்றைய நவீன உலகில், நவீன தொழில்நுட்பத்தை நோக்கி நாமும் நகரவேண்டும். அப்போதுதான் உலகை வென்று முன்நோக்கி செல்ல முடியும்.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தை மக்கள் மத்திக்கு கொண்டு செல்லும் பொறுப்பை எமது ஊடக தோழர்கள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.” – என்றார்.

The post வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம் appeared first on Oruvan.com.

GovPay மூலம் தென் மாகாணத்திலும் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம்
தென் மாகாணத்தில் இன்று (20) முதல் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி தற்போது மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தையும் உள்ளடக்கியுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபையின் உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தென் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் அந்த மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 400க்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் இந்த முறையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை முழுவதும் உள்ள அனைத்து மாகாணங்களிலும் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதியை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இதன் இரண்டாம் கட்டம் அதன் பிறகு செயல்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிய அவர், இந்த நடவடிக்கைக்காக தபால் திணைக்களம் மற்றும் போக்குவரத்துத் திணைக்களமும் இந்த செயல்முறையுடன் இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், Gov Pay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் செயல்பாட்டில் மேல் மாகாணம் அதிக அபராதத் தொகையை வசூலித்துள்ளதாகவும், இதுவரை சுமார் 20,000 போக்குவரத்து மீறல்களிலிருந்து சுமார் 30 மில்லியன் ரூபாய் போக்குவரத்து அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்து, இதில்170 நிறுவனங்கள் இணைந்துள்ளதாகவும், இந்த Gov Pay முறை மூலம் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு 400 மில்லியன் ரூபாய்க்கு மேல் கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

The post GovPay மூலம் தென் மாகாணத்திலும் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம் appeared first on Oruvan.com.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் GovPay அறிமுகம்
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கட்டண நடவடிக்கைகளை இன்று (26) முதல் GovPay மூலம் மேற்கொள்ள முடியும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வாடிக்கையாளர்கள் இன்று முதல் GovPay மூலம் எந்தவொரு கட்டண பரிவர்த்தனையையும் மேற்கொள்ள முடியும் என அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வாடிக்கையாளர்கள் இந்த கட்டண முறை மூலம் திறமையான மற்றும் வெளிப்படையான சேவைகளைப் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் டிஜிட்டல் ஆளுகைக் கொள்கைக்கு இணங்க, பல அரச நிறுவனங்கள் தற்போது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் கடமைகளைச் செய்து வரும் நிலையில், அதன்படி, அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு படியாக ‘GovPay’ கட்டண வசதி இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது, ​​137 அரச நிறுவனங்கள் GovPay மூலம் இணைக்கப்பட்டுள்ளதுடன், 138வது அரச நிறுவனமாக மத்திய மத்திய சுற்றாடல் அதிகாரசபை, இன்று (26) முதல் GovPay மூலம் எந்தவொரு கட்டண பரிவர்த்தனையையும் வாடிக்கையாளர்களால் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கியுள்ளது.

The post மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் GovPay அறிமுகம் appeared first on Oruvan.com.

இன்று முதல் GovPay மூலம் அபராதம் செலுத்தலாம்
மேற்கு மாகாணத்திலும், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று (28) முதல் GovPay மூலம் நேரடியாக அபராதம் வசூலிக்கும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.

இந்த செயல்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று 1000 போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு தொலைபேசிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

டிஜிட்டல் விவகார அமைச்சின் வலுவான அர்ப்பணிப்பு காரணமாக இந்த செயல்முறை மிக விரைவில் தொடங்க முடிந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

The post இன்று முதல் GovPay மூலம் அபராதம் செலுத்தலாம் appeared first on Oruvan.com.

நாடு முழுவதும் செப்டெம்பர் முதல் நடைமுறைக்கு வரும் GovPay வசதி
நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்தார்.

அபராதம் செலுத்துவது தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிய ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை குறித்த விவரங்களை வெளிப்படுத்திய அவர், மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள காவல் நிலையங்கள் தொடர்பாக இந்த மாத இறுதிக்குள் முதல் கட்டம் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

The post நாடு முழுவதும் செப்டெம்பர் முதல் நடைமுறைக்கு வரும் GovPay வசதி appeared first on Oruvan.com.

போக்குவரத்து விதிமீறல் அபராதம் – GovPay ஊடாக செலுத்த வழிமுறை
CLEAN SRI LANKA வேலைத்திட்டத்தின் ஊடாக, இலங்கை பொலிஸ் டிஜிட்டல் மயமாக்கும் ஒரு வேலைத்திட்டமாக, GovPay நிகழ்நிலை (Online) வசதி ஊடாக போக்குவரத்து விதிகளை மீறலுக்கான அபராத பணத்தைச் செலுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நடைமுறையிலிருந்த திட்டத்தின் படி, ஒரு சாரதி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறினால், பொலிசாரால் வழங்கப்படும் தண்டனைச் சீட்டை தபால் நிலையத்தில் காண்பித்து அதில் குறிப்பிட்டுள்ள அபராத பணம் செலுத்தி அதன் ரசீதை மீண்டும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த பின்னர் மட்டுமே சாரதி அனுமதிப்பத்திரம் மீண்டும் வழங்கப்பட்டு வந்தது.

ஆயினும் GovPay செயலியினூடாக தண்டப் பணத்தைச் செலுத்தி, அப்பணம் செலுத்தப்பட்ட குறுஞ்செய்தியை (SMS) போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு காண்பித்து உறுதிப்படுத்தும் பட்சத்தில், அச்சந்தர்ப்பத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கமைய, இப்புதிய திட்டமானது 11.04.2025 முதல் 30.04.2025 வரை

குருணாகல்

தொரட்டியாவ

மெல்சிறிபுர

கொகரெல்ல

கலேவெல

தம்புள்ளை

மடாடுகம

மரதன்கடவல

கெக்கிராவை

திறப்பனை

கவரக்குளம்

அநுராதபுரம்

ஆகிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை சரிசெய்த பின்னர், நாடளாவிய ரீதியில் இலங்கை பொலிசாரால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

The post போக்குவரத்து விதிமீறல் அபராதம் – GovPay ஊடாக செலுத்த வழிமுறை appeared first on Oruvan.com.