Governor of Northern Province Archives - Oruvan.com

சட்டவிரோத கட்டடங்களை இடியுங்கள் – வடக்கு ஆளூநர் உத்தரவு
பருவகால மழை ஆரம்பமாவதற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட வெள்ளவாய்க்கால்கள் மற்றும் மதகுகளை துப்புரவு செய்யும் பணிகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் அதேபோல கடந்த ஆண்டு வெள்ள இடர் பாதிப்புக்களை கவனத்திலெடுத்து அவற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் என்பன வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினமும் புதன்கிழமை நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

அமைக்கப்படும் வீதிகளின் தரம் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அது தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் நேரடியாகச் சென்று வேலைத் திட்டங்களை நேரடியாகப் பார்வையிட வேண்டும். மக்களின் தேவைகளின் அடிப்படையில் வீதித் திருத்தங்களை முன்னுரிமைப்படுத்த வேண்டும்.

அதேபோன்று, திணைக்களங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கு பதிலளிக்க ஒரு மாத காலங்கள் எடுத்துக்கொள்ளும் நிலை காணப்படுகிறது. அது தவறான செயற்பாடு. அன்றன்றே கடிதங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

அத்துடன் திணைக்களத் தலைவர்கள் தங்கள் திணைக்களங்களின் கீழான விவரங்கள் தொடர்பில் விரல் நுனியில் தரவுகளை வைத்திருக்க வேண்டும். திணைக்களத் தலைவர்கள் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் தங்கள் சேவைகளை ஆற்ற வேண்டும்.

எமது மாகாணத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தியின் எதிர்பார்ப்பும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்பதே, அதனை விடுத்து கட்டடங்கள் கட்டுவதாலோ அல்லது வீதிகள் அமைப்பதாலோ மாத்திரம் பயனில்லை.

உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் செயற்பட வேண்டும். அத்துடன் சோலை வரி மீளாய்வை அனைத்துச் சபைகளும் செய்து முடிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் அலுவலகம், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என ஒவ்வொரு திணைக்களங்களினதும் ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.

The post சட்டவிரோத கட்டடங்களை இடியுங்கள் – வடக்கு ஆளூநர் உத்தரவு appeared first on Oruvan.com.

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையத்தை உடன் ஆரம்பிக்க பணிப்பு
உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

யாழ். மாவட்டத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது அவசியம் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினரும் கோரிவருகின்றனர்.

கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் இதற்கான கட்டடம் எம்மால் அடையாளப்படுத்தப்பட்ட போதும் அது பொருத்தமானது அல்ல என அவர்கள் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

மாற்று இடத்தை உடனடியாக அடையாளப்படுத்தி வழங்கவேண்டியுள்ளது. தற்போது அதிகளவு சிறுவர்களும் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாவதால் உடனடியாக மறுவாழ்வு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

இதன்போது அச்சுவேலியில் சிறுவர் சான்றுபெற்ற பாடசாலைக்கு அண்மையாகவுள்ள வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்துக்குச் சொந்தமான கட்டடத்தை புனரமைப்புச் செய்து பயன்படுத்த முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அது இயங்குநிலைக்கு வரும் வரையில் இந்த மாத இறுதிக்குள் உடனடியாக ஏதாவது ஓர் இடத்தை தற்காலிகமாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அதன் போது, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மூடப்பட்ட பாடசாலைகள் சில உள்ளன என்றும் அந்தக் கட்டடங்களை பார்வையிட்ட பின்னர் அவற்றில் செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு இல்லத்துக்காக அமைக்கப்பட்ட கட்டடத்தை மறுவாழ்வு நிலையத்துக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

The post வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையத்தை உடன் ஆரம்பிக்க பணிப்பு appeared first on Oruvan.com.

ஆலய சுற்றாடல்களை புனித பிரதேசமாக அறிவித்து வர்த்தமானி வெளியிட வேண்டும் – வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை
ஆலயச் சுற்றாடலில் மதுபான கேளிக்கை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது எனவும் அதை புண்ணிய பிரதேசமாக வர்த்தமானி ஊடாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்ச் சைவ பேரவையினர் வடமாகாண ஆளுனரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப் பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின்போது பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட நல்லூர் ஆலயச் சுற்றாடலில் மதுபான கேளிக்கை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது எனவும் அதை சிவபுண்ணிய பிரதேசமாக மாநகர சபை வர்த்தமானி ஊடாக அறிவிப்பதற்கு ஏதுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையே ஏனைய உள்ளூராட்சி மன்றங்களும் பின்பற்றி தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள ஆலய நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதற்குரிய அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டும்.

நல்லூர் முன்றலில் அண்மையில் திறக்கப்பட்ட உணவகம் பன்னாட்டு நிறுவனம் என்ற அடிப்படையில் இலங்கையின் சட்டம் தொடர்பாக முழுமையாக அறிந்து வைத்திருப்பார்கள்.

அவர்கள் நல்லூரில் தமது நிறுவனத்தின் கிளையை எந்தவொரு அனுமதியையும் பெற்றுக்கொள்ளாது திறந்தமை திட்டமிட்ட நடவடிக்கையாகவே பார்க்கிறோம்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் அலுவலர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாகவும், அனுமதியற்ற வர்த்தக நிறுவனத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பிலும் விசாரணைக்குழு அமைத்து விசாரணை முன்னெடுக்க வேண்டும் என ஆளுனரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆலய சுற்றாடல்களை புனித பிரதேசமாக அறிவித்து வர்த்தமானி வெளியிட வேண்டும் – வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை appeared first on Oruvan.com.