GMOA Archives - Oruvan.com

அரச வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02) காலை முதல் தீவிரப்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு சாதகமான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், இன்று முதல் பின்வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் இல்லாத மருந்து வகைகள் மற்றும் உபகரணங்களை வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு நோயாளர்களுக்குப் பரிந்துரைத்து துண்டுகளை வழங்குவதை நிறுத்துதல்.

வைத்தியசாலைகளில் மேற்கொள்ள முடியாத ஆய்வகப் பரிசோதனைகளை வெளியில் செய்துகொள்ளுமாறு நோயாளர்களுக்குப் பரிந்துரைப்பதைத் தடுத்தல்.

அரசியல் குழுக்களினால் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் தன்னார்வமாகப் பங்கேற்பதில் இருந்து விலகுதல்.

தேவையான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் இன்றி, வைத்தியசாலை கட்டமைப்பில் புதிதாகத் திறக்கப்படும் நோயாளர் விடுதிகள் மற்றும் அலகுகளுக்கு வைத்தியர்களை நியமிப்பதைத் தடுத்தல்.

நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைப் பேணத் தேவையான போதிய வசதிகள் மற்றும் உதவியாளர்கள் இன்றி நோயாளர்களைப் பரிசோதிப்பதில் இருந்து விலகுதல்.

நிபுணத்துவ வைத்தியர்கள் தாங்கள் நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையில் மாத்திரம் சேவையாற்றுவதுடன், நிபுணத்துவ வைத்தியர்கள் இல்லாத ஏனைய வைத்தியசாலைகளுக்குச் சென்று மேலதிக கடமைகளை ஆற்றுவதில் இருந்து விலகுதல்.

போன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி, தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 26 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, சுகாதார அமைச்சருக்கு தீர்வுகளை முன்வைக்க 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், அமைச்சின் தரப்பில் இருந்து சாதகமான பதில் எவையும் கிடைக்கவில்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கடந்த 31 ஆம் திகதி கூடிய சங்கத்தின் நிறைவேற்று குழு கூட்டத்தில், இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை தீவிரப்படுத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

The post அரச வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்! appeared first on Oruvan.com.

சுகாதார தொழிற்சங்கங்களுக்கு இடையே அவசர சந்திப்பு: 48 மணிநேரக் கெடுவால் முடங்கும் அபாயத்தில் வைத்தியசாலைகள்
இலங்கையின் சுகாதாரத்துறையில் நிலவிவரும் கடுமையான நெருக்கடிகள் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, நாட்டின் முக்கிய சுகாதார தொழிற்சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (29) கொழும்பிலுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைமையகத்தில் நடைபெற்றது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரச செவிலியர் சங்கம் மற்றும் குடும்ப சுகாதார சேவை சங்கம் உள்ளிட்ட பல பிரதான தொழிற்சங்கங்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றன.

சுகாதாரத்துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் சம்பள முரண்பாடுகள், மருந்து தட்டுப்பாடு மற்றும் ஏனைய நிர்வாகச் சிக்கல்களுக்கு ஒன்றிணைந்து தீர்வுகாண்பது குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

தனித்தனியாகப் போராடுவதை விட, ஒருமித்த குரலில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தங்களது கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க சுகாதார அமைச்சருக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வழங்கிய 48 மணிநேரக் கெடு நாளை மறுதினத்துடன் நிறைவடைகிறது.

இந்த காலக்கெடுவிற்குள் முறையான தீர்வு எட்டப்படாவிட்டால், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் மேலும் தீவிரப்படுத்தப்போவதாக அந்த சங்கம் எச்சரித்துள்ளது.

இது முழுமையான பணிப்புறக்கணிப்பாக மாறக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

வைத்தியர்களின் இந்த தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் இன்றும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

வெளிநோயாளி பிரிவு சிகிச்சைகள் மற்றும் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

The post சுகாதார தொழிற்சங்கங்களுக்கு இடையே அவசர சந்திப்பு: 48 மணிநேரக் கெடுவால் முடங்கும் அபாயத்தில் வைத்தியசாலைகள் appeared first on Oruvan.com.

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று (28) கூடியதுடன், இதன்போது மேலதிக நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கான முழுமையான அதிகாரம் நிறைவேற்றுச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லாத மருந்துகளை வெளியில் இருந்து கொள்வனவு செய்வதற்கான மருந்துச்சீட்டுகளை எழுதும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும், அரசியல் குழுக்களால் நடத்தப்படும் சுகாதார முகாம்களில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வைத்தியர்கள் போதுமான அளவு இல்லாத வைத்தியசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்படும் விடுதிகள் மற்றும் பிரிவுகளின் கட்டிடப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

The post அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் appeared first on Oruvan.com.

கிழக்கு மாகாணத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்
அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணப்படாததைக் கண்டித்து, இன்று காலை 08.00 மணி முதல் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மீண்டும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.

அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் மருத்துவப் பொறுப்பதிகாரியின் தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அந்த விசாரணை சுதந்திரமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரியை பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம் இதே கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், இடைநிறுத்தப்பட்ட அந்த காலப்பகுதிக்குள் சுகாதார அமைச்சு இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான தீர்வை வழங்கத் தவறியதன் காரணமாகவே, மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிட்டுள்ளதாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகும் இந்த போராட்டத்தினால் கிழக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவு (OPD) மற்றும் கிளினிக் சேவைகள் உள்ளிட்ட அன்றாடப் பணிகள் பாதிக்கப்படக்கூடும்.

எவ்வாறாயினும், நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் அனைத்து அவசர மற்றும் அத்தியாவசிய சிகிச்சை சேவைகள் (Emergency Services) தடையின்றித் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது

The post கிழக்கு மாகாணத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம் appeared first on Oruvan.com.

அரசாங்கத்திற்கு ஏழு நாள் கெடு
ஏழு நாட்களுக்குள் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு முழுவதும் பாரிய போராட்டத்தை நடத்துவோம் என்று அரச வைத்தியர்களின் அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

2026 வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் புறக்கணிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மனித வள நெருக்கடி, மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் நோயாளி பராமரிப்பு வசதிகள் இல்லாததால் இலவச சுகாதார அமைப்பு பாதிக்கும் அபாயத்தில் உள்ளது.

இது குறித்து, ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் மற்றும் நிதி அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026 வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார சேவையை வலுப்படுத்தவோ அல்லது வைத்தியர்களை தக்கவைத்துக் கொள்ளவோ ​​எந்த திட்டங்களும் இல்லை என்றும் வைத்தியர் பிரபாத் சுகததாச தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசாங்கம் ஒரு வாரத்திற்குள் தீர்வுகளை வழங்காவிட்டால், மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் போராட்டங்களைத் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும், மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், இலவச சுகாதார முறைமை வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும் ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசாங்கத்திற்கு ஏழு நாள் கெடு appeared first on Oruvan.com.

அவசர கூட்டத்தை கூட்டும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (07) நடைபெற உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் மருத்துவர்களின் இடமாற்றம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து விவாதிப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்று சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் வீரசூரிய தெரிவித்தார்.

சுகாதார நிர்வாகத்தால் மருத்துவர்களின் தன்னிச்சையான இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அம்பாறை மாவட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதுவரை அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கவனம் செலுத்தாததால், தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று முடிவு செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post அவசர கூட்டத்தை கூட்டும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் appeared first on Oruvan.com.

வடமத்திய மாகாணம் முழுவதும் பணிப்பகிஷ்கரிப்பு- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய

சந்தேக நபர் கைது செய்யப்படாவிட்டால், வடமத்திய மாகாணம் முழுவதும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட கூட்டம் இடம்பெற்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நாளை புதன்கிழமை காலை 08 மணிக்குள் கைது செய்யப்படாவிட்டால் மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவ ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தீவிரப்படுத்துவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது, ​​அவசர சேவைகள் தவிர்த்து, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய வரலாற்றில் ஒரு மருத்துவ ஒருவர் எதிர்கொள்ளும் மிகவும் தீவிரமான மற்றும் மோசமான சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும் என கூறிய அவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை இலங்கையின் மிகப்பெரிய வைத்தியசாலைகளில் ஒன்று என்பதையும் சுட்டிக்காட்டினார்.

The post வடமத்திய மாகாணம் முழுவதும் பணிப்பகிஷ்கரிப்பு-  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை appeared first on Oruvan.com.