Gold Price Archives - Oruvan.com

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும்போது உள்நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி இலங்கையில் தங்கத்தின் விலைசுமார் 3,000 ரூபா அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை 9,000 ரூபா அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 காரட் கொண்ட ஒரு கிராம் 51,200 ரூபாவிற்கு விற்பகை செய்யப்படுவதுடன், ஒரு பவுண் 409,600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

22 காரட் கொண்ட ஒரு கிராம் 46,900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு பவுண் 375,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதனிடையே, 21 காரட் கொண்ட ஒரு கிராம் 44,750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு பவுண் 358,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது
பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை தீவிரமடைந்து வரும் நிலையில், வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி காலை 7.55 மணி நிலவரப்படி, ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் நான்கு சதவீதம் உயர்ந்து 5,555.10 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த 26ஆம் திகதி முதல் முறையாக தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர்களை கடந்திருந்தது. இந்நிலையில், நான்கு நாட்களில் மீளவும் 500 டொலர் விலை அதிகரித்துள்ளது.

ஜனவரி 28 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அணு ஆயுதங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானை வலியுறுத்திய நிலையில், புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

2026ஆம் ஆண்டு இதுவரையில் தங்கத்தின் விலை 25 வீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 64 வீதம் அதிகரித்திருந்ததாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, கடந்த 26ஆம் திகதி 117.69 அமெரிக்க டொலர் என்ற சாதனை அளவை எட்டிய பின்னர், ஸ்பாட் வெள்ளி ஒரு அவுன்ஸ் விலை 116.61 அமெரிக்க டொலர்களில் நிலையாக பதிவாகியுள்ளது.

மேலும், ஒரு அவுன்ஸ் ஸ்பாட் பிளாட்டினம் விலை 0.4 வீதம் அதிகரித்து 2,918.80 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. பல்லேடியம் 0.3 சதவீதம் உயர்ந்து 2,079.32 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது appeared first on Oruvan.com.

தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது! வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் விலையும் அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.

தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,955.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது இதுவரை பதிவான அதிகூடிய தங்க விலையாகக் கருதப்படுகிறது.

தற்போதைய புவிசார் அரசியல் அமைதியின்மை மற்றும் அமெரிக்க டொலரின் பலவீனம் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலைக்கு ஏற்ப, வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 96.58 டொலர்களாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பிளாட்டினத்தின் விலையும் அதிகரித்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் எதிர்காலத்தில் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பும்,டொலரின் மதிப்பு 0.4 சதவீதம் குறையும் என்ற எதிர்பார்ப்பும் இதற்குக் முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னணி முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 5,400 அமெரிக்க டொலர் வரை உயரக்கூடும் என்று கணித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது! வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் விலையும் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

இலங்கையில் மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தில் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,120 டொலரை தாண்டியுள்ளதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் 8,000 ரூபா அதிகரித்துள்ளது என்று சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று காலை (11), கொழும்பில் உள்ள செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 காரட்” தங்கம் 7,000 ரூபா அதிகரித்து 300,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஒரு பவுண் “22 காரட்” தங்கம் 293,200 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் தற்போது விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமை 317,000 ரூபாவாக இருந்த “24 காரட்” தங்கத்தின் விலை இன்று 325,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post இலங்கையில் மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

இலங்கையில் தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 293,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 317,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு – செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தங்கச் சந்தையில் நேற்ற 22 கரட் தங்கம் ஒரு பவுண் 294,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுண் 318, 000 ரூபாவாகவும் பதவாகியிருந்தது.

இதேவேளை, உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது குறிப்பிடத்தக்க அளவில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,998 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

நேற்று நாள் தொடக்கத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,969 அமெரிக்க டொலர்களாகக் குறைந்த போதிலும், நாள் முடிவில் தங்கத்தின் விலை மீண்டும் 4,025 அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்தமை குறிப்பிடத்கதக்து.

The post இலங்கையில் தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி appeared first on Oruvan.com.

இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட சரிவு – பவுண் மூன்று லட்சம் ரூபாவிற்கு கீழ் குறைந்தது
கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் போது இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தங்க சந்தையில் இன்று (28) ஒரு பவுண்டு 24 காரட் தங்கத்தின் விலை 322,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, 22 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டு விலை 379,200 ரூபாவாகவும், 24 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டு விலை 410,000 ரூபாவாகவும் அதிகரித்திருந்தது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில், சமீபத்திய ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து உயரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நேற்று திங்கட்கிழமை காலை நிலவரப்படி, தங்கம் ஒரு அவுன்ஸ் 4,076 அமெரிக்க டொலர்களாகவும், வெள்ளி ஒரு அவுன்ஸ் 48.21 அமெரிக்க டொலர்களாகவும் வர்த்தகம் செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

The post இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட சரிவு – பவுண் மூன்று லட்சம் ரூபாவிற்கு கீழ் குறைந்தது appeared first on Oruvan.com.

இலங்கையில் தங்கம் விலை மேலும் சரிவு
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபா குறைந்துள்ளது, இன்று (23) மட்டும் தங்கத்தின் விலை 10,000 ரூபா குறைந்துள்ளது.

அதன்படி, இன்று (23) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 காரட்” தங்கத்தின் விலை 302,300 ஆக குறைந்துள்ளது.

இது கடந்த வெள்ளிக்கிழமை, 379,200 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை 410,000 ரூபாவாக இருந்த ஒரு பவுண் “24 காரட்” தங்கத்தின் விலை இன்று 330,000 ரூபாவாக குறைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post இலங்கையில் தங்கம் விலை மேலும் சரிவு appeared first on Oruvan.com.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவு
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில், உலகளவிலும் மற்றும் இலங்கையிலும் தங்கத்தின் விலைகள் கணிசமாகக் குறைந்தன.

கடந்த மே 12ஆம் திகதி உலகளாவிய தங்கத்தின் விலைகள் மூன்று வீதத்திற்கு அதிகமாகக் குறைந்தன, இது 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஒற்றை நாள் சரிவைக் குறிக்கிறது.

கட்டணங்களைக் குறைப்பதற்கான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான 90 நாள் ஒப்பந்தத்தால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வரிகள் 145 வீதத்தில் இருந்து 30 வீதமாகக் குறைக்கப்பட்டன, அதே நேரத்தில் சீனா அதன் கட்டணங்களை 125 வீதத்தில் இருந்து 10 வீதமாகக் குறைத்தது.

வர்த்தக பதட்டங்களைத் தளர்ந்ததை அடுத்து பாதுகாப்பான சொத்தாக தங்கத்திற்கான தேவையைக் குறைத்துள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகள் மற்றும் பிற முதலீடுகளுக்கு மாறியுள்ளனர்.

மே 14 நிலவரப்படி, ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 3,226 டொலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கையின் உள்நாட்டு தங்கச் சந்தையும் பின்பற்றியது.

கொழும்பு – புறக்கோட்டை தங்கச் சந்தையில், 22 காரட் தங்கத்தின் விலை இன்று 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது மே 10ஆம் திகதி . 246,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.

24 காரட் பவுனின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதே காலகட்டத்தில் 266,000 ரூபாவிலிருந்து 260,000 ரூபாவாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவு appeared first on Oruvan.com.

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு – விற்பனையில் சரிவு
தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தங்கள் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 24 காரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை 268,000 ரூபாவாகவும், 22 காரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை 248,000 ரூபாகாவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தங்கள் வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகைக்கடைகளின் வருமானம் குறைந்துள்ளதாகவும், சில உள்ளூர் முதலீட்டாளர்கள் தங்க பிஸ்கட்டுகளில் முதலீடு செய்துள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும் தொழிலதிபர்கள் கூறுகின்றனர்.

மேலும், அடுத்த மாதம் முதல் திருமணம் செய்து கொள்ள சுப முகூர்த்தங்கள் இருந்தாலும், திருமண விழாக்களுக்கு தங்க நகைகள் வாங்குவது கணிசமாகக் குறைந்துள்ளதாக தொழிலதிபர்கள் தெரிவித்தனர்.

The post இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு – விற்பனையில் சரிவு appeared first on Oruvan.com.

அமெரிக்காவின் வரி அதிகரிப்பு – வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளை கடுமையாக அதிகரித்ததன் காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

ட்ரம்ப் அனைத்து இறக்குமதிகளுக்கும் அடிப்படை 10 சதவீத வரியை அறிவித்துள்ளார். குறிப்பாக ஆசிய நாடுகள் மீது மிக அதிக வரிகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், உலகளாவிய பங்கு சந்தைகளில் பாரிய வீழ்ச்சி பதிவாகியிருந்ததுடன், தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதன்படி, புதன்கிழமை பிற்பகலுக்குள், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,118 டொலாக உயர்ந்தது, இது 0.3 வீத அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை முதல் முறையாக 3,000 டொலரை எட்டியது.

முதலீட்டாளர்களுக்கு தங்கம் ஒரு பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படுகிறது, மேலும் பொருளாதார உறுதியற்ற காலங்களில் இது பெரும்பாலும் தேவைப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி அதிகரிப்பு காரணமாக எண்ணெய் விலைகள் எதிர்மறையான பகுதிக்கு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரெண்ட் ஃபியூச்சர்ஸ் பீப்பாய் 74.95 டொலாகவும், WTI கச்சா எண்ணெய் 71.71 டொலராகவும் சரிந்துள்ளது.

இதனிடையே, அமெரிக்காவின் வரி அதிகரிப்பை தொடர்ந்து உலக நாடுகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான நாணயங்களின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post அமெரிக்காவின் வரி அதிகரிப்பு – வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு appeared first on Oruvan.com.